மாநகராட்சி துப்புரவு ஊழியர் ரெயில் மோதி பலி

தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம் போலீசார் விசாரணை
மாநகராட்சி துப்புரவு ஊழியர் ரெயில் மோதி பலி
Published on

வேலூர்:

காட்பாடி கழிஞ்சூரை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 50).வேலூர் மாநகராட்சியில் துப்புரவு ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இவர் இன்று காலை கழிஞ்சூரில் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே நடந்து சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த ரெயில் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பாஸ்கரன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காட்பாடி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாஸ்கரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரெயில் தண்டவாள பகுதியில் பொதுமக்கள் எந்த காரணத்தை கொண்டும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com