என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
செய்திகள்
![பிரான்ஸ் நகரில் கத்திக்குத்து தாக்குதல் - 2 பேர் பலி பிரான்ஸ் நகரில் கத்திக்குத்து தாக்குதல் - 2 பேர் பலி](https://img.maalaimalar.com/Articles/2018/May/201805130228445191_Two-dead-in-Paris-attack-including-knifeman_SECVPF.gif)
X
பிரான்ஸ் நகரில் கத்திக்குத்து தாக்குதல் - 2 பேர் பலி
By
மாலை மலர்13 May 2018 2:28 AM IST (Updated: 13 May 2018 2:28 AM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
பிரான்ஸ் நாட்டின் பாரிசில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் கத்தியால் தாக்குதல் நடத்திய ஆசாமி உள்பட 2 பேர் பலியாகினர். #Paris #Knifeattack
பாரிஸ்:
பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரிசின் மையத்தில் அமைந்துள்ளது ஒபரா ஹவுஸ். இந்த கட்டிடத்தின் அருகே இன்று ஒரு மர்ம நபர் கண்ணில் தென்படும் நபர்களை எல்லாம் கத்தியால் குத்தி கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டான்.
இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201805130228445191_1_paris-3._L_styvpf.jpg)
போலீசார் விடுத்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் கோரத்தாண்டவத்தில் ஈடுபட்ட அந்நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் யார்? காரணம் என்ன? என்பது தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. #Paris #Knifeattack
Next Story
×
X