search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Srilankan team"

    • எந்த ஒருநாடும் 300 ரன்னுக்கு மேல் வித்தியாசத்தில் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது கிடையாது.
    • இலங்கை அணி ஒருநாள் போட்டியில் சந்தித்த மிகவும் மோசமான தோல்வி இதுவாகும்.

    இலங்கை அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 317 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன் மூலம் ஒருநாள் போட்டி வரலாற்றில் இந்திய அணி புதிய சாதனை நிகழ்த்தியது. எந்த ஒருநாடும் 300 ரன்னுக்கு மேல் வித்தியாசத்தில் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது கிடையாது. 300 ரன்னுக்கு மேல் வெற்றியை ருசித்த முதல் அணி இந்தியாவாகும்.

    இதற்கு முன்பு நியூசிலாந்து அணி அயர்லாந்து அணிக்கு எதிராக 2008ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி 290 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்ததே சாதனையாக இருந்தது. இதை முறியடித்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி புதிய வரலாறு படைத்தது.

    இந்திய அணி இதற்கு முன்பு 2007 உலக கோப்பையில் பெர்முடா அணிக்கு எதிராக 257 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே மிகப் பெரிய வெற்றியாக இருந்தது. இந்த வெற்றி வித்தியாசம் 6-வது இடத்தில் இருக்கிறது.

    ஆஸ்திரேலியா 275 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும், தென் ஆப்பிரிக்கா 272 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயையும் வீழ்த்தி இருந்தது. இதே போல் தென் ஆப்பிரிக்கா 258 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இருந்தது.

    இலங்கை அணி ஒருநாள் போட்டியில் சந்தித்த மிகவும் மோசமான தோல்வி இதுவாகும்.

    ஆசிய கோப்பை போட்டியின் தொடக்கத்திலேயே வெளியேறியது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிப்பதாக இலங்கை அணி கேப்டன் மேத்யூஸ் தெரிவித்துள்ளார். #AsiaCup2018 #AFGvSL
    அபுதாபி:

    இந்தியா உள்பட 6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய், அபுதாபியில் நடைபெற்று வருகிறது.

    அபுதாபியில் நேற்று நடந்த 3-வது ‘லீக்’ ஆட்டத்தில் இலங்கை அணி 91 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானிடம் தோற்று போட்டியில் இருந்து வெளியேறியது.

    இது குறித்து இலங்கை அணியின் கேப்டன் மேத்யூஸ் கூறியதாவது:-

    ஆசிய கோப்பை போட்டியின் தொடக்கத்திலேயே வெளியேறியது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது. அணியின் ஒட்டுமொத்த செயல்பாடு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    முதல் ஆட்டத்தில் 150 ரன்னுக்கு குறைவாக எடுத்தோம். இந்த ஆட்டத்தில் 158 ரன் வரை தான் எடுத்தோம். ஆப்கானிஸ்தான் மிகவும் அபாரமாக விளையாடி எங்களை வெளியேற்றி விட்டது. அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


    எங்களது தொடக்கம் சிறப்பாக இருந்தது. ஆனால் மிடில் ஆர்டர் வரிசை மீண்டும் சொதப்பி விட்டது. பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. பீல்டிங்கிலும் முன்னேற்றம் இருந்தது. ஆனால் பேட்டிங் தான் மிகவும் மோசமாக இருந்தது.

    எங்கள் அணி வீரர்களுக்கு நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்பது தெரியவில்லை. இரண்டு ஆட்டத்திலும் 160 ரன் கூட எடுக்க முடியாமல் போனது வருத்தத்தை ஏற்படுத்தியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வெற்றி குறித்து ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஆப்கான் கூறும்போது, ‘ஒவ்வொரு பேட்ஸ்மேன்களும் திட்டமிட்டு விளையாடினார்கள். அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களுக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

    ‘பி’ பிரிவில் இருந்து வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு முன்னேறி உள்ளன. இரு அணிகள் மோதும் ஆட்டம் வருகிற 20-ந் தேதி நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி அந்த பிரிவில் முதலிடத்தை பிடிக்கும். #AsiaCup2018 #AFGvSL #Mathews
    ×