search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ICC"

    • டி20 போட்டிகளில் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது.
    • இதில் 6-வது இடத்தில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் கிடுகிடுவென முன்னேறி 4-வது இடம்பிடித்தது.

    துபாய்:

    வெஸ்ட் இண்டீஸ்-தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இங்கிலாந்து-பாகிஸ்தான் இடையிலான 4 டி20 போட்டிகள் கொண்ட தொடர் முடிவடைந்துள்ளன.இதில் வெஸ்ட் இண்டீஸ் 3-0 என்ற கணக்கிலும், இங்கிலாந்து 2-0 என்ற கணக்கிலும் தொடரை கைப்பற்றின.

    இந்நிலையில், டி20 போட்டிகளில் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது. இதில் முதல் 3 இடங்களில் முறையே இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மாற்றமின்றி தொடருகின்றன.

    இதில் 6-வது இடத்தில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி கிடுகிடுவென முன்னேறி 4-வது இடம்பிடித்துள்ளது. நியூசிலாந்து மாற்றமின்றி 5-வது இடத்தில் தொடருகிறது. பாகிஸ்தான் ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 3-இடம் சரிந்து 7-வது இடத்திலும் உள்ளது. கடைசி 3 இடங்களில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் உள்ளன.

    • அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறுகிறது.
    • இந்திய அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டது.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விரைவில் துவங்குகிறது. டி20 உலகக் கோப்பை போட்டிகள் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற இருக்கிறது.

    உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்ள ஒவ்வொரு நாடும் தனது அணியை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. மேலும், உலகக் கோப்பையின் பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு இந்திய அணி வீரர்கள் அமெரிக்கா புறப்பட்டு சென்றது.

    முன்னதாக உலகக் கோப்பை தொடருக்காக இந்திய அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், புதிய ஜெர்சியுடன் இந்திய அணி வீரர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

    • டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது.
    • இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

    துபாய்:

    ஐ.சி.சி.யின் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த தொடருக்காக 15 பேர் அடங்கிய அணியை ஒவ்வொரு அணியும் அறிவித்து வருகின்றன.

    இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்களது அணியை அறிவித்துவிட்டன.

    இதற்கிடையே, டி20 உலகக் கோப்பை போட்டிக்கான தூதராக இந்தியாவின் யுவராஜ் சிங், வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெயில், ஜமைக்கா வீரர் உசைன் போல்ட் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான போட்டித் தூதராக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடியை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

    • ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.
    • இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றுள்ள சீனியர் வீரர் ஹசன் அலியை இந்த தொடரில் இருந்து விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் இத்தொடருக்காக அனைத்து அணிகளும் திவிரமாக தயாரகும் வகையில் மற்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர்களில் விளையாடி வருகிறது.

    அந்தவகையில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையே 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெறவுள்ளது.

    இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி பாபர் அசாம் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் பக்கார் ஜமான், இப்டிகார் அகமது, இமாத் வாசிம், ஷதாப் கான், முகமது ரிஸ்வான், ஹசன் அலி, ஹாரிஸ் ராப், முகமது அமீர், நசீம் ஷா, ஷாகீன் அப்ரிடி போன்ற சீனியர் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றுள்ள சீனியர் வீரர் ஹசன் அலியை இந்த தொடரில் இருந்து விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கவுண்டி கிரிக்கெட்டில் வார்விக்ஷயர் அணிக்காக ஹசன் அலி விளையாட பாகிஸ்தான் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இதுகுறித்து பிசிபி வெளியிட்டுள்ள அறிக்கையில், கவுண்டி கிரிக்கெட்டில் ஹசன் அலி தனது கடமைகளை தொடர அனுமதிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆரம்பத்தில், ஹாரிஸ் ரவுஃபின் காயம் கரணமாக ஹசன் அலி பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்தார்" என்று தெரிவித்துள்ளது. 

    • பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் முதலிடத்தில் நீடிக்கிறார்.
    • ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா 7-வது இடம் பிடித்துள்ளார்.

    துபாய்:

    டி20 கிரிக்கெட் போட்டியின் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது.

    இந்நிலையில், பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 861 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறார்.

    இங்கிலாந்து வீரர் பில் சால்ட் 2-வது இடத்திலும், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் (781 புள்ளி) 3-வது இடத்திலும் உள்ளனர்.

    மற்றொரு இந்திய வீரர் ஜெய்ஸ்வால் 714 புள்ளிகள் பெற்று 6-வது இடம் பிடித்துள்ளார்.

    பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் 726 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இலங்கை வீரர் ஹசரங்கா 2-வது இடமும், வெஸ்ட்இண்டீஸ் வீரர் அகில் ஹூசைன் 3-வது இடமும் பிடித்துள்ளனர். இந்திய வீரர்கள் அக்ஷர் பட்டேல் 4-வது இடமும், ரவி பிஷ்னோய் 5-வது இடமும் பிடித்துள்ளனர்.

    ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் இலங்கை வீரர் ஹசரங்கா மற்றும் வங்காளதேச வீரர் ஷகிப் உல்-ஹசன் ஆகியோர் 228 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர். ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி 3-வது இடத்தில் உள்ளார். இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா 7-வது இடம் பிடித்துள்ளார்.

    • டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் துவங்குகிறது.
    • அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறுகின்றன.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 2 ஆம் தேதி துவங்குகிறது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் 2024 டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

    மேலும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு ஆயத்தமாகும் வகையில், அணிகள் ஒவ்வொன்றாக அமெரிக்கா புறப்பட்டன. சில தினங்களுக்கு முன்பு இலங்கை அணி அமெரிக்கா புறப்பட்டு சென்றது. அந்த வரிசையில், தற்போது ஆசிய நாடுகளில் ஒன்றான வங்காளதேசம் கிரிக்கெட் அணி அமெரிக்கா புறப்பட்டது.

    அமெரிக்கா புறப்படும் முன் வங்காளதேசம் அணி வீரர்கள் அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் நஜ்முல் ஹாசனுடன் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

    • ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர், வீராங்கனையை தேர்வுசெய்து ஐ.சி.சி கவுரவித்து வருகிறது.
    • சிறந்த வீராங்கனை விருது வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹேலி மேத்யூசுக்கு வழங்கப்பட்டது.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி கவுரவித்து வருகிறது. அதன்படி ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்திருந்தது.

    ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதிற்கான பரிந்துரை பெயர் பட்டியலில் நமீபிய வீரரான எராஸ்மஸ், யு.ஏ.இ கேப்டனான முகமது வாசிம், பாகிஸ்தான் முன்னாள் கேப்டனான ஷாஹீன் அப்ரிடி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

    இந்நிலையில் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை விருது வென்றவர்களை ஐ.சி.சி அறிவித்துள்ளது.

    அதன்படி ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது யு.ஏ.இ கேப்டன் முகமது வாசிமுக்கும், சிறந்த வீராங்கனை விருது வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹேலி மேத்யூசுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

    • டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் துவங்குகிறது.
    • அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது.

    டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த மாத துவக்கத்தில் நடைபெற இருக்கிறது. ஜூன் 2 ஆம் தேதி துவங்கும் டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகள் மோதுகின்றன.

    உலகக் கோப்பை தொடருக்காக ஒவ்வொரு அணியும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. இந்த நிலையில், உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில், இலங்கை கிரிக்கெட் அணி அமெரிக்காவின் நியூ யார்க் நகருக்கு புறப்பட்டது.

    இலங்கை அணி அமெரிக்கா புறப்பட்டதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. 

    • வீடியோ வடிவில் ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது.
    • உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா.

    டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த மாத துவக்கத்தில் நடைபெற இருக்கிறது. ஜூன் மாதம் முதல் வாரத்தில் துவங்கும் டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற இருக்கிறது.

    டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் புதிய ஜெர்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. வீடியோ வடிவில் ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் புதிய ஜெர்சி குறித்து ரசிகர்கள் கலவையான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

     


    இந்த நிலையில், இந்திய அணியின் புதிய ஜெர்சி அறிமுக விழா சமீபத்தில் நடைபெற்றுள்ளது. பி.சி.சி.ஐ. தலைவர் ஜெய் ஷா, இந்திய டி20 அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இந்திய அணியின் ஸ்பான்சர் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். இது தொடர்பான வீடியோவை பி.சி.சி.ஐ. தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.



    • அனுபவ வீரரான ஏஞ்சலோ மேத்யூஸிற்கும் இலங்கை அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • ரிஸர்வ் வீரர்கள் பட்டியலில் விஜயகாந்த் வியாஸ்காந்த் இடம் பெற்றுள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ந் தேதி தொடங்குகிறது. இத்தொடருக்கு தயாராகும் வகையில் 20 அணிகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன.

    இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்ததந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இலங்கை அணியை இன்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது,

    அதன்படி 15 பேர் அடங்கிய இந்த அணியின் கேப்டனாக ஹசரங்கா நியமிக்கப்பட்டுள்ளார். சரித் அசலங்கா துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளர். மேலும் அனுபவ வீரரான ஏஞ்சலோ மேத்யூஸிற்கும் இலங்கை அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இலங்கை அணிக்காக 6-வது முறையாக டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடவுள்ளார்.

     

    டி20 உலகக்கோப்பை தொடருக்கான இலங்கை அணி:

    வனிந்து ஹசரங்க (கேப்டன்), சரித் அசலங்கா, குசல் மெண்டிஸ், பதும் நிஷங்கா, கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரமா, ஏஞ்சலோ மேத்யூஸ், தசுன் ஷனகா, தனஞ்செயா டி சில்வா, மஹீஸ் தீக்ஷன, துனித் வெல்லலாகே, துஷ்மந்த சமீர, நுவன் துஷார, மதீஷா பதிரானா, மற்றும் தில்ஷன் மதுஷங்க.

    ரிஸர்வ் வீரர்கள்: அஷித ஃபெர்னாண்டோ, விஜயகாந்த் வியாஸ்காந்த், பானுக ராஜபக்ஷ, ஜனித் லியானகே.

     

    • 9-வது ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் வங்காளதேசத்தில் நடைபெற உள்ளது.
    • இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன.

    துபாய்:

    9-வது ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் 3-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை வங்காளதேசத்தில் நடைபெற உள்ளது.

    இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 2 அணிகள் தகுதி சுற்று அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன.

    இந்நிலையில் இந்த தொடருக்கான குழுக்கள் மற்றும் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளன. இந்த தொடரில் பங்கேற்க உள்ள அணிகள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவுகளில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் சுற்றில் மோதும். அதன் முடிவில் அந்த பிரிவுகளில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும். இறுதிப்போட்டி அக்டோபர் 20-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.

    குரூப் ஏ : ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தகுதி சுற்று அணி

    குரூப் பி: தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், தகுதி சுற்று அணி 

    • பாகிஸ்தான் சென்று இந்திய அணி கிரிக்கெட் விளையாடாது என பிசிசிஐ அறிவிப்பு.
    • அடுத்த வருடம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது. 2022-ம் ஆண்டில் இருந்து பாகிஸ்தானில் நடைபெறும் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க மாட்டோம் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. 2023-ம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற இருந்தது. இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவித்ததால் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் போட்டிகள் நடத்தப்பட்டன.

    அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இந்தியா விளையாட மறுப்பு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் மற்றும் வெளிநாடுகளிலும் போட்டி நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் ஐசிசி தொடர்களை புறக்கணித்தால் அது பின் விளைவை ஏற்படுத்தும் என இந்திய அணிக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக ரஷித் லத்தீப் கூறியதாவது:-

    இரு நாடுகளுக்கு இடையிலான தொடரை நீங்கள் மறுக்க முடியும். ஐசிசி தொடர்களை மறுப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். ஐசிசி திட்டத்தை வெளியிடும்போது, அவர்கள் எங்கே சென்று விளையாட வேண்டும் என்பது அணிகளுக்கு தெரியும். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு சென்று விளையாட வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு தெரிந்திருந்தது. அதன் அடிப்படையில்தன் கிரிக்கெட் ஒப்பந்தத்தில் கிரிக்கெட் போர்டுகள் கையெழுத்திடுகின்றன.

    1996 உலகக் கோப்பை தொடரின்போது ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இலங்கை சென்று விளையாட மறுத்தது. இதனால் போட்டிகளில் விளையாடாமல் காலிறுதிக்கு முன்னேறியது. அதோடு உலகக் கோப்பையையும் வென்றது. இந்தியா பாகிஸ்தான் வந்து விளையாட மறுப்பு தெரிவித்தால் அது பிசிசிஐக்கு பின் விளைவை ஏற்படுத்தும்.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்த பாகிஸ்தான் கராச்சி, ராவல்பிண்டி, லாகூர் மைதானங்களை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தேர்வு செய்துள்ளது. இந்திய அணிகளின் ஆட்டங்களை ஒரே மைதானத்தில் நடத்த ஐசிசி-க்கு பரிந்துரைத்துள்ளது.

    ×