search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "srilanka team"

    • தனஞ்சய டி சில்வா தேசிய அணியில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
    • இதுவரை 51 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி பத்து சதங்களையும், 13 அரைசதங்களையும் அடித்துள்ளார்.

    ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் சுற்றுப்பயணங்களுக்கு முன்னதாக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு வெவ்வேறு கேப்டன்களை இலங்கை கிரிக்கெட் தலைமை தேர்வாளர் உபுல் தரங்கா அறிவித்துள்ளார். 32 வயதான பேட்டிங் ஆல்ரவுண்டர் தனஞ்சய டி சில்வா டெஸ்ட் கேப்டனாகவும், 28 வயதான குசல் மெண்டிஸ், ஒருநாள் கிரிக்கெட் அணியை தலைமை தாங்க நியமிக்கப்பட்டனர். 26 வயதான வனிது ஹசரங்க, டி20 அணியை வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் உபுல் தரங்கா அறிவித்தபடி, தனஞ்சய டி சில்வா இலங்கை டெஸ்ட் அணிக்கு பொறுப்பேற்க உள்ளார். அவர் டெஸ்ட் கேப்டனாக திமுத் கருணாரத்னவுக்குப் பதிலாக, டெஸ்ட் போட்டிகளில் தலைமை தாங்கும் 18-வது வீரர். பிப்ரவரி 6-ஆம் தேதி தொடங்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியுடன் அவரது கேப்டன் பதவியை தொடங்க இருக்கிறார்.

    தனஞ்சய டி சில்வா தேசிய அணியில் தொடர்ந்து விளையாடி வருகிறார். இதுவரை 51 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி பத்து சதங்களையும், 13 அரைசதங்களையும் அடித்துள்ளார். 3 அணிகளுக்கும் ஒரே கேப்டனாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன், ஆனால் தற்போது எங்களிடம் உள்ள வீரர்களால் அதைச் செய்ய முடியவில்லை" என்று தலைமை தேர்வாளர் உபுல் தரங்கா கூறியுள்ளார்.

    இலங்கையில் பாகிஸ்தான் ஜூனியர் கிரிக்கெட் அணி விளையாடவிருந்த போட்டித் தொடர்கள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. #SrilankaAttacks #PakistanU19Tour #SLC
    கொழும்பு:

    இலங்கை தலைநகர் கொழும்பில் கடந்த வாரம் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இலங்கையில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    வெடிகுண்டு தாக்குதல்களால் இலங்கையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால், பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கையில் நடைபெறும் கிரிக்கெட் தொடரை இலங்கை கிரிக்கெட் வாரியம் ரத்து செய்துள்ளது. வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.



    19 வயதுக்குட்பட்டோருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 4 நாட்கள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் விளையாட அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது. முதல் போட்டி மே 3-ம் தேதி தொடங்கவிருந்தது. இதற்காக கடந்த 5 நாட்களாக கராச்சி முகாமில் தீவிர பயிற்சி பெற்ற பாகிஸ்தான் அணி, வரும் 30-ம் தேதி இலங்கைக்கு புறப்படுவதாக இருந்தது.

    ஆனால், தற்போதைய சூழ்நிலையில், போட்டியை நடத்துவது சரியாக இருக்காது என்பதால், இந்த போட்டித் தொடர்கள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

    19 வயதுக்குட்பட்டோருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்து ஜூன்- ஜூலை மாதங்களில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. #SrilankaAttacks #PakistanU19Tour #SLC
    ×