search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Old woman sacrifice"

    • சாம்பிராணி தூவ தீ மூட்டியபோது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் ராஜகோபால் நகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம், ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 71). 2 பேரும் தனியாக வசித்து வந்தனர். சண்முகம் நேற்று சென்னையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றார்.

    ராஜேஸ்வரி மட்டும் வீட்டில் உள் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு தனியாக இருந்தார்.

    இந்த நிலையில் வெள்ளிக்கிழமையான நேற்று ராஜேஸ்வரி வீட்டில் உள்ள பூஜை அறையில் பூஜை செய்து உள்ளார். அப்போது சாம்பிராணி புகை தூவுவதற்காக மரக்குச்சிகளை தீயிட்டு எரித்தார்.

    எதிர்பாராத விதமாக தீ அருகில் இருந்த பஞ்சு மெத்தைக்கு பரவியது. பஞ்சு மெத்தை சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிந்ததால் வீடு முழுவதும் கரும்பு புகை மண்டலம் சூழ்ந்தது.

    தீயை அணைக்க ராஜேஸ்வரி வீட்டில் உள்ள குளியலறைக்கு சென்று தண்ணீர் கொண்டு வந்தார். இருப்பினும் வீடு முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்ததால் ராஜேஸ்வரி மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார்.

    வீட்டில் புகை வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம், பக்கத்தினர் சென்று கதவை திறக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் கதவை திறக்க முடியவில்லை. இது குறித்து அந்த பகுதி மக்கள் குடியாத்தம் போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ராஜேஸ்வரி மயங்கிய நிலையில் கிடந்தார்.

    அப்போது அங்கே வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை மீட்டு பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது.

    ராஜேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து குடியாத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • புதரில் இருந்து கூட்டமாக வந்து அவரை கொட்டியது
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அருகே வட திண்ணலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கனகா(வயது 68). இவர் காலையில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிக்கு சென்றார்.

    பின்னர் வேலை முடிந்து மதியம் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக புதரில் இருந்த குளவிகள் கூட்டமாக வந்து அவரை கொட்டின. இதில் படுகாயம் அடைந்த கனகாவை அருகிலிருந்தவர்கள் மீட்டு கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மேல் சிகிச்சை க்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க ப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    கனகா இறப்பு தொடர்பாக அவரது மகன் விஜய் பிரகாஷ் அனக்காவூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    சப் இன்ஸ்பெக்டர் கன்னி யப்பன் தலைமையிலான போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஸ்சில் இருந்து இறங்கியபோது பரிதாபம்
    • வழக்குப்பதிவு செய்து விசாரணை

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு நிர்மலா நகரை சேர்ந்தவர் ஆரோக்கிய மேரி. இவரது தாயார் பாத்திமா (வயது 63). இவர் திருவண்ணா மலை அருகே மருத்துவாம்பாடியில் உள்ள கணவர் லூர்து சாமியை வாரத்துக்கு ஒருமுறை சந்தித்து விட்டு வருவது வழக்கம்.

    அதன்படி பாத்திமா மருத்துவாம்பாடிக்கு சென்றுவிட்டு மீண்டும் சேத்துப்பட்டுக்கு பஸ்சில் வந்தார். நிர்மலா நகர் வந்தவுடன் பஸ்சின் படிக்கட்டில் இறங்கிய போது திடீ ரென பாத்திமா தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

    உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்ப ட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் சேத்துப்பட்டு போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜவள்ளி (வயது 74). இவர் நேற்று மாலை அருகிலுள்ள வாய்க்காலுக்கு கை, கால்களை கழுவச் சென்றார்.
    • வாய்க்காலில் தவறி விழுந்து முச்சுத் திணறி இறந்து போனார்.

    கடலூர்:

    சிதம்பரம் அடுத்த நாஞ்சவயல் சத்யா நகரைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மனைவி ராஜவள்ளி (வயது 74). இவர் நேற்று மாலை அருகிலுள்ள வாய்க்காலுக்கு கை, கால்களை கழுவச் சென்றார். வயது முதிர்வு காரணமாக வாய்க்காலில் தவறி விழுந்து முச்சுத் திணறி இறந்து போனார். அங்கு சென்றவர்கள் இவரது வீட்டிற்கு தகவல் கொடுத்தனர்

    . சம்பவ இடத்திற்கு வந்த இவரது மருமகள் பாரதி சிதம்பரம் தாலுக்கா போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். புகாரின் பேரில் மூதாட்டியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வேன் சற்றும் எதிர்பாரா நேரத்தில் பூங்காவனத்தில் மீது மோதியது.
    • பூங்காவனம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் தாலுக்கா மாமந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். விவசாயம் செய்து வரும் இவரின் மனைவி பூங்காவனம் (வயது 70). இவர் நேற்று மாலை மடப்பட்டு பகுதிக்கு சென்று வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி கொண்டு நடந்தே வீடு திரும்புகிறார். அப்போது இரவு 7 மணியளவில் திருச்சியில் இருந்து சென்னை மார்க்கமாக வந்த வேன் சற்றும் எதிர்பாரா நேரத்தில் பூங்காவனத்தில் மீது மோதிவிடுகிறது. இதில் தூக்கிவீசப்பட்ட பூங்காவனம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்து விடுகிறார்.

    இது குறித்த புகாரின் பேரில் விபத்து நடந்த மடப்பட்டு ஐயனார் கோவில் அருகில் விரைந்து வந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் விபத்தை ஏற்படுத்திய வேனை பறிமுதல் செய்தனர். இதில் விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்தவர் சதிஷ் (35) என்பவர் வேனை ஓட்டி வந்தது தெரியவந்தது. டிரைவரை கைது செய்த போலீசார் வேனை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். மேலும், சாலையில் சிதறிக்கிடந்த உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • சிதம்பரம் அருகே கனமழைக்கு சுவர் இடிந்து மூதாட்டி பலியானார்.
    • கடந்த 2 நாட்களாக சிதம்பரம் பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள நஞ்சமகத்துவாழ்க்கை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது தாயார் கலியம்மாள் (வயது 70). இவர் தனியாக வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களாக சிதம்பரம் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இவரது வீட்டில் சுவர் நனைந்து இருந்தது. நேற்று திடீரென பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதில் கலி யம்மாள் இடிபாடுகளுக்குள் சிக்கினார்.

    அவர் உயிர் பிழைக்க கூச்சல்போட்டார். சத்தம்கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். உடனே அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். அவரை பரி சோதித்த டாக்டர்கள் கலி யம்மாள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தில்லை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • முனியம்மாள் திருக்கோவிலூரில் உள்ள பெருமாள் கோவிலில் நடைபெறும் பஜனைக்காக சென்றார்.
    • போலீசார் விரைந்து சென்று முனியம்மாளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருவண்ணாமலை மாவட்டம், பெரும்குளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது தாய் முனியம்மாள் (வயது87). இவர் திருக்கோவிலூரில் உள்ள பெருமாள் கோவிலில் நடைபெறும் பஜனைக்காக சென்றார். அப்போது அந்த பகுதியில் ஓடும் தென்பெண்ணை ஆற்றில் முனியம்மாள் தனியாக இறங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக முனியம்மாள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்.

    அதிர்ச்சி அடைந்த அவர் உயிர்பிழைக்க கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். ஆனால் அவர் தண்ணீரில் அடித்துசெல்லப்பட்டார். இதுகுறித்து திருக்கோ விலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல்அறிந்த போலீசார் விரைந்து சென்று முனிய ம்மாளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரியபாலம் அருகே முனியம்மாள் உடல் கரை ஒதுங்கிக் கிடந்தது. உடலை கைப்ப ற்றிய போலீசார் பிரேத பரிசோ தனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருக்கோ விலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையை கடக்க முயன்றபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ராமசாமி தெருவை சேர்ந்தவர் லட்சுமி ( வயது 70 ) .

    இவர் நேற்று முன்தினம் ஆற் காடு அண்ணா சிலை அருகே சாலையை கடக்க முயன்றார. அப்போது அந்த வழியாக வந்த லாரி அவர் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக் கத்தினர் மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .

    பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனும திக்கப்பட் டார். அங்கு சிகிச்சை பல னின்றி லட் சுமி பரிதாப மாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆற் காடு டவுன் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • மயிலம் அருகே ரயில் மோதி மூதாட்டி பலியானார்.
    • காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டின் அருகே உள்ள ரயில் பாதையை கடக்க முயன்றுள்ளார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் அருகே மயிலம் போலீஸ் சரகம் சின்ன நெற்குணம் கிரா மத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. அவரது மனைவி குப்பம்மாள் (வயது70). இவர் இன்று அதி காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டின் அருகே உள்ள ெரயில் பாதை–யை கடக்க முயன்றுள்ளார். அப்போது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற ெரயில் மூதாட்டி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு மூதாட்டி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு ெரயில்வே இரும்பு பாதை போலீசார் மூதாட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • உசிலம்பட்டி அருகே வாகனம் மோதி மூதாட்டி பலியானார்.
    • இதுகுறித்து உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி அருகே உள்ள முத்தையன்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி சீனியம்மாள் (வயது 70).

    இவர் அேத பகுதியில் உள்ள கல்லூரி மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சீனியம்மாள் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சாலையில் நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக பெருமாயி மீது மோதியது.
    • படுகாயம் அடைந்த பெருமாயியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் சூரமங்கலம் அருகே உள்ள பழையூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் இடும்ப கவுண்டர். இவரது மனைவி பெருமாயி (வயது 68).

    சம்பவத்தன்று இவர் பழையூர் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த ஒரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக பெருமாயி மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த பெருமாயியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பெருமாயி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்த புகாரின்பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×