என் மலர்
நீங்கள் தேடியது "stampade"
- பெங்களூரு சின்னசாமி மைதானத்திள் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
- இச்சம்பவத்துக்கு பிரதமர் மோடி, முதல் மந்திரி சித்தராமையா உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர்.
பெங்களூரு,
பெங்களூரு சின்னசாமி மைதானத்திள் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடி, முதல் மந்திரி சித்தராமையா உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில், பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே ஆர்.சி.பி. அணியின் ஐ.பி.எல். வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட துயரமான கூட்ட நெரிசல் சம்பவம் வேதனை அளிக்கிறது.
இந்த சமயத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள். காயமடைந்த அனைவரும் விரைவாகவும், முழுமையாகவும் குணமடைய விரும்புகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்நாடக அரசு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும்.
எந்தக் கொண்டாட்டமும் மனித உயிருக்கு நிகரானது அல்ல என்பதை இந்த சோகமான சம்பவம் நமக்கு நினைவூட்டுகிறது.
பொது நிகழ்வுகளுக்கான பாதுகாப்பு நெறிமுறைகள் தகுந்த முறையில் மதிப்பாய்வு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். மனித உயிர்கள்தான் எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
- இந்த கூட்ட நெரிசலில் சிக்கி சேலத்தை சேர்ந்த மல்லிகா பலியானார்.
- முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு நாளை திருப்பதி செல்ல உள்ளார்.
திருப்பதி:
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி பண்டிகைக்காக சொர்க்கவாசல் திறக்கப்படுவது வழக்கம். சொர்க்கவாசல் திறப்பை ஒட்டி திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் விநியோகம் இன்று செய்யப்பட்டது
இந்த இலவச தரிசன டோக்கனை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி சேலத்தை சேர்ந்த மல்லிகா என்ற பெண் பலியானார் என முதல் கட்ட தகவல் வெளியானது. மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரித்தார். பாதிப்பு அடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளையும், உயர்தர சிகிச்சைகளையும் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு நாளை திருப்பதி வருகிறார் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.








