என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aircraft crashes"

    ராஜஸ்தான் மாநிலத்தின் சிரோஹி மாவட்டத்தில் இன்று எம்.ஐ.ஜி.27 ரகப் போர் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் அதில் இருந்த விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். #IAFaircraft #MiG27aircraft #MiG27crashes
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக இன்று காலை எம்.ஐ.ஜி.27 ரகப் போர் விமானம் புறப்பட்டு சென்றது. 

    பயிற்சியின் இடையில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் செங்குத்தாக கீழ்நோக்கி பாய்ந்து சிரோஹி மாவட்டத்தில் உள்ள கோடானா கிராமத்தில் ஒரு வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது.



    போர் விமானம் தரையில் மோதுவதற்குள் அதில் இருந்த விமானி பாரசூட் உதவியுடன் கீழே குதித்து உயிர் தப்பினார். இந்த விபத்துக்கான காரணம் தொடர்பாக விமானப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த ஆண்டில் ஒன்பதாவது முறையாக பயிற்சியின்போது போர் விமானங்கள் கீழே விழுந்து நொறுங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. #IAFaircraft #MiG27aircraft #MiG27crashes
    அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சிறியரக விமானம் வீட்டின் மீது மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
    நியூயார்க்:

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள யோர்பா லிண்டா நகரின் வழியாக பறந்து சென்ற ஒரு சிறியரக விமானம் (உள்ளூர் நேரப்படி) நேற்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் உள்ள வீட்டின் மீது மோதியது.



    மோதிய வேகத்தில் அந்த விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்ததாகவும், இருவர் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்துக்குள்ளான விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர்? உயிரிழந்தவர்கள் யார்? என்பது தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. #Aircraftcrashes #Aircraftcrashesintohouse 
    ×