search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை அணி"

    • தனஞ்சய டி சில்வா தேசிய அணியில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
    • இதுவரை 51 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி பத்து சதங்களையும், 13 அரைசதங்களையும் அடித்துள்ளார்.

    ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் சுற்றுப்பயணங்களுக்கு முன்னதாக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு வெவ்வேறு கேப்டன்களை இலங்கை கிரிக்கெட் தலைமை தேர்வாளர் உபுல் தரங்கா அறிவித்துள்ளார். 32 வயதான பேட்டிங் ஆல்ரவுண்டர் தனஞ்சய டி சில்வா டெஸ்ட் கேப்டனாகவும், 28 வயதான குசல் மெண்டிஸ், ஒருநாள் கிரிக்கெட் அணியை தலைமை தாங்க நியமிக்கப்பட்டனர். 26 வயதான வனிது ஹசரங்க, டி20 அணியை வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் உபுல் தரங்கா அறிவித்தபடி, தனஞ்சய டி சில்வா இலங்கை டெஸ்ட் அணிக்கு பொறுப்பேற்க உள்ளார். அவர் டெஸ்ட் கேப்டனாக திமுத் கருணாரத்னவுக்குப் பதிலாக, டெஸ்ட் போட்டிகளில் தலைமை தாங்கும் 18-வது வீரர். பிப்ரவரி 6-ஆம் தேதி தொடங்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியுடன் அவரது கேப்டன் பதவியை தொடங்க இருக்கிறார்.

    தனஞ்சய டி சில்வா தேசிய அணியில் தொடர்ந்து விளையாடி வருகிறார். இதுவரை 51 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி பத்து சதங்களையும், 13 அரைசதங்களையும் அடித்துள்ளார். 3 அணிகளுக்கும் ஒரே கேப்டனாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன், ஆனால் தற்போது எங்களிடம் உள்ள வீரர்களால் அதைச் செய்ய முடியவில்லை" என்று தலைமை தேர்வாளர் உபுல் தரங்கா கூறியுள்ளார்.

    • இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு அரசு கலைத்தது குறிப்பிடத்தக்கது.
    • 9 போட்டிகளில் ஆடிய இலங்கை அணி 7 போட்டிகளில் தோல்வி அடைந்தது.

    இலங்கை கிரிக்கெட் வாரியத்தை இடை நீக்கம் செய்வதாக ஐசிசி கிரிக்கெட் அறிவித்துள்ளது.

    இலங்கை கிரிக்கெட் அணியில் அரசியல் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 9 போட்டிகளில் ஆடிய இலங்கை அணி 7 போட்டிகளில் தோல்வி அடைந்தது.

    இதையடுத்து, சமீபத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு அரசு கலைத்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், இலங்கை அணியை இடைநீக்கம் செய்து ஐசிசி அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. 

    • சுழலுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் இந்திய அணி 49.1 ஓவர்களில் 213 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
    • இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 41 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கொழும்பு:

    16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.

    இந்த நிலையில் சூப்பர்4 சுற்றின் 4-வது ஆட்டத்தில் இந்தியாவும், நடப்பு சாம்பியன் இலங்கையும் நேற்று மல்லுகட்டின. 'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

    சுழலுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் இந்திய அணி 49.1 ஓவர்களில் 213 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இலங்கை தரப்பில் துனித் வெல்லாலகே 5 விக்கெட், சரித் அசாலங்கா 4 விக்கெட், மகேஷ் தீக்சனா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 214 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணியை 41.3 ஓவரில் 172 ரன்னுக்கு இந்திய பந்து வீச்சாளர்கள் ஆல் அவுட் செய்தனர். இதன் மூலம் 41 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றது.

    இந்நிலையில் இந்த ஆட்டத்தில் இந்திய அணியை ஆல் அவுட் செய்ததன் மூலம் இலங்கை அணி ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது எதிரணியை தொடர்ச்சியாக 14 முறை ஆல் அவுட் செய்த அணி என்ற சாதனையை இலங்கை படைத்துள்ளது.

    • ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இலங்கை 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இலங்கை அணி செப்டம்பர் 9-ம் தேதி வங்காளதேசம் அணியை எதிர்கொள்கிறது.

    ஆசிய தொடரின் நேற்றைய போட்டியில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி 291 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 37.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.

    இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளது. அதாவது ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக 12 போட்டிகளில் வெற்றி பெற்று பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணியின் சாதனையை சமன் செய்துள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி இதனை இருமுறை செய்துள்ளது. பாகிஸ்தான் ஒருமுறை மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளது.

    இலங்கை அணி முதன் முறையாக இந்த சாதனையை பதிவு செய்துள்ளது. இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக 21 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது.

    இலங்கை அணி செப்டம்பர் 9-ம் தேதி வங்காளதேசம் அணியை எதிர்கொள்கிறது.

    • எந்த ஒருநாடும் 300 ரன்னுக்கு மேல் வித்தியாசத்தில் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது கிடையாது.
    • இலங்கை அணி ஒருநாள் போட்டியில் சந்தித்த மிகவும் மோசமான தோல்வி இதுவாகும்.

    இலங்கை அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 317 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன் மூலம் ஒருநாள் போட்டி வரலாற்றில் இந்திய அணி புதிய சாதனை நிகழ்த்தியது. எந்த ஒருநாடும் 300 ரன்னுக்கு மேல் வித்தியாசத்தில் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது கிடையாது. 300 ரன்னுக்கு மேல் வெற்றியை ருசித்த முதல் அணி இந்தியாவாகும்.

    இதற்கு முன்பு நியூசிலாந்து அணி அயர்லாந்து அணிக்கு எதிராக 2008ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி 290 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்ததே சாதனையாக இருந்தது. இதை முறியடித்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி புதிய வரலாறு படைத்தது.

    இந்திய அணி இதற்கு முன்பு 2007 உலக கோப்பையில் பெர்முடா அணிக்கு எதிராக 257 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே மிகப் பெரிய வெற்றியாக இருந்தது. இந்த வெற்றி வித்தியாசம் 6-வது இடத்தில் இருக்கிறது.

    ஆஸ்திரேலியா 275 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும், தென் ஆப்பிரிக்கா 272 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயையும் வீழ்த்தி இருந்தது. இதே போல் தென் ஆப்பிரிக்கா 258 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இருந்தது.

    இலங்கை அணி ஒருநாள் போட்டியில் சந்தித்த மிகவும் மோசமான தோல்வி இதுவாகும்.

    • 7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி தொடங்குகிறது.
    • ஆசிய கோப்பையில் விளையாடிய இலங்கை அணி வீரர்களில் பெரும்பாலானோர் இடம்பெற்றுள்ளனர்.

    கொழும்பு:

    7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.

    டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். முதல் சுற்றில் விளையாடும் அணிகளில் இருந்து அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.

    இந்நிலையில், டி 20 உலக கோப்பையில் விளையாடுவதற்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆசிய கோப்பை வென்ற இலங்கை அணி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற அந்த அணி முதல் சுற்றில் நமீபியா, நெதர்லாந்து, யுஏஇ ஆகிய அணிகளுடன் மோத வேண்டும்.

    டி20 உலக கோப்பை தொடருக்கான இலங்கை அணி விவரம்:

    தசுன் ஷனகா (கேப்டன்), தனுஷ்க குணதிலகா, பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ், சரித் அசலங்கா, பானுகா ராஜபக்சே, தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்சனா, ஜெப்ரி வாண்டர்சே, சாமிக்க கருணரத்னா, தில்ஷான் மதுசாங்க, பிரமோத் மதுஷன், துஷ்மந்த சமீரா, லஹிரு குமாரா.

    காத்திருப்பு வீரர்கள்: அஷேன் பண்டாரா, பிரவீன் ஜெயவிக்ரமா, தினேஷ் சண்டிமால், பினுர பெர்னாண்டோ, நுவனிது பெர்னாண்டோ 

    ×