search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cow rescue"

    • மேய்ச்சலுக்காக விட்டிருந்த போது பரிதாபம்
    • தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அருகே மேல் அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (வயது 40). இவர் வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் மாடுகளை விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார்.

    அப்போது அருகில் இருந்த சுமார் 80 அடி ஆழமுள்ள கிணற்றில பசு மாடு தவறி விழுந்தது.

    இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் விழுந்த பசுமாட்டை மீட்டனர்.

    • மேய்ச்சலுக்காக விட்டிருந்த போது விபரீதம்
    • 2 மணி நேரம் போராடி மீட்டனர்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த கத்தாரிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 35), இவருக்கு சொந்தமாக அப்பகுதியில் விவசாய நிலம் உள்ளது. அதேபோல், சொந்தமாக மாடுகளை பராமரித்து வருகிறார்.

    இந்நிலையில், வழக்கம்போல் பசுவை நிலத்தில் மேய்ச்சலுக்காக விட்டு இருந்தார். அப்போது, அருகே இருந்த சுமார் 60 அடி ஆழம் கொண்ட கிணற்றில் பசு மாடு தவறி விழுந்தது.

    உடனே இதுகுறித்து அந்த பகுதி மக்கள் ஒடுகத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் மகேஷ்வரன் தலைமையிலான வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி பசு மாட்டை உயிருடன் மீட்டனர்.

    • மேய்ச்சலின் போது பரிதாபம்
    • வீட்டில் புகுந்த பாம்பை பிடித்து காப்பு காட்டில் விட்டனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த கொங்கராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் பசு மாடு மேய்ச்சலின் போது, அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தது.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் கண்ணமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு நிலைய அலுவலர் சிவனேசன் மற்றும் படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பசுமாட்டை கிணற்றிலிருந்து கயிறு மூலம் உயிருடன் மீட்டு ராஜேஷிடம் ஒப்படைத்தனர்.

    இதேபோல் 5புத்தூர் கிராமத்தில் பெருமாள் என்பவருக்கு சொந்தமான மாடு, கிணற்றில் தவறி விழுந்தது.

    அந்த பசுமாட்டையும் கண்ணமங்கலம் தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர். மேலும் கணியம்பாடி கிருஷ்ணா நகரில் வசிக்கும் சீனிவாசன் என்பவர் வீட்டில் இருந்த நாக பாம்பையும் தீயணைப்பு படையினர் உயிருடன் பிடித்து கணியம்பாடி காப்பு காட்டில் கொண்டு சென்று விட்டனர்.

    • நடுவலூர் சிவன் கோவில் மானியக்காடு அருகே வசித்து வருபவர் விவசாயி பச்சமுத்து.
    • விவசாயத் தோட்டத்தில் ஆடு, மாடுகளை வைத்து வளர்த்து வருகிறார். இந்த நிலையில் விவசாயத்திற்கு பயன்படுத்தும் 35 அடி ஆழ விவசாய கிணற்றில் அவரது பசுமாடு தவறி விழுந்துவிட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலூர் சிவன் கோவில் மானியக்காடு அருகே வசித்து வருபவர் விவசாயி பச்சமுத்து. இவரது விவசாயத் தோட்டத்தில் ஆடு, மாடுகளை வைத்து வளர்த்து வருகிறார். இந்த நிலையில் விவசாயத்திற்கு பயன்படுத்தும் 35 அடி ஆழ விவசாய கிணற்றில் அவரது பசுமாடு தவறி விழுந்துவிட்டது.

    இதை பார்த்த பச்சமுத்து உடனடியாக கெங்கவல்லி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற கெங்கவல்லி தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி பசுவை கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்.

    • தடுப்புகள் அமைக்க வேண்டும்
    • ெபாதுமக்கள் வலியுறுத்தல்

    நெமிலி:

    பனப்பாக்கம் பேரூராட்சி, அண்ணா நகரில் வசித்து வருபவர் வேலு (வயது 30). இவருக்கு சொந்தமான பசு மாடு நேற்று அண்ணா நகரில் உள்ள கழிவு நீர் கால்வாயில் தவறிவிழுந் துவிட்டது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    பின்பு பொக்லைன் எந்திரம் வரவழைக்கபட்டு சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு கழிவுநீர் கால்வாயின் ஒரு பக்கத்தை உடைத்து பசுவை மீட்டனர். பசுவை மீட்கும் போது அதன் ஒரு கொம்பு உடைந்ததால் கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கழிவுநீர் கால்வாய் ஓரங்களில் சிறிய தடுப்புகள் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    • ஆலங்குடியில் கழிவு நீர் தொட்டியில் விழுந்த பசுமாடு மீட்கப்பட்டது
    • நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் பசுமாடு மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள எம்.ராசியமங்கலம் கிராமத்தில் கோபி என்பவருக்கு சொந்தமான கழிவு நீர் தொட்டியில் சங்கர் என்பவருக்கு சொந்தமான பசு மாடு தவறி விழுந்தது. பொதுமக்களால் மீட்க முடியாத நிலையில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் பசுமாடு மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். தீயணைப்புத்துறை வீரர் பாண்டி செல்வன் கழிவு நீர் தொட்டியில் இறங்கி கயிறு கட்டி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பசு மாட்டை கயிற்றில் பிணைத்தார்.பின்னர் கழிவு நீர் தொட்டியில் இருந்த பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் சேர்ந்து தூக்கி வெளியில் கொண்டு வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் மாட்டை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.


    • கயிறு அறுந்ததால் விபரீதம்
    • 1 மணி நேரம் போராடி மீட்டனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளியை அடுத்த சி.கே. ஆசிரமம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 60). இவருக்கு சொந்தமான காளை நேற்று பூரி கான் மானி மிட்டா பகுதியில் உள்ள நிலத்தில் மேய்ச்சலுக்காக கட்டி வைத்திருந்தார்.

    இந்த நிலையில் கட்டி வைத்திருந்த மாட்டின் கயிறு திடீரென அறுந்து அங்கிருந்து ஓடியது. பின்னர் அருகில் உள்ள 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இதுகுறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் 1 மணி நேரம் போராடி கயிறு கட்டி மாட்டை உயிருடன் மீட்டனர்.

    • பெருமாளுக்கு சொந்தமான பசுமாடு 10 அடி ஆழம் உள்ள கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிருக்கு போராடியது.
    • தீயணைப்பு துறையினர் பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகே உள்ள சத்தியவாணி முத்துநகர் பண்பொழி பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவருக்கு சொந்தமான பசுமாடு 10 அடி ஆழம் உள்ள கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிருக்கு போராடியது. இதுகுறித்து செங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து அங்கு விரைந்த நிலைய அலுவலர் சிவசங்கரன் மற்றும் சிறப்பு நிலைய அலுவலர் மாரியப்பன், சண்முகவேல், பூபாலன், செந்தில்குமார், இசக்கிதுரை, ஜெகதீஷ் உள்ளிட்ட குழுவினர் கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசுமாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.துரிதமாக செயல்பட்டு பசுவை மீட்ட தீயணைப்பு துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கிணற்றில் விழுந்த பசு மாடு தீயணைப்பு வீரர்கள், பொதுமக்களால் உயிருடன் மீட்கப்பட்டது.
    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பெரமச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் அம்மணி. விவசாயியான இவரது கணவர் கிருஷ்ணன் இறந்துவிட்ட நிலையில் 2 பசுமாடுகளை வளர்த்து வருகிறார். இதன் மூலம் பால் வியாபாரமும் செய்து வருகிறார். இவர் வளர்த்து வந்த 4 மாத கர்ப்பிணியான சினை பசுமாடு ஒன்றை அவரது விவசாய கிணற்றின் ஓரமாக உள்ள வயல் வரப்பில் மேய்ச்சலுக்காக கட்டியுள்ளார். அங்கே புற்களை மேய்ந்த மாடு கிணற்றின் திட்டுகளில் செழிப்பாக உள்ள புற்களை மேய்வதற்காக கிணற்று திட்டிற்கு சென்றுள்ளது.

    அப்போது நிலை தடுமாறிய சினை பசுமாடு தவறி கிணற்றில் விழுந்தது. சுமார் 60 அடி ஆழம் கொண்ட இந்த கிணற்றில் சுமார் 20 அடி ஆழத்திற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. இந்தநிலையில் தண்ணீரில் விழுந்த பசுமாடு மேலே ஏறமுடியாமல் தண்ணீரில் தத்தளித்துள்ளது. இதையறிந்த பெண் விவசாயி அம்மணி அக்கம் பக்கத்தினரை அழைத்து பசு மாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால், பசு மாட்டை மீட்க முடியாத நிலையில் சினைமாடு தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடி வந்தது. இதையடுத்து உடனடியாக ஓமலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள் அதிரடியாக கிணற்றில் குதித்தனர். பின்னர் பசுமாட்டை மீட்க கிணற்றில் போடப்பட்ட கயிறுகளை கொண்டு பசுமாட்டை பாதுகாப்பாக கட்டினர்.

    இதையடுத்து பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கையிற்றை மேலே இழுத்து பசுமாட்டை உயிருடன் மீட்டனர். மேலே வந்த மாட்டிற்கு முதலுதவிகள் அளிக்கப்பட்டது. சிறுதுநேரம் படுத்தே இருந்த பசுமாடு எழுந்து நடக்க தொடங்கியது. சினை மாடு உயிருடன் மீட்கப்பட்டதை தொடர்ந்து பெண் விவசாயி அம்மணியும், பொதுமக்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும், தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டுக்களும் தெரிவித்தனர். தொடர்ந்து லேசான காயமடைந்த பசுமாட்டிற்கு கால்நடை மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

    ×