search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 killed"

    காவேரிப்பட்டணம் அருகே சாலையில் செல்லும்போது மின்சாரம் தாக்கி இருவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணத்தில் நேற்று இரவு இதமான மழை பெய்து வந்தது.

    காவேரிபட்டணத்தை அடுத்த கால்வே அள்ளியை சேர்ந்த முனுசாமி (வயது 33) என்பவர் இப்பகுதியில் நிப்பட் கம்பெனி வைத்து நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.

    இவரிடம் கால்வே அள்ளி முத்தூராண் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சரவணன் (வயது 32) என்பவர் வேலைசெய்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 ஆண் குழந்தை உள்ளது.

    இவர்கள் நேற்று இரவு வேலையை முடித்துவிட்டு நிப்பட்டை சரக்கு வண்டியில் ஏற்றுவதற்காக காவேரிப்பட்டணம் வந்துவிட்டு பின்பு இரவு 12.30 மணியளவில் வீடு திரும்பினர். அப்போது கத்தேரி பிரிவுரோடு அருகே பலத்த மழையின் காரணமாக மின்சார கம்பி அறுந்து கீழே விழுந்து கிடந்து உள்ளது. இதனை அறியாத இவர்கள் அந்த வழியாக செல்லும்போது அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர்.

    இறந்தவர்களின் உடல்கள் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக உடல்கள் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுதுரை ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஒரே பகுதியை சேர்ந்த இருவர் பலியாகி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சிறியரக விமானம் வீட்டின் மீது மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
    நியூயார்க்:

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள யோர்பா லிண்டா நகரின் வழியாக பறந்து சென்ற ஒரு சிறியரக விமானம் (உள்ளூர் நேரப்படி) நேற்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் உள்ள வீட்டின் மீது மோதியது.



    மோதிய வேகத்தில் அந்த விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்ததாகவும், இருவர் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்துக்குள்ளான விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர்? உயிரிழந்தவர்கள் யார்? என்பது தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. #Aircraftcrashes #Aircraftcrashesintohouse 
    சோமாலியா தலைநகர் மொகடிஷு அருகில் பயங்கரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 2 பேர் பரிதாபமாக பலியாகினர். #Somaliacarblast
    மொகடிஷு:

    அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக சோமாலியா நாட்டில் இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு மொகடிஷு நகரில் உள்ள பிரபல ஓட்டல் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 14 பேர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், சோமாலியா தலைநகரம்  மொகடிஷுவில் உள்ள பனாதிர் பகுதியில் இன்று பயங்கரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். 
     
    இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 2 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 5-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #Somaliacarblast 
    பூந்தமல்லி அருகே தனியார் நிறுவனத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இரு தொழிலாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    சென்னை:

    சென்னை பூந்தமல்லி அருகே தனியார் நிறுவனத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி விவேகானந்தன், வீரா என்ற தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

    இதுதொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மகாராஷ்டிராவின் அந்தேரியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #AndheriHospital #HospitalFireAccident
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தின் அந்தேரி பகுதியில் இ.எஸ்.ஐ மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அதில் பலர் உள் மற்றும் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், அந்தேரி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் இன்று மாலை 4 மணியள்வில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்த 100க்கு மேற்பட்ட நோயாளிகள் உடனடியாக மீட்கப்பட்டனர். ஆனாலும், இந்த தீவிபத்தில் 5 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.



    தகவலறிந்து தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் போராடி தீயை அணைத்தனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர். #AndheriHospital #HospitalFireAccident
    சீனாவில் உள்ள கார் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் பலியாகினர். மேலும் 24 பேர் காயம் அடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். #ChinaBlast #CarFactoryBlast
    பெய்ஜிங்:

    சீனாவின் ஜிலின் மாகாணத்தில் டாங்பெங் பகுதியில் கார் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று இந்திய நேரப்படி 11.40 மணியளவில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் தொழிற்சாலை முழுவதும் தீ பரவியது. இதையடுத்து, 220 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 150க்கு மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.



    இந்த விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 24 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். #ChinaBlast #CarFactoryBlast
    அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் உள்ள குரோஜர் சூப்பர் மார்க்கெட்டில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியது. #SuperMarketFiring
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் உள்ள கெண்டகி மாகாணத்தின் லூயிஸ்வில்லே பகுதியில் அமைந்துள்ளது குராகர் சூப்பர் மார்க்கெட்.

    நேற்று மதியம் 3 மணியளவில் இந்த சூப்பர் மார்க்கெட்டில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையானதை வாங்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த மர்ம நபர் சூப்பர் மார்க்கெட்டில் திடீரென நுழைந்தான். கையில் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டு தாக்குதல் நடத்தினான்.



    இந்த திடீர் தாக்குதலில் அங்கிருந்த 2 பேர் பரிதாபமாக பலியாகினர்.  மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    பட்டப்பகலில் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. #SuperMarketFiring
    மேற்கு வங்காளத்தின் சந்திரகாசி ரெயில் நிலைய நடைமேடையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் இரங்கல் தெரிவித்துள்ளார். #Santragachhi #Stampede #PiyushGoyal
    புதுடெல்லி:

    மேற்கு வங்காளம் மாநிலம் ஹவுராவில் சந்திரகாசி ரெயில் நிலையம் அமைந்துள்ளது. நேற்று இரவு இந்த ரெயில் நிலையத்தில் இரண்டு ரெயில்கள் ஒரே சமயத்தில் வந்துள்ளன.

    ரெயில்களில் இருந்து இறங்கிய பயணிகள் நடைமேம்பாலத்தில் திபுதிபுவென ஏறினர். அப்போது திடீரென அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 14 பேர் காயமடைந்தனர்.

    தகவலறிந்த மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி, சந்திரகாசி ரெயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.



    இந்நிலையில், சந்திரகாசி கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் ஆழந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், சந்திரகாசி ரெயில் நிலைய நடைமேடை கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இதில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என  பதிவிட்டுள்ளார். #Santragachhi #Stampede #PiyushGoyal
    மேற்குவங்காளம் மாநிலத்தின் சந்திரகாசி ரெயில் நிலைய நடைமேடையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Santragachhi #Stampede
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலம் ஹவுராவில் சந்திரகாசி ரெயில் நிலையம் அமைந்துள்ளது. இன்று இரவு இந்த ரெயில் நிலையத்தில் இரண்டு ரெயில்கள் ஒரே சமயத்தில் வந்துள்ளன.

    ரெயில்களில் இருந்து இறங்கிய பயணிகள் நடைமேம்பாலத்தில் திபுதிபுவென ஏறினர். அப்போது திடீரென அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 14 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து அங்கு போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.



    மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி, சந்திரகாசி ரெயில் நிலையத்தின் நடைமேடையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

    மேலும், நெரிசலில் சிக்கி இறந்தோர் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். #Santragachhi #Stampede
    வெடிகுண்டு வீசி 2 பேர் கொலை செய்யப்பட்டதால் ராமநாதபுரத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். #bombing #Murder

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை கிராமத்தை சேர்ந்தவர்கள் கார்த்திக் (வயது 37), விக்கி என்ற விக்னேஷ். இவர்கள் மீது கொலை, மிரட்டல் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

    கடந்த மே மாதம் வாலாந்தரவையை சேர்ந்த விஜய், பூமி ஆகிய 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கார்த்திக் உள்பட 20 பேரை போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

    கைதானவர்கள் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ததை தொடர்ந்து குண்டர் சட்டதில் கைதானது ரத்து செய்யப்பட்டது. நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    அதன்படி கார்த்திக் தினமும் கேணிக்கரை போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.

    நேற்று மாலை கார்த்திக் தனது கூட்டாளி விக்கியுடன் கேணிக்கரை போலீஸ் நிலையத்துக்கு சென்று விட்டு நடந்து வந்து கொண்டு இருந்தார்.


    அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் 2 பேரை ஓட, ஓட விரட்டி வெட்டியும், வெடிகுண்டு வீசியும் படுகொலை செய்தது.

    அங்கிருந்து தப்பிய கொலையாளிகள் சிறிது நேரத்திலேயே நயினார் கோவில் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். அவர்கள் வாலாந்தரவையை சேர்ந்த ரூபன் (25), முரளி (27), பாஸ்கரன் (40), அர்ச்சுணன்(25), முருகேசன்(37) என தெரிய வந்தது. இவர்கள் ஏற்கனவே கொலை செய்யப்பட்ட விஜய், பூமியின் உறவினர்கள் ஆவார்கள்.

    சரணடைந்த 5 பேரிடமும் தனிப்படை போலீசார் விடிய, விடிய விசாரணை நடத்தினர். அப்போது பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்தது தெரிய வந்தது.

    கொலை செய்யப்பட்ட 2 பேரின் உடல்களும் பிரேதபரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவர்களது உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

    எனவே அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் இருக்க அரசு ஆஸ்பத்திரியில் 300-க் கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வஜ்ரா வாகனமும் நிறுத்தப்பட்டுள்ளது.

    வாலாந்தரவையில் பதட்டமான சூழ்நிலை உள்ளதால் அரசு பஸ் இயக்கப்பட வில்லை. கடைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் போலீசார் அதிக அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  #bombing #Murder

    பிரான்ஸ் நாட்டின் பாரிசில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் கத்தியால் தாக்குதல் நடத்திய ஆசாமி உள்பட 2 பேர் பலியாகினர். #Paris #Knifeattack
    பாரிஸ்:

    பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரிசின் மையத்தில் அமைந்துள்ளது ஒபரா ஹவுஸ். இந்த கட்டிடத்தின் அருகே இன்று ஒரு மர்ம நபர் கண்ணில் தென்படும் நபர்களை எல்லாம் கத்தியால் குத்தி கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டான்.

    இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 



    போலீசார் விடுத்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் கோரத்தாண்டவத்தில் ஈடுபட்ட அந்நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் யார்? காரணம் என்ன? என்பது தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. #Paris #Knifeattack
    ×