60 அடி கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு

கயிறு அறுந்ததால் விபரீதம் 1 மணி நேரம் போராடி மீட்டனர்
60 அடி கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு
Published on

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளியை அடுத்த சி.கே. ஆசிரமம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 60). இவருக்கு சொந்தமான காளை நேற்று பூரி கான் மானி மிட்டா பகுதியில் உள்ள நிலத்தில் மேய்ச்சலுக்காக கட்டி வைத்திருந்தார்.

இந்த நிலையில் கட்டி வைத்திருந்த மாட்டின் கயிறு திடீரென அறுந்து அங்கிருந்து ஓடியது. பின்னர் அருகில் உள்ள 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இதுகுறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் 1 மணி நேரம் போராடி கயிறு கட்டி மாட்டை உயிருடன் மீட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com