மடப்பட்டு அருகே வேன் மோதி மூதாட்டி பலி

வேன் சற்றும் எதிர்பாரா நேரத்தில் பூங்காவனத்தில் மீது மோதியது.பூங்காவனம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார்.
மடப்பட்டு அருகே வேன் மோதி மூதாட்டி பலி
Published on

கள்ளக்குறிச்சி:

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் தாலுக்கா மாமந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். விவசாயம் செய்து வரும் இவரின் மனைவி பூங்காவனம் (வயது 70). இவர் நேற்று மாலை மடப்பட்டு பகுதிக்கு சென்று வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி கொண்டு நடந்தே வீடு திரும்புகிறார். அப்போது இரவு 7 மணியளவில் திருச்சியில் இருந்து சென்னை மார்க்கமாக வந்த வேன் சற்றும் எதிர்பாரா நேரத்தில் பூங்காவனத்தில் மீது மோதிவிடுகிறது. இதில் தூக்கிவீசப்பட்ட பூங்காவனம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்து விடுகிறார்.

இது குறித்த புகாரின் பேரில் விபத்து நடந்த மடப்பட்டு ஐயனார் கோவில் அருகில் விரைந்து வந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் விபத்தை ஏற்படுத்திய வேனை பறிமுதல் செய்தனர். இதில் விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்தவர் சதிஷ் (35) என்பவர் வேனை ஓட்டி வந்தது தெரியவந்தது. டிரைவரை கைது செய்த போலீசார் வேனை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். மேலும், சாலையில் சிதறிக்கிடந்த உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com