search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sewage tank"

    • மோசஸ், தேவன் ஆகியோர் விஷ வாயு தாக்கி பலியானார்கள்.
    • கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.

    திருநின்றவூர்:

    ஆவடி, ஓ.சி.எப். பகுதியில் உள்ள குடியிருப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது தொழிலாளர்கள் மோசஸ், தேவன் ஆகியோர் விஷ வாயு தாக்கி பலியானார்கள். இது தொடர்பாக தேசிய தூய்மைபணியாளர்கள் பாதுகாப்பு ஆணைய தலைவர் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர்.

    மேலும் அவர்கள், ஆவடி மாநகராட்சி அதிகாரிகளிடம் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.

    • சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுவன் உயிரிழந்து விட்டதாக கூறினர்.
    • சிறுவன் வீட்டை விட்டு வெளியே சென்று பக்கத்து வீட்டு சிறுவனுடன் விளையாடினான்.

    தாராபுரம்:

    தாராபுரம் பழனி ரோட்டில் தாசநாயக்கன்பட்டி அருகே தனியார் டெக்ஸ்டைல் மில் உள்ளது . இந்த மில்லில் வட மாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர் தொழிலாளர்களுக்கான குவாட்டர்ஸ் அதே பகுதியில் உள்ளது.

    ஒடிசா மாநிலம் சாந்தாமாஜி என்பவர் குடும்பத்துடன் குவாட்டர்ஸ்ஸில் தங்கிவேலை செய்து வருகிறார. மதிய உணவு வேளையில் சாந்தாமாஜி வீட்டுக்கு சென்றபோது அவரது மூன்று வயது சிறுவன் வீட்டை விட்டு வெளியே சென்று பக்கத்து வீட்டு சிறுவனுடன் விளையாடினான்.

    அப்போது அங்கு இருந்த கழிவு நீர் தொட்டி மீது ஏறி இருவரும் குதித்து விளையாடிக் கொண்டிருந்தனர். திடீரென தொட்டி மூடி உடைந்து இருவரும் கழிவு நீர் தொட்டியில் விழுந்தனர். அப்பகுதியில் இருந்த தொழிலாளர்கள் உடனடியாக இருவரையும்மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர்.

    சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் சந்தாமாஜியின்3 வயது மகன் உயிரிழந்து விட்டதாக கூறினர். மற்றொரு சிறுவனுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். இறந்த சிறுவனின் பிணம் பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து தாராபுரம் அலங்கியம்எஸ்.ஐ சுந்தர்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • செந்தில் குமாருக்கு மனைவி மற்றும் 8 வயதில் ஜெயஸ்ரீ என்ற மகள் இருந்தார்.
    • மணலில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி எதிர்பாராத விதமாக அங்கு இருந்த தண்ணீரில் விழுந்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி ராமநத்தம் அருகே தட்சூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார். ஆட்டோ டிரைவர். இவருக்கு மனைவி மற்றும் 8 வயதில் ஜெயஸ்ரீ என்ற மகள் இருந்தார். ஜெயஸ்ரீ அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று செந்தில் குமார் மற்றும் இவரது மனைவி வேலைக்காக வெளியில் சென்றுவிட்டனர். இதனையடுத்து வேலைக்கு சென்ற செந்தில்குமார் மனைவி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டிலிருந்த மகள் ஜெயஸ்ரீயை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பல இடங்களில் தேடினார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    செந்தில்குமார் அதே பகுதியில் புதியதாக வீடு ஒன்று கட்டிவருகிறார். உடனே அங்கு சென்று ஜெயஸ்ரீயை தேடினார். அப்போது அந்த வீட்டில்கழிவு நீர் தொட்டி கட்டி அதில் தண்ணீர் நிரப்பப்பட்டு இருந்தது. வீட்டின் அருகே வேலைக்காக மணல் கொட்டி வைக்கப்பட்டு இருந்தது. அந்த மணலில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி எதிர்பாராத விதமாக அங்கு இருந்த தண்ணீரில் விழுந்து கிடந்தார்.

    இதை பார்த்த ஜெயஸ்ரீயின் தாய் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் ஜெயஸ்ரீயை மீட்டு தண்ணீரில் விழுந்ததால் மயக்கத்தில் இருக்கலாம் என்று ராமநத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு ஜெயஸ்ரீயை பரிசோதித்த டாக்டர் ஜெயஸ்ரீ ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெயஸ்ரீ உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடியிருப்பு பகுதியில் நீண்ட நாட்களாக மூடப்படாத கழிவு நீர் தொட்டி உள்ளது.
    • இந்த தொட்டி நான்கு அடி ஆழம் உள்ளதால் குழந்தைகள் தவறி விழந்தால் உயிரிழப்பு ஏற்படும் சூழல் உள்ளது,

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மூங்கில்துறைப்பட்டு போலீஸ் நிலையம் அருகே உள்ள தேவி நகர் குடியிருப்பு பகுதியில் நீண்ட நாட்களாக மூடப்படாத கழிவு நீர் தொட்டி உள்ளது.

    இதன் மூலமாக அந்த பகுதியில் உள்ள குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்படும் அவலம் உள்ளது. மேலும் இந்த தொட்டி நான்கு அடி ஆழம் உள்ளதால் குழந்தைகள் தவறி விழந்தால் உயிரிழப்பு ஏற்படும் சூழல் உள்ளதால், அக் கழிவு நீர் தொட்டியை கான்கிரீட் பலகையால் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாக மூங்கில்துறைப்பட்டு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தொகுதி செயலாளர் சிராஜ்தீன் கோரிக்கை வைத்துள்ளார்.

    • பெருமாளுக்கு சொந்தமான பசுமாடு 10 அடி ஆழம் உள்ள கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிருக்கு போராடியது.
    • தீயணைப்பு துறையினர் பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகே உள்ள சத்தியவாணி முத்துநகர் பண்பொழி பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவருக்கு சொந்தமான பசுமாடு 10 அடி ஆழம் உள்ள கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிருக்கு போராடியது. இதுகுறித்து செங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து அங்கு விரைந்த நிலைய அலுவலர் சிவசங்கரன் மற்றும் சிறப்பு நிலைய அலுவலர் மாரியப்பன், சண்முகவேல், பூபாலன், செந்தில்குமார், இசக்கிதுரை, ஜெகதீஷ் உள்ளிட்ட குழுவினர் கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசுமாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.துரிதமாக செயல்பட்டு பசுவை மீட்ட தீயணைப்பு துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.

    பூந்தமல்லி அருகே தனியார் நிறுவனத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இரு தொழிலாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    சென்னை:

    சென்னை பூந்தமல்லி அருகே தனியார் நிறுவனத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி விவேகானந்தன், வீரா என்ற தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

    இதுதொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர் பி.ஆர்.சி. டெப்போ அருகே கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த பசுமாட்டை தீயணைப்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் பி.ஆர்.சி. டெப்போ அருகே டான்பெட் உரகிட்டங்கி உள்ளது. இங்குள்ள கழிவுநீர் தொட்டிக்குள் விருதுநகர் தாமரை தெருவை சேர்ந்த முத்து என்பவரது பசுமாடு விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த விருதுநகர் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் நிலைய அலுவலர் முருகன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் அங்கு வந்தனர்.

    கிழக்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஆதீஸ்வரன் மற்றும் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் அரை மணி நேரம் போராடி பசுமாட்டை பத்திரமாக மீட்டனர். பசுவை உயிருடன் மீட்டவர்களை அப்பகுதி மக்கள் பாராட்டினர். கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த பசுமாடு சினையாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 
    கழிவுநீர் தொட்டி சுத்திகரிப்பின்போது இறந்த தொழிலாளர் குடும்பத்துக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.10 லட்சம் இழப்பீடு தொகையை வழங்கமாறு தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தவிட்டது.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில் மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குனர் நாராயணன், தாக்கல் செய்த மனுவில், ‘மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலை தற்போதும் நீடித்து வருகிறது. கழிவுநீர் தொட்டி, பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி பலர் உயிரிழந்துள்ளனர். கடந்த 1993-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை 100-க்கும் மேற்பட்டோர் இந்த பணியின் போது பலியாகி உள்ளனர். இவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கவும், மறுவாழ்வு கிடைக்கவும் உத்தவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    கழிவுநீர் தொட்டி, பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்யும்போது உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அதே வேலையில் ஈடுபடுவதை தடுக்க அரசு மாற்று வேலை வழங்க வேண்டும் என்றும் கடந்த 2010-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    ஆனால், இந்த இழப்பீட்டுத் தொகையை வழங்குவதில் தமிழக அரசு தாமதம் செய்கிறது. இதுபோன்ற ஆபத்தான தொழிலைச் செய்பவர்களைத் தடுக்க வேண்டியது மாநில அரசின் கடமையாகும். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீட்டு தொகையை 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து 8 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×