கெங்கவல்லி அருகே கிணற்றில் விழுந்த பசு மீட்பு

நடுவலூர் சிவன் கோவில் மானியக்காடு அருகே வசித்து வருபவர் விவசாயி பச்சமுத்து.விவசாயத் தோட்டத்தில் ஆடு, மாடுகளை வைத்து வளர்த்து வருகிறார். இந்த நிலையில் விவசாயத்திற்கு பயன்படுத்தும் 35 அடி ஆழ விவசாய கிணற்றில் அவரது பசுமாடு தவறி விழுந்துவிட்டது.
கெங்கவல்லி அருகே கிணற்றில் விழுந்த பசு மீட்பு
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலூர் சிவன் கோவில் மானியக்காடு அருகே வசித்து வருபவர் விவசாயி பச்சமுத்து. இவரது விவசாயத் தோட்டத்தில் ஆடு, மாடுகளை வைத்து வளர்த்து வருகிறார். இந்த நிலையில் விவசாயத்திற்கு பயன்படுத்தும் 35 அடி ஆழ விவசாய கிணற்றில் அவரது பசுமாடு தவறி விழுந்துவிட்டது.

இதை பார்த்த பச்சமுத்து உடனடியாக கெங்கவல்லி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற கெங்கவல்லி தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி பசுவை கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com