என் மலர்

  நீங்கள் தேடியது "Postmortem"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  போலீஸ் என்கவுண்ட்டரில் பலியான ரவுடி ஆனந்தன் பிரேத பரிசோதனை மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் நேற்று நடந்தது.
  சென்னை:

  சென்னை ராயப்பேட்டையில் போலீஸ்காரர் ராஜவேலுவை (வயது 35) அரிவாளால் வெட்டிய வழக்கில் ராயப்பேட்டை பி.எம்.தர்கா பகுதியை சேர்ந்த 9 ரவுடிகள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். இதில் ஆனந்தன் (25) என்ற ரவுடி, போலீஸ்காரர் ராஜவேலுவின் ‘வாக்கி-டாக்கி’யை திருடி தரமணி பாலிடெக்னிக் கல்லூரி அருகே உள்ள புதர் பகுதியில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

  இதையடுத்து கோட்டூர்புரம் உதவி கமிஷனர் சுதர்சன், சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா ஆகியோர் ரவுடி ஆனந்தனை மட்டும் தனியாக போலீஸ் ஜீப்பில் தரமணி பகுதிக்கு அழைத்து சென்றனர்.

  சம்பவ இடத்தில் ‘வாக்கி-டாக்கி’யை எடுக்கும்போது, ரவுடி ஆனந்தன் அங்கு மறைத்து வைத்திருந்த அரிவாளால் திடீரென்று சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜாவின் கையை வெட்டினார். பின்னர் உதவி கமிஷனர் சுதர்சனத்தையும் தாக்க முயன்றார். இதையடுத்து அவர் மீது ‘என்கவுண்ட்டர்’ பிரயோகம் நடத்தப்பட்டது. உதவி கமிஷனர் சுதர்சன் ரவுடி ஆனந்தனை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அவரது இடதுபக்க மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதில் அவர் பலியானார்.

  இதையடுத்து அவரது உடல் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் இரவோடு இரவாக அவரது உடல் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை அறைக்கு மாற்றப்பட்டது.


  ரவுடி ஆனந்தன் உடலை பார்ப்பதற்காக வந்த மாஜிஸ்திரேட்டு சாண்டில்யன்


  தமிழகத்தில் நடைபெறும் ‘என்கவுண்ட்டர்’ சம்பவங்களை பொறுத்தவரையில் அரசு சார்பில் நீதி விசாரணைக்கு உத்தரவிடப்படும். அதன்படி ரவுடி ஆனந்தன் என்கவுண்ட்டர் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சைதாப்பேட்டை கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு சாண்டில்யன் நியமிக்கப்பட்டார்.

  அவர் உடனடியாக விசாரணை களத்தில் இறங்கினார். தரமணியில் என்கவுண்ட்டர் நடந்த இடத்தை நேற்று காலை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். மதியம் 12.20 மணியளவில் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டிருந்த ரவுடி ஆனந்தன் உடலை வந்து பார்வையிட்டார். ஆனந்தன் உடலை அவரது சகோதரர் அருண், சித்தப்பா மனோகரன் ஆகியோர் மாஜிஸ்திரேட்டு சாண்டில்யன் அடையாளம் காட்டினார்.

  பின்னர் ஆனந்தன் உடலில் எத்தனை குண்டுகள் பாய்ந்திருக்கிறது? என்பதை கண்டறிவதற்காக முதலில் ‘எக்ஸ்-ரே’ எடுக்கப்பட்டது. இதில் அவரது இடது பக்க மார்பு பக்கத்தின் உள்ளே ஒரு குண்டு மட்டும் இருப்பது தெரியவந்தது.

  இதையடுத்து ரவுடி ஆனந்தனின் பிரேத பரிசோதனை மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை நடந்தது. மாஜிஸ்திரேட்டு சாண்டில்யன் முன்னிலையில் உடல்கூறு அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் செல்வநாயகம், டாக்டர் குகன் ஆகியோர் பிரேத பரிசோதனையை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனை காட்சிகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

  பிரேத பரிசோதனையின்போது ரவுடி ஆனந்தன் உடலை துளைத்திருந்த துப்பாக்கி குண்டு வெளியே எடுக்கப்பட்டு, தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டது. பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

  ரவுடி ஆனந்தன் உடல் பிரேத பரிசோதனையையொட்டி, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அவரது வீடு அமைந்துள்ள ராயப்பேட்டை வி.எம்.தர்கா, ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை அறை வளாகம், ராயப்பேட்டை போலீஸ்நிலையம் ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாமக்கல்லில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தனியார் கார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
  நாமக்கல்:

  நாமக்கல் அருகே உள்ள வசந்தபுரம், வேப்பனம்புதூர் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ்குமார் (வயது 34). இவர் சேலம்- நாமக்கல் ரோட்டில் உள்ள தனியார் கார் விற்பனை நிலையத்தில் அலுவலராக பணியாற்றி வந்தார். வழக்கம்போல் நேற்று இரவு பணியை முடித்துக் கொண்டு சுபாஷ்குமார் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.  அவர் திருச்சி சாலையில் ஆண்டவர் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது எதிரே ஒருவர்  மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்தார்.

  அப்போது இரண்டு மோட்டார் சைக்கிள்களும் திடீரென நேருக்குநேர் பயங்கரமாக மோதியது. இதில் சுபாஷ்குமார் தலை, முகத்தில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபதாக உயிரிழந்தார். 

  விபத்து நடந்த தகவல் அறிந்ததும் நாமக்கல் டவுன் போலீசார் விரைந்து வந்து சுபாஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு தலைமை பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவருக்கு திருமணம் ஆகி அருள்மொழி என்ற மனைவியும், 5 வயதில் ரமணஸ்ரீ என்ற பெண் குழந்தையும், 3 வயதில் விக்னேஷ்குமார் என்ற மகனும் உள்ளனர். 
  விபத்தில் கணவர் இறந்த தகவலை அறிந்ததும் அருள்மொழி மருத்துவமனைக்கு வந்து கதறி அழுதார். இந்த சம்பவத்தினால் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான செல்வசேகர் உடல் அழுகியதாக வெளியான தகவலால் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
  தூத்துக்குடி:

  தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் இறந்தனர். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இதில் 7 பேரின் உடல்கள் ஏற்கனவே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு விட்ட‌து. மீதம் உள்ள ரஞ்சித்குமார், அந்தோணி செல்வராஜ், கிளாட்சன், மணிராஜ், ஜான்சிராணி என்ற வினிதா, ஜெயராமன் ஆகிய 6 பேரின் உடல்கள் இன்னும் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை.

  இந்த நிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டவர்களின் உடல்கள் கோர்ட்டு உத்தரவின்பேரில் பதப்படுத்தி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. அதில் சாயர்புரத்தை அடுத்த பேய்க்குளம் செல்வசேகர் உடல் அழுகியதாக பரபரப்பு தகவல் வெளியானது.

  இந்த தகவல் செல்வசேகரின் உறவினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரது உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி வளாக‌த்தில் திரண்டனர். ஒருவரது உடல் அழுகினால் பிரேத பதப்படுத்தப்பட்ட மற்ற உடல்களையும் பாதிக்கும் என்று மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர். இதுபற்றிய விவரம் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. #ThoothukudiFiring
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருச்சி மாவட்டம் துறையூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்த உடலை சலவைத் தொழிலாளி தைத்த விவகாரம் தொடர்பாக பணியாளர்கள் 3 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
  திருச்சி:

  திருச்சி மாவட்டம் துறையூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட உடலை மருத்துவப் பணியாளர் அல்லாத ஒருவர் ஊசியால் தைப்பது போன்ற வீடியோ கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் மருத்துவப் பணியாளர் அல்லாத ஒருவர் இது போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டது சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

  இதையடுத்து கலெக்டர் ராசாமணி உத்தரவின் பேரில் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் சம்‌ஷத் பேகம் தலைமையிலான குழுவினர் துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

  அப்போது வீடியோ வில் இருந்த நபர் ஆஸ்பத் திரியில் ஒப்பந்த சலவைத் தொழிலாளியாக பணி புரியக்கூடிய வீரமணி (வயது 52) என்பதும், மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தவுடன் அந்த உடலின் பாகங்களை ஒன்று சேர்த்து தைக்ககூடிய பணியில் மருத்துவப் பணியாளர்களுக்கு பதிலாக இவர் அப்பணியை செய்து வந்ததும் தெரியவந்தது.

  இதைத்தொடர்ந்து எத்தனை நாட்களாக இது போன்று நடைபெற்று வருகிறது. தவறு செய்த மருத்துவப் பணியாளர்கள் யார் யார் என்பன உள்ளிட்ட விவரங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் தற்போது 3 மருத்துவப் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

  இது தொடர்பாக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை அதிகாரிகள் கூறும் போது, மருத்துவமனையில் பணியாற்றக்கூடிய சில மருத்துவப் பணியாளர்கள் தாங்கள் செய்ய வேண்டிய வேலையை சலவைத் தொழிலாளியைக் கொண்டு செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  எனவே முதல்கட்டமாக 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விரிவான அறிக்கையை உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மேலும் சிலர் மீதும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்றனர்.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருச்சி அருகே அரசு ஆஸ்பத்திரியில் இறந்தவர் உடலை சலவைத்தொழிலாளி பிரேத பரிசோதனை செய்வது போன்ற வீடியோ வைரலாக பரவியது குறித்து மருத்துவத்துறை அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார்.
  துறையூர்:

  திருச்சி மாவட்டம் துறையூர் அரசு ஆஸ்பத்திரியில் கைலி அணிந்தவாறு ஒருவர் பிரேத பரிசோதனை செய்வதும், பின்னர் உடலை ஊசியால் தைப்பது போன்ற காட்சிகள் செல்போன்களில் வீடியோவாக பரவியது. இந்த காட்சியை பார்த்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

  டாக்டர் செய்ய வேண்டிய பிண பரிசோதனையை கைலி அணிந்து செய்யும் நபர் யார் என்று விசாரித்தனர். விசாரணையில் அவர் துறையூர் அரசு மருத்துவமனையில், 3 மாத ஒப்பந்த கால அடிப்படையில் சலவை தொழிலாளியாக வேலைபார்த்து வரும் துறையூர் அருகே உள்ள வாலீஸ்புரத்தை சேர்ந்த வீரமணி என்பது தெரிய வந்தது.

  டாக்டரின் ஆலோசனையின் பேரில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடலை தைக்கவும், துணியால் சுற்றி பாதுகாப்பாக அனுப்பி வைப்பதற்கும் துறையூர் ஆஸ்பத்திரியில் பெரியசாமி, மதியழகன் என 2 பணியாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் சலவை தொழிலாளி வீரமணி பல மாதங்களாக பிரேத பரிசோதனை போன்ற வேலையை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  இதுபற்றி பொதுமக்கள் கூறும் போது, இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போல் சிகிச்சைகளில் அலட்சியம் காட்டக்கூடாது. அரசு மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிந்து பணியாற்ற வேண்டும். சிகிச்சைக்கான நம்பகத் தன்மையை உறுதிப்படுத்த வேண்டும்.

  பிரேத பரிசோதனை செய்யும் போது டாக்டர் ஒருவரும், மருந்தாளுனர் மற்றும் துப்புரவு பணியாளர் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் பிரேத பரிசோதனை கூடத்தில் சம்பந்தமில்லாத நபர் கைலி அணிந்து கொண்டு பிரேத பரிசோதனை செய்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே சம்பந்தப்பட்ட நபர் மீதும் அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் மாவட்ட நிர்வாகமும் மருத்துவ துறையும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  இந்த நிலையில் சம்பவம் குறித்து திருச்சி மருத்துவத் துறை இயக்குனர் சம்ஷாத் பேகம் விசாரணை நடத்தி வருகிறார். அவர் கூறும் போது, இறந்தவர் உடலை சலவை தொழிலாளி பிரேத பரிசோதனை செய்யும் வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது பற்றி விசாரணை நடத்த உள்ளேன். விசாரணை முடிந்ததும் அதற்கான அறிக்கையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைப்பேன். அவர்கள் நடவடிக்கை எடுப்பது பற்றி முடிவு செய்வார்கள் என்றார். விசாரணையில் பிரேத பரிசோதனை செய்தது சலவை தொழிலாளி என்பது தெரிய வந்தால் துறையூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
  ×