என் மலர்

  நீங்கள் தேடியது "IT Raids"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேர்தல் நேரத்தில் வருமானவரி சோதனை நடத்துவது அதிகார துஷ்பிரயோகம் என்று தி.மு.க பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார். #LoksabhaElections2019 #VellorePolls #DuraiMurugan
  வேலூர்:

  காட்பாடியில் டான் போஸ்கோ பள்ளி வாக்கு சாவடியில் தி.மு.க பொருளாளர் துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த் ஆகியோர் வாக்களித்தனர். அப்போது துரைமுருகன் கூறியதாவது:-

  தேர்தல் நேரத்தில் வருமானவரி சோதனை நடத்துவது அதிகார துஷ்பிரயோகம். நடுநிலையோடு செயல்படுகின்ற சி.பி.ஐ, வருமானவரித்துறை ஆகியவற்றை பிரதமர் மற்றும் அவருக்கு கீழ் இருப்பவர்கள் இயக்க கூடாது.

  இதுவரையில் தேர்தல் கட்டங்களில் எதிர் கட்சிகள் மீது வருமானவரித்துறையை கட்டவிழ்த்துவிட்டு ஏவியது கிடையாது. இந்தியாவில் இதுவே முதல் முறை. நிர்வாகம் நீதிமன்றம், சட்டமன்றம் தனியாக இயங்க வேண்டும் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் நோக்கம்.

  தன்னிச்சையாக செயல்பட்டு நிர்வாகத்தை கையில் எடுத்து கொண்டு ஆளும் கட்சிக்கு எதிராக செயல்படுவது சர்வாதிகார போக்கின் முதற்கட்டம். இது தவிர்க்கப்பட வேண்டும். வாக்குபதிவு சமயத்தில் கூட வருமானவரி சோதனை நடைபெறுகிறது. இது ஜனநாயக நாடா என்ற கேள்வி எழுந்துள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார். #LoksabhaElections2019 #VellorePolls #DuraiMurugan
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வாழப்பாடி அருகே அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் வீடுகளில் அடுத்தடுத்து சோதனை நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
  வாழப்பாடி:

  வாழப்பாடி அடுத்த சிங்கிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வீரமுத்து(50). கட்டிட ஒப்பந்ததாரரான இவர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வாழப்பாடி ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளராக உள்ளார். இவரது வீட்டில் பணத்தை பதுக்கி வைத்து வாக்காளர்களுக்கு கொடுப்பதாக தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றுள்ளது.

  இதனையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை வீரமுத்து வீட்டிற்கு அடுத்தடுத்து சென்ற பறக்கும் படை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பணம், பொருள் மற்றும் ஆவணங்கள் கிடைக்காததால் திரும்பிச் சென்றனர்.

  இதே கிராமத்தை சேர்ந்தவர் விஜயன். அமமுக. எம்.ஜி.ஆர். மன்ற சேலம் மாவட்ட இணைச் செயலாளராக உள்ளார். இவரது வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றுள்ளது. இதனையடுத்து, நேற்று செவ்வாய்க்கிழமை விஜயன் வீட்டிற்கு சென்ற தேர்தல் பணிக்கான சிறப்பு வருமான வரி அலுவலர்கள், வீடு, மாட்டுக் கொட்டகை, டிராக்டர் செட், வைக்கோல் குவியல் உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

  இவரது வீட்டிலும் பணம், பொருள், ஆவணங்கள் ஏதும் கிடைக்காததால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். ஒரு கிராமத்திலுள்ள அமமுக கட்சி நிர்வாகிகள் இருவரை மட்டும் குறிவைத்து, தொடர்ந்து புகார் தெரிவித்து, அதிகாரிகளை அலைகழிப்புக்குள்ளாகி வருபவர்கள் குறித்து உளவுத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எதிர்க்கட்சி தலைவர்களை பற்றி மட்டுமே வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு எப்படி துப்பு கிடைக்கிறது? என ப.சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார். #ITRaids #Kanimozhi #PChidambaram
  சென்னை:

  கனிமொழி வீட்டில் வருமான வரி சோதனை நடத்தியதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

  கனிமொழியின் இருப்பிடத்தில் வருமான வரி சோதனை, எதுவும் கிடைக்கவில்லை என்பது செய்தி. அது எப்படி, எதிர்க்கட்சித் தலைவர்களை பற்றி மட்டுமே ‘துப்பு’ கிடைக்கிறது?


  2019 தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலின் அடையாளமே வருமான வரித்துறையின் ஏதேச்சதிகார பாரபட்சமான நடவடிக்கைகளே.

  வருமானவரித் துறை கார்த்தி சிதம்பரத்தின் மீது கொடுத்த புகார் சட்ட விரோதமானது, செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த வழக்கில் வருமான வரித்துறை மேல்முறையீடு செய்து இருக்கிறது. அவ்வளவு தான்.

  இந்த மேல்முறையீட்டில் கார்த்தியின் வழக்கறிஞர்கள் பதில் சொல்வார்கள்.

  இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார். #ITRaids #Kanimozhi #PChidambaram
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள அமமுக ஒன்றிய அலுவலகத்தில் நேற்று இரவு முதல் 9 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனை குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். #ITRaids #LokSabhaElections2019 #Andipatti
  ஆண்டிப்பட்டி:

  ஆண்டிப்பட்டியில் உள்ள வணிக வளாகத்தின் கீழே செயல்படும் அமமுக அலுவலகத்தில் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய 9 மணி நேரம் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், ஆண்டிப்பட்டி சட்டமன்ற இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 1.48 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

  மொத்தம்  94 பண்டல்கள் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த பண்டல்களில் வாக்காளர் பெயர் பட்டியல், வார்டு எண்ணுடன் இருந்தது. அத்துடன் ஒரு தபால் வாக்குச்சீட்டும் கைப்பற்றப்பட்டது. அதில், அமமுக வேட்பாளருக்கு வாக்களிக்கப்பட்டிருந்தது.  ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக மொத்தம் 2 கோடி ரூபாய் பணம் கொண்டு வந்துள்ளனர்.  வருமான வரி சோதனையின்போது, போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் சிலர் பணத்துடன் தப்பி ஓடிவிட்டனர். #ITRaids #LokSabhaElections2019 #Andipatti
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #LokSabhaElections2019 #Vellore
  புதுடெல்லி:

  வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பாக அக்கட்சியின் பொருளாளர் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். துரை முருகனின் வீட்டில் கடந்த மார்ச் 30-ம்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் ரூ. 10.5 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. அடுத்த 2 நாட்களுக்கு பின்னர் மொத்தம் ரூ. 11.53 கோடி பணம் வேலூரில் உள்ள துரை முருகனுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

  இதன் தொடர்ச்சியாக, ஏப்ரல் 10 ஆம் தேதி, வருமான வரித்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில், மாவட்ட காவல்துறை, கதிர் ஆனந்த் மற்றும் இரண்டு திமுக பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது.  மேலும் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதால், வேலூர் மக்களவைத் தொகுதி மற்றும் அந்த மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலை நிறுத்தி வைக்கும்படி தமிழக தேர்தல் ஆணையம், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் வேலூர் மாவட்டத்திற்கு மட்டும் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் சார்பாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #LokSabhaElections2019 #Vellore
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். #LokSabhaElections2019 #ITRaids
  சென்னை:

  தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடாவைத் தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனைகளில் பலகோடி ரூபாய் பணம் சிக்கி உள்ளது. இதேபோல் வருமான வரித்துறையினரும் சோதனை நடத்தி, கோடிக்கணக்கில் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.  இந்நிலையில், சென்னை, நெல்லை மற்றும் நாமக்கல் உள்டபட 18 இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை மற்றும் நாமக்கல்லில் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான 7 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக, கணக்கில் வராத பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. #LokSabhaElections2019 #ITRaids
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து, வருமான வரித்துறை சோதனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மனு அளித்தார். #MKStalin #Governor #ITRaid
  சென்னை:

  தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் சமீபகாலமாக தொடர்ந்து நடைபெறும் வருமான வரித்துறை சோதனைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மனு அளித்தார். அவருடன், துரைமுருகன், ஐ.பெரியசாமி, பொன்முடி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

  இந்த சந்திப்புக்குப் பின்னர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

  தமிழகத்தில் நடைபெற்று வரும் வருமானவரி சோதனை குறித்து, நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் கோரிக்கை வைத்தேன். நெடுஞ்சாலைத்துறை டெண்டர் குறித்து விசாரிக்க வேண்டும்; சிபிஐ விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தோம்.  நாங்கள் அளித்த கோரிக்கை மனுவை மத்திய உள்துறைக்கு அனுப்புவதாக ஆளுநர் உறுதி அளித்தார். ஆளுநர் நடவடிக்கை எடுக்கத் தவறினால், நீதிமன்றத்தை நாடுவோம்.

  இவ்வாறு அவர் கூறினார். #MKStalin #Governor #ITRaid

  ×