search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "8 வழிச்சாலை"

    கொடுங்கையூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். #RedSandersSmuggling
    பெரம்பூர்:

    சென்னை கொடுங்கையூர் காவேரி நகரில் மர்மநபர்கள் சிலர் ஆந்திர மாநிலத்தில் இருந்து செம்மரக்கட்டைகளை கடத்தி வந்து வீடுகளில் பதுக்கி வைத்து வெளிநாடுகளுக்கு கடத்தி செல்வதாக கொடுங்கையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதுபற்றி நேற்று காலை நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரர் தேவகுமார், எம்.கே.பி. நகர் போலீஸ் உதவி கமிஷனர் அழகேசனுக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக உதவி கமிஷனர் அழகேசன் மற்றும் போலீசார் காவேரி நகருக்கு சென்று சோதனை நடத்தினார்கள். காவேரி நகர் பிரதான சாலையில் மூசா (வயது 45) என்பவரின் வீட்டில் சோதனையில் ஈடுபட்டபோது அங்கு செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து அங்கு இருந்த 1 டன் செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் மூசா ஆந்திராவில் இருந்து செம்மரக்கட்டைகளை கடத்தி வந்து வீட்டில் பதுக்கி வைத்து வெளிநாடுகளுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

    மேலும், இந்த கடத்தலுக்கு மூசாவின் உறவினர் பைசார் (26), வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சையத் (27), சுப்பையா (59), மண்ணடியை சேர்ந்த அப்சல்கான் (29), பூந்தமல்லியை சேர்ந்த சீனிவாசன் (36) மற்றும் கொடுங்கையூரை சேர்ந்த அப்பாஸ் (22) அப்சல் குரு (26) ஆகியோர் உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது.

    இதனையடுத்து மூசா உள்பட 8 பேரையும் போலீசார் கைது செய்தனர். செம்மரக்கட்டைகள் கடத்தலுக்காக பயன்படுத்திய வேனையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும் கொடுங்கையூர் போலீசார் மூசா உள்பட 8 பேரையும் சென்னை கிண்டியில் உள்ள வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். வனத்துறை அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.  #RedSandersSmuggling
    தென் ஆப்ரிக்கா நாட்டின் கேப் டவுன் அருகே ஆயுத கிடங்கு வெடித்து சிதறியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
    ஜோகன்னஸ்பெர்க்:

    தென் ஆப்ரிக்கா நாட்டின் தலைநகரமான கேப் டவுனில் சாமர்செட் நகரின் மேற்கு பகுதியில் ஆயுத கிடங்கு அமைந்துள்ளது.

    இந்த ஆயுத கிடங்கில் கன ரக ஆயுதங்கள், கையெறி குண்டுகள் மற்றும் வெடி மருந்துகள் சேமித்து வைக்கப்பட்டு இருந்தன.

    இந்நிலையில், இந்த கிடங்கு திடீரென வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். வெடி விபத்து நடந்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம் அருகே தனியார் பேருந்துகள் மோதி 7 பேர் பலியான இடத்தை கலெக்டர் ரோகிணி நேரில் சென்று ஆய்வு நடத்தினார். #BusAccident
    சேலம்:

    சேலம் அருகே சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இன்று அதிகாலை மாமாங்கம் என்ற இடத்தில் பெங்களுருவில் இருந்து ஏற்காடு சென்ற தனியார் பேருந்தும், சேலத்தில் இருந்த் தர்மபுரி சென்ற பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

    இரண்டு தனியார் சொகுசு பேருந்துகள் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி 7 பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும் படுகாயம் அடைந்த 30-க்கு மேற்பட்டோர் சேலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விபத்தால் சேலம் - பெங்களூர் தெசிய நெடுஞ்சாலை கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. அங்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.



    இந்நிலையில், அதிகாலையில் விபத்து ஏற்பட்டதை அறிந்த சேலம் கலெக்டர் ரோகிணி சம்பவ இடத்துக்கு நேரில் சென்றார். அங்கு நடைபெற்ற மீட்பு பணிகளை ஆய்வு செய்து தகுந்த ஆலோசனைகளை வழங்கினார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    அதிகாலையில் இரு தனியார் பேருந்துகள் மோதிய விபத்தில் 7 பேர் பலியானது சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #BusAccident
    அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குழந்தைகள் உள்பட 8 பேர் பரிதாபமாக பலியானது சோகத்தை ஏற்படுத்தியது. #ChicagoFireAccident
    சிகாகோ:

    அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் புறநகர் பகுதியான லிட்டில் வில்லேஜ் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில்  இன்று அதிகாலை திடீரென தீ பற்றியது. இதில் இரண்டு வீடுகளில் மளமளவென தீப்பற்றி எரிந்தது.

    இந்த தீ விபத்தில் சிக்கி 6 குழந்தைகள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். தகவலறிந்த தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீப்பற்றியதற்கான காரணம் குறித்து தீயணைப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். #ChicagoFireAccident
    ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் திருமண விழாவிற்கு சென்ற வேன் மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #AndraAccident
    ஐதராபாத்:

    ஆந்திரப்பிரதேச மாநிலம் பேனுகொண்டா மண்டல் மாவட்டத்தில் உள்ளது சத்தாருபள்ளி கிராமம். இந்த பகுதியில் திருமண விழாவிற்கு சென்ற வேன் மீது மினி லாரி ஒன்று வேகமாக மோதியது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விசாரணையில், தர்மாவரம் பகுதியில் நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்க வேன் ஒன்றில் 22 பேர் சென்று கொண்டிருந்தனர். சத்தாருபள்ளி என்ற இடத்தில் வேன் சென்றபோது எதிரே வந்த மினி லாரி மோதியதில் வேன் தலைகீழாக கவிழ்ந்தது. காயம் அடைந்தவர்களில் சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் மேல் சிகிச்சைக்காக பேனுகொண்டா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிய வந்தது.

    இந்த விபத்தில் இறந்தவர்கள் குறித்த விவரம் தெரிய வரவில்லை. #AndraAccident
    சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள மனையாரங்காடு கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து கேரள மக்களுக்காக 8000 சப்பாத்திகளை தயாரித்து அனுப்பி வைத்தனர். #KeralaFloodRelief
    சேலம்:

    கனமழையால் பெரும் பாதிப்புக்குள்ளான கேரள மாநிலத்திற்கு தமிழகத்திலிருந்து ஏராளமானோர் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

    இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள மனையாரங்காடு கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து கேரள மக்களுக்காக 8000 சப்பாத்திகளை தயாரித்தனர்.

    நேற்று பிற்பகல் முதல் நள்ளிரவு வரை சப்பாத்தி தயாரிக்கும் பணியில் ஊர்மக்கள் மற்றும் சிறுவர்-சிறுமியர் மிகுந்த ஆர்வத்தோடு பங்கேற்றனர். தயாரிக்கப்பட்ட 8000 சப்பாத்திகள் ஒரு பொட்டலத்திற்கு நான்கு என்ற கணக்கில் தனித்தனியே கட்டப்பட்டன. 8000 சப்பாத்திகள் மட்டுமின்றி, பொதுமக்கள் பங்களிப்போடு 2000 பிஸ்கட் பாக்கெட்டுகள், 1000 துண்டுகள், 50 பட்டு சேலைகள், 100 போர்வைகள் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகள் ஆகியவற்றை லாரி மூலம் கேரளாவிற்கு அனுப்பி வைத்தனர். #KeralaFloodRelief

    இந்தோனேஷியாவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் உயிரிழந்த நிலையில் 12 வயது சிறுவன் மட்டும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினான். #Indonesia #PlaneCrash
    ஜகார்த்தா:

    பபுவா மாகாணம் தனாவில் இருந்து நேற்று மாலை ஒக்சில் பகுதிக்கு சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் 12 வயது சிறுவன் உள்பட 9 பேர் இருந்தனர். இந்த விமானம் ஒக்சில் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமானது.



     இதனால் அதிர்ச்சியடைந்த விமான நிலைய அதிகாரிகள், காணாமல் போன அந்த விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் விமானம் பெகுனுங்கன் பிண்டாங் மாவட்டத்தின் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி கிடப்பதாக தெரியவந்தது. இதனையடுத்து மீட்புக்குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 8 பேர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது, 12 வயது சிறுவன் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டான்.  இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  #Indonesia #PlaneCrash #tamilnews
    பசுமை வழிச்சாலைத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும்போது மக்கள் தாக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யும்படி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #ChennaiSalemHighway #MadrasHC
    சென்னை:

    சென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும்போது எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். நிலம் கையகப்படுத்தப்படும்போது தடுத்து நிறுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டனர். சில இடங்களில் போராட்டம் நடத்தியவர்கள் போலீசாரால் தாக்கப்பட்டனர்.



    இந்நிலையில், நிலம் கையகப்படுத்தும்போது தாக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி வழக்கறிஞர் ரத்தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கூறியிருந்தார். அவரது மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றம், தமிழக அரசு 4 வாரத்தில் பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிட்டது. #ChennaiSalemHighway #MadrasHC
    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹால் பகுதியில் தொண்டர்கள் செருப்பு உள்பட 8 டன் குப்பை அகற்றப்பட்டது. #RajajiHall #KarunanidhiFuneral
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் பொதுமக்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்தது. லட்சக்கணக்கானவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

    கருணாநிதியின் உடல் அடக்கம் இரவு 7 மணிக்கு முடிந்தாலும் தொண்டர்கள் கலைந்து செல்ல நேரம் நீடித்தது.

    அதன் பின் மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    துணை கமி‌ஷனர் பிரியதர்ஷினி மேற்பார்வையில் மண்டல அதிகாரி வீரப்பன் தலைமையில் 150 ஊழியர்கள் துப்புரவு பணியினை மேற்கொண்டனர்.

    ராஜாஜி அரங்கத்தை சுற்றிலும் செருப்புகள் சிதறி கிடந்தன. நெரிசலில் சிக்கிய தொண்டர்கள் தங்கள் கால்களில் அணிந்து வந்த செருப்பினை எடுக்க முடியாமல் விட்டுச் சென்றனர். செருப்புகள் மட்டுமே ஒரு டன் அளவில் குவிந்து உள்ளது. தண்ணீர் பாட்டில்கள், உணவு கழிவுகள், டம்ளர் உள்ளிட்ட அனைத்து குப்பைகளும் மலைபோல் குவிந்தன. அவற்றை சுத்தம் செய்வதற்கு பெரும்பாடாகி விட்டது.

    ராஜாஜி ஹால் அருகில் 8 டன் குப்பைகளையும், அண்ணா சாலை, வாலாஜா ரோடு, காமராஜர் சாலை வரையில் 10 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளன. இந்த பணியில் 60 ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    மாலையில் தொடங்கிய துப்புரவு பணி அதிகாலை 4.30 மணிவரை நீடித்தது. மொத்தம் 18 டன் குப்பை அகற்றப்பட்டதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #RajajiHall #KarunanidhiFuneral
    பெரம்பலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    பெரம்பலூர்:

    சென்னை-சேலம் இடையே அமைக்கப்பட உள்ள 8 வழி பசுமை சாலை திட்டத்தை கைவிடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திருவண்ணாமலையில் இருந்து சேலம் வரையிலான நடைபயணத்தை தொடங்கிய கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட பலரை போலீசார் கைது செய்தனர். 

    இதனை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கட்சியின் பெரம்பலூர், ஆலத்தூர் வட்ட செயலாளர் எஸ்.பி.டி.ராஜா தலைமை தாங்கினார். கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணனை கைது செய்த போலீசாரை கண்டித்தும், சென்னை-சேலம் இடையே அமைக்கப்பட உள்ள 8 வழி பசுமை சாலை திட்டத்தை தமிழக அரசு கைவிடக்கோரியும் பல்வேறு கோஷங்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எழுப்பினர். 

    இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செல்லத்துரை, அகஸ்டின் மற்றும் கணேசன், முத்துசாமி, கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    நெல்லை: 

    நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா குழு உறுப்பினர் அசோக் தலைமை தாங்கினார். 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருவண்ணாமலையில் பிரசார பயணம் மேற்கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டவர்களை கைது செய்ததை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கூறும் போது, “சென்னையில் இருந்து சேலம் வரை 8 வழிச்சாலை திட்டத்தை அமல்படுத்துவதில் தமிழக அரசு அதிக அக்கறை காட்டி வருகிறது. இந்த திட்டத்துக்காக கருத்து கேட்பு முறையாக நடத்தப்படவில்லை. இந்த திட்டத்துக்கு ஏராளமான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. இதை நாங்கள் எதிர்க்கிறோம். இந்த திட்டத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பிரசார பயணம் மேற்கொண்ட எங்கள் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகளை போலீசார் கைது செய்துள்ளனர். விவசாயிகளை பாதிக்கும் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும்“ என்றார்.

    தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நெல்லை மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகன், கட்சி நிர்வாகிகள் சுடலைராஜ், விண்ணமுத்து, பேரின்பராஜ், முருகன், கவுதம், பாலு, மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    `8 தோட்டாக்கள்' பட இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கும் த்ரில்லர் கதையில் நடிகர் அதர்வா நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில், படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. #KuruthiAatam #Atharvaa
    அதர்வா நடிப்பில் `இமைக்க நொடிகள்', `பூமராங்' உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், அதர்வா அடுத்ததாக `8 தோட்டாக்கள்' பட இயக்குநர் ஸ்ரீ கணேஷ் உடன் இணைந்திருக்கிறார்.

    `குருதி ஆட்டம்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்திக் பூஜை சமீபத்தில் நடந்தது. படம் குறித்து இயக்குநர் ஸ்ரீ கணேஷ் பேசும் போது, "இந்த படம் முழுக்க முழுக்க மதுரை பின்னணியில் உருவாக இருக்கிறது. திரில்லர் பிண்ணனியில் உருவாகும் இந்த படம் அதர்வாவின் முழு திறமைக்கும் தீனி போடும் படமாக அமையும். கதாநாயகி தேர்வு நடைப் பெற்று வருகிறது. இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு துவங்கும்" என்றார்.  



    ராக் போர்ட் என்டர்டைன்மெண்ட் சார்பில் டி.முருகானந்தம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐ.பி.கார்த்திகேயன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #KuruthiAatam #Atharvaa

    ×