கிணற்றில் விழுந்த பசு மாடு மீட்பு

மேய்ச்சலுக்காக விட்டிருந்த போது பரிதாபம்தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர்
கிணற்றில் விழுந்த பசு மாடு மீட்பு
Published on

அணைக்கட்டு:

ஒடுகத்தூர் அருகே மேல் அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (வயது 40). இவர் வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் மாடுகளை விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார்.

அப்போது அருகில் இருந்த சுமார் 80 அடி ஆழமுள்ள கிணற்றில பசு மாடு தவறி விழுந்தது.

இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் விழுந்த பசுமாட்டை மீட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com