search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "People Attacked"

    • கார் பழுது செய்வது தொடர்பாக வாலிபர்கள் மற்றும் ஒர்க்‌ஷாப் ஊழியர்கள் வாக்குவாதம்
    • இதில் ஆத்திரமடைந்த வாலிபர்கள் மதுபாட்டிலை சாலையில் வீசி ரகளையில் ஈடுபட்டனர்

    வடமதுரை:

    அய்யலூர் -திண்டுக்கல் சாலையில் ஒர்க்‌ஷாப் உள்ளது. இங்கு திருச்சியை சேர்ந்த வாலிபர்கள் வாகனத்தை பழுது பார்க்க விட்டு சென்றனர். பின்னர் வாகனத்தை திரும்ப பெற்று அதற்கு கட்டணமாக ரூ.9 ஆயிரத்தை செலுத்தி சென்றனர்.

    அங்குள்ள மது கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்த வாலிபர்கள் பழுது நீக்குவதற்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததாக கூறி ஒர்க்‌ஷாப்பில் வேலை பார்த்தவர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் மது பாட்டிலை சாலையில் வீசி ரகளையில் ஈடுபட்டனர்.

    இதை பார்த்ததும் அப்பகுதி பொதுமக்கள் ஒன்று கூடினர். அவர்கள் வாலிபர்களை அங்கிருந்து செல்லும்படி கூறினர். ஆனால் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டதால் வாலிபர்களை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

    பின்னர் அங்கிருந்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ரகளையில் ஈடுபட்டது திருச்சி தில்லைநகரை சேர்ந்த ஜனார்த்தனன், சின்னமணி, சுரேஷ் என தெரிய வந்தது. இது குறித்து வடமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பசுமை வழிச்சாலைத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும்போது மக்கள் தாக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யும்படி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #ChennaiSalemHighway #MadrasHC
    சென்னை:

    சென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும்போது எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். நிலம் கையகப்படுத்தப்படும்போது தடுத்து நிறுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டனர். சில இடங்களில் போராட்டம் நடத்தியவர்கள் போலீசாரால் தாக்கப்பட்டனர்.



    இந்நிலையில், நிலம் கையகப்படுத்தும்போது தாக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி வழக்கறிஞர் ரத்தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கூறியிருந்தார். அவரது மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றம், தமிழக அரசு 4 வாரத்தில் பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிட்டது. #ChennaiSalemHighway #MadrasHC
    ×