என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிளஸ்-2 மாணவி தற்கொலை
- குறைந்த மதிப்பெண் பெற்றதால் விபரீதம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் அடுத்த பாகாயம் துத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் விமல் ராஜ். இவரது மகள் நித்தியா (வயது 18). இவர் இடையன் சாத்து பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்தார்.
இந்த நிலையில் நேற்று காலை பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவில் நித்தியா குறைந்த மதிப்பெண் பெற்று உள்ளார். இதனால் விரக்தி அடைந்த நித்தியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நித்தியா தூக்கில் பிணமாக தொங்குவதைக் கண்ட அவரது பெற்றோர் கதறி துடித்தனர். இது குறித்து தகவல் அறிந்த பாகாயம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிளஸ்-2 தேர்வு முடிவில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.






