சிதம்பரம் அருகே கனமழைக்கு சுவர் இடிந்து மூதாட்டி பலி

சிதம்பரம் அருகே கனமழைக்கு சுவர் இடிந்து மூதாட்டி பலியானார்.கடந்த 2 நாட்களாக சிதம்பரம் பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
சிதம்பரம் அருகே கனமழைக்கு சுவர் இடிந்து மூதாட்டி பலி
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள நஞ்சமகத்துவாழ்க்கை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது தாயார் கலியம்மாள் (வயது 70). இவர் தனியாக வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களாக சிதம்பரம் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இவரது வீட்டில் சுவர் நனைந்து இருந்தது. நேற்று திடீரென பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதில் கலி யம்மாள் இடிபாடுகளுக்குள் சிக்கினார்.

அவர் உயிர் பிழைக்க கூச்சல்போட்டார். சத்தம்கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். உடனே அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். அவரை பரி சோதித்த டாக்டர்கள் கலி யம்மாள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தில்லை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com