search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "by election"

    • வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி முதல் தொடங்கி, ஜூன் 1ம் தேதி வரை நடைபெறுகிறது.
    • வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறும் என கூறப்பட்டது.

    மகாராஷ்டிரா மாநிலம் அகோலா- மேற்கு தொகுதி இடைத்தேர்தலை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    நாட்டில், மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி முதல் தொடங்கி, ஜூன் 1ம் தேதி வரை நடைபெறுகிறது.

    இதற்கிடையே, ஒரு சில மாநிலங்களில் இதைத்தேர்தல்களும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    அதன்படி, மகாராஷ்டிரா மாநிலம் அகோலா- மேற்கு தொகுதிக்கு வரும் ஏப்ரல் 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறும் என கூறப்பட்டது.

    இந்நிலையில், அகோலா- மேற்கு தொகுதி இடைத்தேர்தலை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    மும்பை உயர் நீதிமன்றத்தின் (நாக்பூரில் உள்ள பெஞ்ச்) வழிகாட்டுதலின்படி, மகாராஷ்டிராவின் 30-அகோலா மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை நிறுத்தி வைக்க ஆணையம் முடிவு செய்துள்ளதாக அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    • தன்னை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி வேட்பாளர் ஜெய்க் சி.தாமசை 37ஆயிரத்து 719 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
    • தொடர்ந்து 53 ஆண்டுகளுக்கு மேலாக புதுப்பள்ளி தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகவே இருந்து வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி இறந்ததையடுத்து, அவர் எம்.எல்.ஏ.வாக இருந்த புதுப்பள்ளி தொகுதியில் கடந்த 5-ந்தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது.

    இதில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட உம்மன்சாண்டியின் மகனான சாண்டி உம்மன் வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி வேட்பாளர் ஜெய்க் சி.தாமசை 37ஆயிரத்து 719 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    53 ஆண்டுகளாக புதுப்பள்ளி தொகுதி எம்.எல்.ஏ.வாக உம்மன்சாண்டி இருந்தார். இந்நிலையில் தற்போது நடந்த இடைத் தேர்தலில் அவரது மகன் சாண்டி உம்மன் வெற்றி பெற்றிருக்கிறார். இதன்மூலம் தொடர்ந்து 53 ஆண்டுகளுக்கு மேலாக புதுப்பள்ளி தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகவே இருந்து வருகிறது.

    இந்நிலையில் புதுப்பள்ளி தொகுதி இடைத்தேர்தலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சட்டசபை கூட்டத்தொடர் இன்று மீண்டும் தொடங்கியது. அப்போது புதுப்பள்ளி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற சாண்டி உம்மன் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார். முன்னதாக அவர் இன்று காலை சட்டசபை சபாநாயகர் ஷம்சீரை சந்தித்தார்.

    • இன்று காலை 7 மணிக்கு 7 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு தொடங்கியது.
    • வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலம் கோசி, ஜார்க்கண்ட் மாநிலம் டும்ரி, மேற்கு வங்காளத்தில் தூப்குரி, கேரளாவில் புதுப்பள்ளி, உத்தரகாண்டில் பாகேஸ்வரர்,மற்றும் திரிபுராவில் தன்கர், போக்சநகர் ஆகிய 7 சட்டசபை தொகுதிகள் காலியாக இருந்தன. கோசி மற்றும் தன்கர் தொகுதிகளில் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததாலும் மற்ற 5 தொகுதிகளில் எம்.எல்.ஏ.க்கள் மரணம் அடைந்ததாலும் இந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று காலை 7 மணிக்கு 7 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர். பல வாக்குசாவடிகளில் ஓட்டுப்போடுவதற்காக காலை முதலே வாக்காளர்கள் காத்திருந்தனர். இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தனர். பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இன்று மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

    உத்தரபிரதேசம் கோசி தொகுதியில் ஆளும் பாரதியஜனதாவுக்கும், எதிர்கட்சிகள் புதிதாக உருவாக்கி இருக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. சமாஜ்வாடி எம்.எல்.ஏ.வாக இருந்த தாராசிங் சவுதான் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜ.க.வில் இணைந்தார். அவருக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. பா.ஜ.க.வுக்கு எதிராக சமாஜ்வாடி கட்சி போட்டியிடுகிறது. இவருக்கு காங்கிரஸ்,கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மாயாவதி தலைமையிலான பகுஜன்சமாஜ் கட்சி போட்டியிடவில்லை. இதே போல டும்ரி தொகுதியில் பாரதியஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், இந்தியா கூட்டணியும் நேரடியாக மோதுகிறது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும், பா.ஜனதா கூட்டணி வேட்பாளராக ஏ.ஐ.எம். ஐ.எம். கட்சியும் நேரடியாக களத்தை சந்தித்துள்ளது.

    திரிபுரா போக்சநகர் தொகுதியில் பாரதிய ஜனதாவுக்கும், மார்க்சிஸ்ட் கட்சிக்கும் இடையே போட்டி நிலவுகிறது. மேற்குவங்காளம் தூப்குரி தொகுதியில் பா.ஜ.க. திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்டு கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கி உள்ள இந்தியா கூட்டணி உருவான பிறகு நடைபெறும் 6 மாநிலங்களில் நடக்கும் முதல் இடைத்தேர்தல் இது என்பதால் தேர்தல் முடிவு பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
    • இந்த வெற்றி, பாராளுமன்ற தேர்தலிலும் நிச்சயமாக எதிரொலிக்கும் என்று ரூபி மனோகரன் கூறினார.

    நெல்லை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொருளாளரும், நாங்குநேரி தொகுதி

    எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரன் கூறியதாவது:-

    நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட எங்கள் காங்கிரஸ் இயக்கத்தின் மூத்த தலைவர்

    ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி எதிர்பார்த்த ஒன்று தான்.

    அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வெற்றியை வழங்கியுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி மக்களுக்கு இந்த நேரத்தில் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    மேலும், இந்த தேர்தலுக்காக கடும் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், பாராளு மன்ற, சட்டமன்ற உறுப்பி னர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்னுடைய நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    தி.மு.க. - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு கிடைத்துள்ள இந்த அபார வெற்றி, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலிலும் நிச்சயமாக எதிரொலிக்கும். மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தே தீரும்.

    இவ்வாறு ரூபி மனோ கரன் எம்.எல்.ஏ. கூறினார்.

    • வார்டு உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
    • நிர்வாகிகள், பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதையடுத்து திருப்பூர் 22-வது வட்ட தி.மு.க. மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் வார்டு உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சியில் வட்ட செயலாளர் ராஜ்குமார், முன்னாள் பகுதி செயலாளர் செல்வராஜ், மாநகர பொறுப்பாளர்கள் சரவணகுமார், திராவிட பாலு, பகுதி பொறுப்பாளர் குப்புசாமி, காங்கிரஸ் வார்டு தலைவர் நடராஜ், கொங்குநாடு தேசிய முற்போக்குகழகத்தின் பொறுப்பாளர்கள் மாடிகோவில் செல்வகுமார், சி.பி.ஐ.செயலாளர் சின்னச்சாமி, சி.பி.எம். பொறுப்பாளர் சுப்பிரமணி, ம.தி.மு.க. செயலாளர் ராஜமாணிக்கம், தொ.மு.ச. தங்கராஜ் உள்பட கூட்டணி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. ேதால்வியை சந்திக்கும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. பேசினார்.
    • சிவகாசியில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாணிக்கம் தாகூர் எம்.பி. தொடங்கி வைத்தார்.

    விருதுநகர்

    சிவகாசி அம்மன்கோவில்பட்டி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருடன் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்துரையாடினார்.

    அப்போது மாணவ மாணவியர் தரையில் அமர வைக்கப்பட்டதை கண்ட மாணிக்கம் தாகூர் உடனடியாக தலைமை ஆசிரியரிடம் அதற்கான காரணத்தை கேட்டபோது மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இருக்கைகள் இல்லை என தெரிவித்ததை தொடர்ந்து தனது நிதியின் மூலம் மாணவர்களுக்கு இருக்கைகள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    பின்னர் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சிவகாசி மாநகராட்சியை இணைக்க வேண்டும்.இதன் மூலம் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய பிரதமருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தப்படும்.

    ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தோல்வி கண்ணிற்கு முன் நிற்பதால் அழ தொடங்கிவிட்டார். அ.தி.மு.க. மிகப்பெரிய தோல்வியை சந்திக்க உள்ளதை எடப்பாடி பழனிச்சாமி அறிந்து கொண்டுள்ளார் .

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கமல்ஹாசனின் ஆதரவு மிக முக்கியமான ஆதரவாக காங்கிரஸ் பார்க்கிறது. காங்கிரஸ் கட்சி கமல்ஹாசனுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கிறது.

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் முடிவு எப்படி இருக்கும் என்பதை பொறுத்து அதன் பிரதிபலிப்பாக நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக சிவகாசியில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாணிக்கம் தாகூர் எம்.பி. தொடங்கி வைத்தார்.

    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது.
    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது.

    அவிநாசி:

    கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்டத்தை உள்ளடக்கி அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. 98 சதவீதம் பணிகள் முடிந்துவிட்ட நிலையில் திட்டத்தை வெள்ளோட்டம் பார்த்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்படுகிறது.இருப்பினும் வருகிற ஏப்ரல் மாதம் திட்டம் வெள்ளோட்டம் பார்க்கப்படும் என நீர்வளத்துறையினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது.

    60 ஆண்டு கனவு திட்டமான அத்திக்கடவு- அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம் அ.தி.மு.க., ஆட்சியில் அதுவும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போதுதான் நிதி ஒதுக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது.எனவே, அக்கட்சியினருக்கு இத்திட்டம் தேர்தல் பிரசாரத்தின் போது துருப்புச் சீட்டாக இருக்கப்போகிறது.

    அ.தி.மு.க., ஆட்சியின் போது திட்டம் கொண்டு வரப்பட்டாலும் திட்டம் எவ்வித தொய்வுமின்றி நடந்து முடிய தி.மு.க., அரசு தான் காரணம் என தி.மு.க.,வினர் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளனர். பல்வேறு கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ள விடுபட்ட குளம், குட்டைகளை இணைப்பது தொடர்பான வாக்குறுதி களையும் அவர்கள் அளிக்கக்கூடும்.

    அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக் குழுவினர் கூறுகையில், ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை, ஈரோடு கிழக்கு, மேற்கு மாவட்டங்களில் பயன் குறைவு. மாறாக பெருந்துறை, சென்னிமலை, நம்பியூர், கோபி, பவானிசாகர் வட்டாரங்கள் தான் அதிகம் பயன் பெறும்.இருப்பினும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அத்திக்கடவு திட்டம் சார்ந்து அரசியல் கட்சியினர் பிரசாரம் செய்வர் என்பதால் திட்டத்தை விரைந்து முடிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும் என்றனர்.

    • ஓ.பி.எஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
    • இடைத்தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய பிப்ரவரி 7ம் தேதி கடைசி நாள். வேட்புமனு பரிசீலனை 8ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுவை திரும்பபெற கடைசி நாள் பிப். 10. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2-ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் ஓ.பி.எஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையில் நடக்கும இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • பீகார்,தெலுங்கானா இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சி வெற்றி.
    • மகாராஷ்டிரா இடைத்தேர்தலில் உத்தவ் தாக்கரே அணி வேட்பாளர் வெற்றி பெற்றார்.

    மகாராஷ்டிரா, பீகார், அரியானா, ஒடிசா, உத்தரப்பிரதேசம், தெலுங்கானா உள்பட 6 மாநிலங்களில் காலியாக இருந்த 7 தொகுதிகளுக்கு கடந்த 3-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி மகாராஷ்டிராக மாநிலம் அந்தேரி கிழக்கு தொகுதியில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணி வேட்பாளர் ருதுஜா லத்கே வெற்றி பெற்றுள்ளார்.

    பீகார் மாநிலம் மோகாமா தொகுதியில் ராஷ்டீரிய ஜனதா தள வேட்பாளர் நீலம் தேவி வெற்றி பெற்றுள்ளார். அந்த மாநிலத்தின் மற்றொரு தொகுதியான கோபால்கஞ்சில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் குசும்தேவி வெற்றி பெற்றுள்ளார். அரியானா மாநிலம் ஆதம்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் பாவ்யா பிஷ்னோய்யும், உத்தரபிரதேசத்தில் கோலாகோகர்நார் தொகுதியில் பாஜக வேட்பாளர் அமன்கிரியும் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

    இதேபோல் தெலுங்கானா மாநிலம் முனுகோட் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் டிஆர்எஸ் கட்சி வேட்பாளர் குஷ்குந்த்லா பிரபாகர் ரெட்டி 12 சுற்றுகளின் முடிவில் 82,025 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார்.  ஒடிசா மாநிலம் தாம்நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக மீண்டும் பெற்றி பெற்றுள்ளது.

    • இதற்கான அறிவிக்கை வருகிற 7-ந்தேதி வெளியிடப்படுகிறது.
    • நவம்பர் 6-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

    புதுடெல்லி :

    பல்வேறு காரணங்களால் 6 மாநிலங்களுக்கு உட்பட்ட 7 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. அந்தவகையில் பீகாரின் மோகமா, கோபால்கஞ்ச், மராட்டியத்தின் அந்தேரி கிழக்கு, அரியானாவின் ஆதம்பூர் ஆகிய தொகுதிகள் காலியாக உள்ளன.

    இதைப்போல தெலுங்கானாவின் முனுகோடு, உத்தரபிரதேசத்தின் கோலா கோரக்நாத், ஒடிசாவின் தாம்நகர் ஆகிய தொகுதிகளிலும் எம்.எல்.ஏ.க்கள் இல்லை.

    எனவே இந்த தொகுதிகளுக்கு தேர்தல் கமிஷன் இடைத்தேர்தல் அறிவித்தது. அதன்படி, இந்த தொகுதிகளில் அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிக்கை வருகிற 7-ந்தேதி வெளியிடப்படுகிறது. அன்றே வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. இதற்கான இறுதிநாள் வருகிற 14-ந்தேதி ஆகும்.

    15-ந்தேதி வேட்புமனு பரிசீலனை நடக்கிறது. வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் 17-ந்தேதி ஆகும். இந்த இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 6-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

    இந்த தகவல்களை தேர்தல் கமிஷன் வெளியிட்டு உள்ளது.

    • ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்காக இடைத்தேர்தல் நடைபெற்றது.
    • எதிர்த்து யாரும் போட்டியிடாததால், வடக்கு பட்டம் ஊராட்சி மன்ற தலைவராக ஒரு மனதாக போட்டியின்றி விஜய் தேர்வானார்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடக்கு பட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்காக இடைத்தேர்தல் நடைபெற்றது.

    இதில்விஜய் (வயது 34) என்பவர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், வடக்கு பட்டம் ஊராட்சி மன்ற தலைவராக ஒரு மனதாக போட்டியின்றி விஜய் தேர்வானார்.

    • திமுக. கூட்டணி சார்பில் ஈஸ்வரமகாலிங்கம் (காங்கிரஸ்), குமாரவேல்( அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்), சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 6 பேர் இடைத்தேர்தலில் போட்டியிட்டனர்.
    • ஈஸ்வரமகாலிங்கம் 191 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    பல்லடம் :

    தமிழகம் முழுவதும் உள்ளாட்சிகளில் காலியாக உள்ள ஊரக,நகர,உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதன்படி பல்லடம் ஒன்றியத்தில் 1வது வார்டு உறுப்பினர் பதவி காலியாக உள்ளது.

    இதற்கான வேட்புமனு தாக்கல் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த ஜூன்.20ல் துவங்கியது. இடைத்தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல்படி திமுக. கூட்டணி சார்பில் ஈஸ்வரமகாலிங்கம் (காங்கிரஸ்), குமாரவேல்( அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்), சுயேட்சை வேட்பாளர்களாக சதீஸ்குமார்( சாலை உருளை),சின்னசாமி( தண்ணீர் குழாய்),ராஜ்(மறை திருக்கி),,ஜெயபிரகாஷ்( தீப்பெட்டி) உள்ளிட்ட 6 பேர் இடைத்தேர்தலில் போட்டியிட்டனர். இதில் ஆண்கள் 3720,பெண்கள் 3796, இதர பிரிவினர் 2,ஆக மொத்தம் 7518 வாக்காளர்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 9 ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.இதில் 4740 வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில், வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலர் அகமது, உதவி அலுவலர் அய்யாசாமி, பல்லடம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் வில்சன், உள்ளிட்ட அதிகாரிகள் வாக்கு எண்ணும் பணியை ஒருங்கிணைத்து நடத்தினர். பல்லடம் போலீஸ் டி.எஸ்.பி. வெற்றி செல்வன் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈஸ்வரமகாலிங்கம் 191 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம். ஈஸ்வரமகாலிங்கம் - 1605 வாக்குகளும், சுயேட்சை வேட்பாளர்கள் சதீஷ்குமார் - 1414 வாக்குகளும், ராஜ் - 743 வாக்குகளும், சின்னசாமி - 632 வாக்குகளும், ஜெயப்பிரகாஷ் - 193 வாக்குகளும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வேட்பாளர் குமரவேல் - 84 வாக்குகளும் பெற்றனர். 69 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. 191 வாக்குகள் வித்தியாசத்தில் ஈஸ்வரமகாலிங்கம் வெற்றி பெற்றார்.

    ×