search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mob"

    • டெல்லி திலக் நகர் பகுதியில் உள்ள கார் ஷோரூமில் கடந்த மே 7 ஆம் தேதி ரவுடி கும்பல் ஒன்று நடத்திய துப்பாக்கிச்சூடு பரபரப்பை ஏற்படுத்தியது.
    • கும்பலைச் சேர்ந்த அஜய் சிங்கோரா என்ற முக்கிய ரவுடி, டெல்லி புறநகர் பகுதியில் பதுங்கி இருப்பதாக நேற்று (மே 16) மாலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    டெல்லி திலக் நகர் பகுதியில் உள்ள கார் ஷோரூமில் கடந்த மே 7 ஆம் தேதி ரவுடி கும்பல் ஒன்று நடத்திய துப்பாக்கிச்சூடு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் படுகாயமடைந்தனர். கார் ஷோரூம் முற்றிலுமாக சேதமடைந்தது. துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் ஹிமான்சு பாகு என்ற ரவுடியின் கும்பலைச் சேர்த்தவர்கள் என்று தெரியவந்தது. அவர்கள் தங்களின் பெயரை ஒரு காகிதத்தில் எழுதி ததுப்பாகிச்சூடு நடத்திய ஷோரூமில் பகிரங்கமாக விட்டுச் சென்றுள்ளனர்.

    இதனையடுத்து குற்றவாளிகளை டெல்லி போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் அந்த கும்பலைச் சேர்ந்த அஜய் சிங்கோரா என்ற முக்கிய ரவுடி, டெல்லி புறநகர் பகுதியில் பதுங்கி இருப்பதாக நேற்று (மே 16) மாலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே அங்கு விரைந்த போலீசார் குற்றவாளியை சுற்றி வளைத்தனர். இந்த சம்பவத்தில் குற்றவாளிக்கும் போலீசாருக்கும் நடந்த மோதலில் அஜய் சிங்கோராவை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர்.

    இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் மற்றொரு கொலை வழக்கிலும் தேடப்பட்டு வந்த நிலையில் இந்த என்கவுன்டர் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அடுத்தகட்டமாக ரவுடி கும்பலின் தலைவன் ஹிமான்சு பாகுவை தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். டெல்லியை பயமுறுத்தி வந்த ரவுடி கும்பலைச் சேர்ந்த முக்கிய நபரை போலீசார் என்கவுன்டர் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ராஜேந்திரனுக்கு போன் செய்து தனது பாட்டிக்கு உடல் எடை 80 கிலோ இருப்பதாகவும், அதை குறைக்க சிகிச்சை தர வேண்டும் என கூறியுள்ளார்.
    • 3 மர்மநபர்கள், ராஜேந்திரனை தகாத வார்த்தையால் திட்டியதுடன், இரும்பு ராடால் தாக்கி காயப்படுத்தினர்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே பக்காளியூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (62). இவர் நியூட்ரிசன் வேலை செய்து வருகிறார். நேற்று காலை அடையாளம் தெரியாத நபர் ராஜேந்திரனுக்கு போன் செய்து தனது பாட்டிக்கு உடல் எடை 80 கிலோ இருப்பதாகவும், அதை குறைக்க சிகிச்சை தர வேண்டும் என கூறியுள்ளார். இதையடுத்து ராஜேந்திரன், மர்ம நபர் கூறிய ராயலூர் என்ற பகுதிக்கு சென்றுள்ளார்.

    அப்போது அங்கு வந்த 3 மர்மநபர்கள், ராஜேந்திரனை தகாத வார்த்தையால் திட்டியதுடன், இரும்பு ராடால் தாக்கி காயப்படுத்தினர். ராஜேந்திரன் வலியால் கூச்சலிடவே, அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    ராஜேந்திரன் சத்தம்கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சங்ககிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து ராஜேந்திரன் சங்ககிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, ராஜேந்திரனை தாக்கிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • சேலம் சின்னபுதூர் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவரை நாயை கிண்டல் செய்த விவகாரத்தில் வாலிபரை தாக்கினார்.
    • இது குறித்து சந்தோஷ்குமார் அளித்த புகாரின்பேரில் அழகாபுரம் போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    சேலம்:

    சேலம் சின்னபுதூர் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 27).

    இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நாயுடன் நடைப்பயிற்சி சென்றார். அப்போது அங்குள்ள டீக்கடையில் அமர்ந்திருந்த 5 பேர் 'இது பெண் நாய்' என கிண்டல் செய்தனர். இதனை சந்தோஷ்குமார் தட்டிக்கேட்டார்.

    இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென அந்த வாலிபர்கள், சந்தோஷ்குமாரை தாக்க முயன்றனர். அவர்களிடம் இருந்து ஓட்டம் பிடித்த சந்தோஷ்குமார் அந்த பகுதியில் உள்ள ஓட்டலுக்குள் நுழைந்தார்.

    அவரை துரத்தி சென்ற அந்த 5 பேரும் ஓட்டலுக்குள் புகுந்து அங்கிருந்த தோசை கரண்டியால் சந்தோஷ்குமாரை சரமாரியாக தாக்கினர். பின்னர் அங்கிருந்த ெபாதுமக்கள், அவர்களை விலக்கி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த சந்தோஷ்குமார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இது குறித்து சந்தோஷ்குமார் அளித்த புகாரின்பேரில் அழகாபுரம் போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    • சேலம் மாநகரத்தில் வெளி மாநிலங்களில் இருந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்காவை கடத்தி வந்து விற்பனை செய்தனர்.
    • இதையடுத்து குட்கா கடத்தலில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேரையும் நேற்று பெங்களூருவில் வைத்து தனிப்டை போலீசார் கைது செய்தனர்.

    சேலம்:

    சேலம் மாநகரத்தில் வெளி மாநிலங்களில் இருந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்காவை கடத்தி வந்து விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோதா உத்தரவிட்டுள்ளார்.

    அதைத் தொடர்ந்து துணை கமிஷனர் லாவண்யா மேற்பார்வையில் அன்னதானப்பட்டி சரக உதவி கமிஷனர் அசோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    பெங்களூருவில் இருந்து குட்காவை கடத்தி வந்து சேலத்தில் விற்பனை செய்தவர்கள் குறித்த தகவல் அறிந்து தனிப்படை போலீசாருக்கு கிடைத்தது.

    இதையடுத்து குட்கா கடத்தலில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பக்கா ராம்ஜி மகன் கீமா ராம் (வயது 28), தாபா ராம் மகன் ராஜேஷ் குமார் (25), ராஜாராம் மகன் ஜலராம் (38) ஆகிய 3 பேரையும் நேற்று பெங்களூருவில் வைத்து தனிப்டை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 2 கார்களை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரையும் சேலம் அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1000-க்கு போதை ஊசி மருந்துகள் விற்பனை செய்து வந்த 4 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
    பெங்களூர் மற்றும் வெளியூர்களில் இருந்து போதை ஊசி மருந்துகள் கோவைக்கு கொண்டு வரப்பட்டு கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காட்டூர் போலீசார் விசாரணை நடத்தி கடந்த ஏப்ரல் 23-ந் தேதி பெங்களூரில் இருந்து போதை ஊசி மருந்து அனுப்பும் அப்துல் ரகுமான்(24), மகேந்திரன்(27), அஜய்(24) ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    கும்பலின் முக்கிய புள்ளியான பெங்களூரை சேர்ந்த ஜாய் இமானுவேல்(28) என்பவரை தேடி வந்தனர். நேற்று அவரையும், அவரது கூட்டாளிகளான கோவை உக்கடத்தை சேர்ந்த முகமது சிஹாப் (22), ஜூல்பிகர் அலி(24), முகமது அனாஸ்(24) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

    இந்த கும்பல் பெங்களூர் உள்பட பல்வேறு இடங்களில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மயக்க மருந்துகளை திருடி, அதை குளுக்கோசில் கலந்து கோவை கொண்டு வந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்றது தெரிய வந்தது. ஒரு ஊசியை ரூ.100-க்கு வாங்கி மாணவர்களிடம் ரூ.300-ல் இருந்து ரூ.1000 வரை விற்றுள்ளனர்.

    இவர்கள் யார்-யாருக்கெல்லாம் போதை ஊசிகளை விற்பனை செய்தார்கள்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை ஜெயிலில் அடைத்தனர்.
    பீகாரில் சூனியக்காரி என்ற சந்தேகத்தில் 65 வயது பெண்ணை பொதுமக்கள் ஒன்றுதிரண்டு அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நவடா:

    பீகார் மாநிலம் நவடா மாவட்டம் ஹராலி கிராமத்தைச் சேர்ந்த பாச்சி தேவி (வயது 65) என்ற பெண் தன் வீட்டில் பல்வேறு பூஜைகள் செய்துள்ளார். 

    இந்நிலையில், பாச்சிதேவி சூனியம் வைப்பதாகவும் அதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் சிலருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக பாச்சி தேவியிடம் நேற்று இரவு பொதுமக்கள் கும்பலாகச் சென்று பேசியபோது பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த கும்பல் பாச்சி தேவியை சரமாரியாக அடித்து உதைத்துள்ளது. 

    இதில் பலத்த காயமடைந்த பாச்சி தேவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிசிச்சை பலனின்றி அவர் இறந்துபோனார். இந்த கொலை குறித்து பக்ரிபார்வா போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர். #tamilnews
    ×