search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிபிசி"

    • வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் உள்பட முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளோம்.
    • வருவாயை கணக்கிடுவதில் விதிமீறல் நடைபெற்றுள்ளது

    புதுடெல்லி:

    கடந்த 14-ந்தேதி டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் உள்ள பி.பி.சி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

    பி.பி.சி. அலுவலகங்களில் வருமான வரித்துறையினரின் சோதனை நேற்று 3-வது நாளாக தொடர்ந்தது. இந்த நிலையில் பி.பி.சி அலுவலகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு தொடர்பாக வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.

    கணக்கில் காட்டிய வருவாயும், பிபிசி நிறுவனத்தின் செயல்பாடுகளும் முரணாக உள்ளதாக அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.

    வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் உள்பட முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாகவும் வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

    டிவி, டிஜிட்டல், ரேடியோ என பிபிசி செய்திகள் மூலம் வரும் வருவாயை கணக்கிடுவதில் விதிமீறல் நடைபெற்றுள்ளது என்றும் ஆய்வின் போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.

    • பி.பி.சி. அலுவலகங்களில் நடந்த சோதனைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
    • இந்த ஆய்வுக்கு முழு ஒத்துழைப்பை அளித்து வருகிறோம் என பி.பி.சி. தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    லண்டனை மையமாகக் கொண்ட பி.பி.சி. நிறுவனம் குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த கலவரம் தொடர்பாக 2 ஆவணப் படங்களை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. குஜராத் கலவரத்தின்போது நரேந்திர மோடி முதல் மந்திரியாக இருந்தார். இந்த பின்னணியில் ஆவணப்படம் வெளியாகி இருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

    மத்திய அரசு இந்த ஆவணப் படத்துக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது.

    இதற்கிடையே டெல்லி, மும்பையில் உள்ள பி.பி.சி. அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினார்கள். வரி ஏய்ப்பு புகார் எதிரொலியாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    காலை 11 மணிக்கு தொடங்கிய சோதனை நள்ளிரவு வரை நடந்தது. நேற்று 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தின. இந்த சோதனையின்போது அதிகாரிகள் செல்போன்கள், லேப்டாப்களை பறிமுதல் செய்தனர். 2012-ம் ஆண்டின் வரவு-செலவு கணக்குகள் அனைத்தையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    பி.பி.சி. அலுவலகங்களில் வருமானவரி சோதனைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    இந்நிலையில், தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். கடந்த 60 மணி நேர ஆய்வு பணி இன்று இரவு 10:45 மணிக்கு நிறைவடைந்தது. நாளையும் சோதனை தொடரும் என கூறப்படுகிறது. இந்த ஆய்வுக்கு முழு ஒத்துழைப்பை அளித்து வருகிறோம் என பி.பி.சி. தெரிவித்துள்ளது.

    • வருமான வரித்துறையின் இந்த ஆய்வுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாக பி.பி.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    • பி.பி.சி. அலுவலகங்களில் வருமானவரி சோதனைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    லண்டனை மையமாக கொண்ட பி.பி.சி. நிறுவனம் குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடந்த கலவரம் தொடர்பாக 2 ஆவண படங்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. குஜராத் கலவரத்தின்போது நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்தார்.

    இந்த பின்னணியில் ஆவணப்படம் வெளியாகி இருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. மத்திய அரசு இந்த ஆவண படத்துக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது.

    இந்தநிலையில் டெல்லி, மும்பையில் உள்ள பி.பி.சி. அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். வரி ஏய்ப்பு புகார் எதிரொலியாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    காலை 11 மணிக்கு தொடங்கிய சோதனை நள்ளிரவு வரை நடந்தது. இன்று 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    இந்த சோதனையின்போது அதிகாரிகள் செல்போன்கள், லேப்டாப்களை பறிமுதல் செய்தனர். 2012ம் ஆண்டின் வரவு- செலவு கணக்குகள் அனைத்தையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    வருமான வரித்துறையின் இந்த ஆய்வுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாக பி.பி.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சோதனை காரணமாக ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்யும்படி பி.பி.சி. நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. அதிகாரிகளின் கேள்விகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்கு மாறும் கேட்டுக்கொண்டு உள்ளது.

    பி.பி.சி. அலுவலகங்களில் வருமானவரி சோதனைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    • பிரதமர் மோடி சர்வாதிகாரத்தின் உச்சத்தை எட்டியிருப்பதை காட்டுவதாக ஆம் ஆத்மி கட்சி விளாசல்
    • காங்கிரஸ் ஏன் எப்போதும் தேசவிரோத சக்திகளுடன் நிற்கிறது? என பாஜக செய்தித் தொடர்பாளர் கேள்வி

    புதுடெல்லி:

    டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பி.பி.சி. ஊடக அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தினார்கள். பிரதமர் மோடி குறித்து பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

    'மோடி அரசின் கீழ் பத்திரிகை சுதந்திரம் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இது விமர்சன குரல்களை நெரிக்கும் வெட்கக்கேடான பழிவாங்கும் நடவடிக்கை ஆகும். எதிர்க்கட்சிகளையும் ஊடகங்களையும் தாக்குவதற்கு மத்திய நிறுவனங்களை பயன்படுத்தினால் எந்த ஜனநாயகமும் வாழ முடியாது. இதை மக்கள் எதிர்ப்பார்கள்' என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி சர்வாதிகாரத்தின் உச்சத்தை எட்டியிருப்பதை வருமான வரித்துறை நடவடிக்கைகள் காட்டுவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது.

    "முதலில் பிபிசி ஆவணப்படங்களை தடை செய்தார்கள். பின்னர், அதானி தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை இல்லை. இப்போது பிபிசி அலுவலகங்களில் வருமான வரி சோதனைகள்... இந்தியா: ஜனநாயகத்தின் தாய்?" என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி விமர்சித்துள்ளார்.

    எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் பாஜக மறுத்ததுடன், பிபிசி நிறுவனம் ஊழல் நிறுவனம் என்றும் இந்தியாவிற்கு எதிராக விஷத்தை பரப்பியதாகவும் குற்றம் சாட்டியது.

    பாஜக செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறியதாவது:-

    இந்தியாவில் எந்த ஒரு நிறுவனம் செயல்பட்டாலும், அது ஊடகங்களுடனோ அல்லது பிற பணிகளுடனோ தொடர்புடையதாக இருந்தாலும், அது உள்ளூர் சட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டும்.

    பிபிசி நிறுவனமானது இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட கருப்பு வரலாற்றை கொண்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி பிபிசிக்கு தடை விதித்ததை காங்கிரசார் நினைவில் கொள்ள வேண்டும்.

    அவர்களால் ஏன் காத்திருக்க முடியவில்லை? காங்கிரஸ் ஏன் எப்போதும் தேசவிரோத சக்திகளுடன் நிற்கிறது? இந்த வருமான வரி சோதனையானது வழக்கமான நடவடிக்கைதான். அந்த நிறுவனம் பதிலளிக்காததைத் தொடர்ந்து முன்னதாகவே நோட்டீஸ் அனுப்பப்பட்டது. வருமான வரி சோதனையானது சட்டத்திற்கு உட்பட்டே நடக்கிறது. எதிர்க்கட்சிகள் இதை அரசியலாக்கக் கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ஆய்வு நடத்தி வருகின்றனர்.
    • பிரதமர் மோடி குறித்து இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில் சோதனை.

    'இந்தியா மோடி மீதான கேள்வி' என்ற பி.பி.சி. ஆவணப்படம் அரசியல் அரங்கில் முக்கிய கவனத்தை பெற்றுள்ளது.

    குஜராத் கலவரம், சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்து பேசப்பட்டுள்ள இந்த ஆவண வீடியோ மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த ஆவணப்படத்தின் யூ டியூப் வீடியோ மற்றும் அதன் இணைப்புகளை கொண்ட டுவிட்டர் பகுதிகளை மத்திய அரசு முடக்கி இருந்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து இருந்தன.

    பி.பி.சி. ஆவணப் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் டெல்லியில் உள்ள பி.பி.சி. ஊடக அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அலுவலகத்துக்குள் சென்ற அதிகாரிகள் முதலில் ஊழியர்களின் செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

    வருவாய் தொடர்பான ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. அலுவலகத்தில் இருந்த டிஜிட்டல் ஆவணங்களையும் அவர்கள் ஆய்வு செய்து சேகரித்ததாகவும் தெரிகிறது.

    • ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிடவும் மத்திய அரசு கடந்த மாதம் 21-ம் தேதி தடை விதித்தது.
    • இந்தியாவில் தடையை மீறி பல அமைப்புகள் இந்த ஆவணப்படத்தை சட்டவிரோதமாக வெளியிட்டு வருகின்றன.

    குஜராத்தில் 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து மதக்கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கலவரம் நடைபெற்றபோது குஜராத்தின் முதலமைச்சராக நரேந்திரமோடி செயல்பட்டு வந்தார்.

    அதன் பின்னர் நரேந்திரமோடி இந்தியாவின் பிரதமரானார். இதனிடையே, குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி ஆவணப்படம் எடுத்துள்ளது. இந்தியா: மோடி கேள்விகள் என்ற தலைப்பில் 2 பகுதிகளாக பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட அந்த ஆவணப்படத்தின் முதல் பகுதியில் குஜராத் வன்முறைக்கு நேரடி பொறுப்பு அப்போதைய முதலமைச்சரும் இப்போதைய பிரதமருமான நரேந்திர மோடி என்று குறிப்பிட்டுள்ளது.

    மேலும், பிபிசி ஆவணப்படத்தின் 2-ம் பகுதியில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து ரத்து, டெல்லி வன்முறை, குடியுரிமை திருத்தச்சட்டம் உள்பட மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை விமர்சனம் செய்துள்ளது.

    இந்த ஆவணப்படம் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்திற்காக உருவாக்கப்பட்டதாகவும், காலனி ஆதிக்க மனப்பான்மையை காட்டுவதாகவும் பிபிசி ஆவணப்படத்திற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

    தொடர்ந்து இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிடவும் மத்திய அரசு கடந்த மாதம் 21-ம் தேதி தடை விதித்தது. இங்கிலாந்து உள்பட பல்வேறு வெளிநாடுகளில் பிபிசி இந்த ஆவணப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் இந்தியாவில் தடையை மீறி பல அமைப்புகள் இந்த ஆவணப்படத்தை சட்டவிரோதமாக வெளியிட்டு வருகின்றன.

    டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம், டெல்லி அம்பேத்கார் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு பல்கலைக்கழங்களில் தடையை மீறி பிரதமர் மோடி குறித்த பிபிசியின் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. தடையை மீறி பல்கலைக்கழங்களில் ஒளிபரப்பப்படும் பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை திரையிடுவதில் இருந்து தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    மேலும், இந்தியா: மோடி கேள்விகள் என்ற இந்த பிபிசியின் ஆவணப்படம் இந்தியாவில் சமூகவலைதளங்கள் மூலம் பகிர்வதை தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூகவலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதனிடையே, குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி குறித்து ஆவணப்படம் எடுத்த இங்கிலாந்தின் பிபிசி செய்தி நிறுவனம் இந்தியாவில் செயல்பட தடை செய்ய வேண்டுமெனவும், இந்த ஆவணப்படத்திற்கு பின்னால் சதி உள்ளதா? என கண்டறிய என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென இந்து சேனா என்ற அமைப்பின் தலைவர் விஷ்ணு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்தியாவில் பிபிசி செய்தி நிறுவனத்திற்கு தடை விதிக்கவேண்டுமென தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது. ஒரு ஆவணப்படம் நாட்டை எப்படி பாதிக்கும்? என்று கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட்டு மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்துவைத்தது.

    ×