என் மலர்
உலகம்
- ஒருகட்டத்தில் கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலையில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டேன்.
- வீடியோ இணையத்தில் வைரலாகி விவாதத்திற்குள்ளாகி உள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் சாரா டார். மாடல் அழகியான இவர் ஆபாச தளமான 'ஒன்லி பேன்ஸ்'சில் கணக்கு தொடங்கி வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். வலைத்தள பிரபலமான இவரை ஏராளமானவர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
யூடியூபில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது வாழ்க்கை அனுபவங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், 'படிப்பில் கெட்டிக்காரியான நான் கணினி என்ஜினீயரிங்கில் முனைவர் படிப்புக்காக பிரபல பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன்.
ஒருகட்டத்தில் கல்வி கட்டணம் செலுத்த முடியாதநிலையில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டேன். பின்னர் என்ன செய்வதென யோசித்தபோது மாடலிங்கில் இணைந்து ஆபாச நடிகையாக முடிவு செய்தேன். முதலில் படிப்பை உதறியதால் வருத்தம் அடைந்தேன். ஆனால் இப்போது கோடிகளில் சம்பாதிக்கிறேன்" என்றார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி விவாதத்திற்குள்ளாகி உள்ளது.
- தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை.
- கைதான மீனவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள்.
இலங்கை நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் இலங்கை அதிபர் இந்தியா வந்து சென்ற நிலையில், தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. கைதாகி இருக்கும் மீனவர்கள் தமிழகத்தின் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
- விபத்து ஏற்படுத்திய நபர் சவுதி அரேபியாவை சேர்ந்த 50 வயதான டாக்டர் என தெரிய வந்தது.
- அந்த நபர் அகதியாக வந்தவர் என கடந்த 2016-ம் ஆண்டு ஜூலையில் அறியப்பட்டவர்.
ஜெர்மனியில் மக்திபர்க் நகரின் மையப்பகுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சந்தை அமைக்கப்பட்டிருந்தது. இந்த சந்தையில் கடந்த 20-ந்தேதி இரவு குவிந்த மக்கள், பண்டிகைக்கு தேவையான கேக், பரிசுபொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்கி கொண்டிருந்தனர்.
அப்போது, கார் ஒன்று அசுர வேகமாகத்தில் வந்து கூட்டத்துக்குள் புகுந்தது. இதனால் மக்கள் அலறியடித்தபடி ஓடினர். இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. 15 பேர் படுகாயமடைந்து உள்ளனர். 37 பேருக்கு மித அளவிலான காயமும், 16 பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டு உள்ளது. உயிரிழந்தவர்களில் குழந்தை ஒன்றும் அடங்கும்.

விபத்து ஏற்படுத்திய நபர் சவுதி அரேபியாவை சேர்ந்த 50 வயதான டாக்டர் என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இது பயங்கரவாத தாக்குதல் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த நபர் அகதியாக வந்தவர் என கடந்த 2016-ம் ஆண்டு ஜூலையில் அறியப்பட்டவர். ஜெர்மனியில் வசிப்பதற்கான அனுமதியை பெற்றிருக்கிறார்.
இந்த சம்பவத்தில், இந்தியர்கள் 7 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 3 இந்தியர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மற்ற 4 பேரும் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். இதனை பெர்லின் நகரில் உள்ள இந்திய தூதரகம், அதனுடைய எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டு உள்ளது.
அவர்களுடன் தூதரகம் தொடர்ந்து தொடர்பில் இருப்பதுடன், தேவையான ஆதரவையும் வழங்கி வருகிறது. அவர்களுடைய குடும்பத்தினருடனும் தொடர்ந்து தொடர்பில் உள்ளது என்று தெரிவித்து உள்ளது.
- வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
- ஷேக் ஹசீனா வங்கதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவர் இருக்கும் இடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின் போது நடைபெற்ற கொலைக்கு ஷேக் ஹசீனாதான் காரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவை திருப்பி அனுப்ப இந்தியாவுக்கு வங்கதேச அரசு வாய்மொழியாக கோரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் அமைந்துள்ள இடைக்கால அரசு ஷேக் ஹசினாவை மீட்டு விசாரிக்க திட்டமிட்டுள்ளது.
- நாட்டை விட்டு வெளியேற சிறப்பு அனுமதி கோரி ரஷிய நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளார்
- ஆசாத் குடும்பத்தின் ஆட்சி 1970 இல் பஷரின் தந்தை ஹபீஸ் அல்-அசாத்தின் கீழ் தொடங்கியது.
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பஷார் அல் ஆசாத் தலைமையிலான ஆட்சியை கவிழ்த்துவிட்டு ஆட்சி அமைக்க உள்ளனர்.
அதிபர் ஆசாத்தின் படைகளுக்கு எதிராக கடந்த 13 வருடங்களாக ஆயுத மோதலில் ஈடுபட்டு வந்த கிளர்ச்சிக் குழுவினர் நாட்டின் பெரும்பகுதிகளை கைப்பற்றி கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி தலைநகர் டாம்ஸகஸையும் கைப்பற்றினர். இதையடுத்து 50 ஆண்டுக் கால ஆசாத் குடும்பத்தின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
அன்றைய தினமே அதிபர் ஆசாத் நாட்டை விட்டு தப்பி ஓடினார். தனக்கு முற்காலங்களில் உதவி வந்த ரஷியாவில் ஆசாத் குடும்பதோடு தஞ்சம் அடைந்துள்ளார்.
ஆசாத் நாட்டை விட்டுச் சென்ற பிறகு அவரது ஆட்சியில் முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் மற்றும் பெரும்பாலான உயர் அதிகாரிகளும் வெளியேறிவிட்டனர். கிளர்ச்சிக் குழுவினர் புதிய தலைமையை உருவாக்கி வருகின்றனர்.
ஆட்சி அதிகாரத்தை இழந்து, பிறந்த நாட்டையும் இழந்து நாடு கடத்தப்பட்டு ரஷிய தலைநகர் மாஸ்க்கோவில் ஆசாத்[59 வயது] தஞ்சம் அடைந்துள்ள நிலையில் அவரிடமிருந்து அவரது மனைவி அஸ்மா அல்-அசாத்[49 வயது] விவாகரத்து கோரியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஷியாவில் தனது கணவன் ஆசாத் உடன் தொடங்கியுள்ள புதிய வாழ்க்கையில் அஸ்மா அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தனது பிறந்த மண்ணுக்கு [லண்டனுக்கு] திரும்ப விருப்புவதாக துருக்கி, இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


அஸ்மா, ரஷிய நாட்டை விட்டு வெளியேற சிறப்பு அனுமதி கோரி ரஷிய நீதிமன்றத்தில் விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது, தற்போது அவரது விண்ணப்பம் ரஷ்ய அதிகாரிகளால் பரிசீலனையில் உள்ளது.
சிரிய பெற்றோருக்கு 1975 இல் லண்டனில் பிறந்த அஸ்மா அல்-அசாத் பிரிட்டிஷ்-சிரிய இரட்டை குடியுரிமை பெற்றுள்ளார்.
லண்டன் கிங்ஸ் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பிரெஞ்சு இலக்கியத்தில் பட்டப்படிப்பை முடித்து முதலீட்டு வங்கியில் வேலை செய்துவந்த அஸ்மா, டிசம்பர் 2000 இல் பஷர் அல்-அசாத்தை மணந்தார். அந்த வருடமே ஆசாத் சிரியாவின் அதிபர் ஆனார்.


அசாத்கள்- ஒரு அலாவைட் குடும்பம் - வரலாற்று ரீதியாக சன்னி மக்கள் அதிகம் உள்ள சிரியாவில் ஆதிக்கம் செலுத்தியது. ஆசாத் குடும்பத்தின் ஆட்சி 1970 இல் பஷரின் தந்தை ஹபீஸ் அல்-அசாத்தின் கீழ் தொடங்கியது.
இப்போது மாஸ்கோவில் புகலிடத்தின் கீழ் வசிக்கும் பஷர் அல்-அசாத், ரஷ்ய அதிகாரிகளால் கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்கிறார்.
அவரது புகலிடக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும், அவர் மாஸ்கோவை விட்டு வெளியேறவோ அல்லது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அதிகாரிகள் 270 கிலோகிராம் தங்கம், $2 பில்லியன் ரொக்கம் மற்றும் மாஸ்கோவில் உள்ள 18 சொத்துக்கள் உள்ளிட்ட அவரது சொத்துக்களை முடக்கியுள்ளனர்.
- இந்த பயணத்தில் பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய குடிமக்களுக்கான விருது வழங்கப்பட்டது.
- மருந்து, தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் விவாதம் நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடி குவைத்திற்கு 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் நேற்று முன் தினம் புறப்பட்டுச் சென்ற அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன்பின், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களையும் ஊழியர்களையும் சந்தித்து அவர் பேசினார். அதன்பின் நேற்று இரவு மீண்டும் அவர் டெல்லி புறப்பட்டார். மோடியுடன் உரையாடிய இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழிலாளர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர்.
அதில் ஒரு தொழிலாளி, நீங்கள் மெடிக்கல் லீவ் எடுக்குறீங்களா சார் என கேட்டார். இதற்கு பதிலளித்த மோடி, தொழிலாளர்களின் வியர்வை வாசனையே எனது மருந்து என்று பதில் அளித்தார்.
மேலும் உரையாடலின்போது தான் தமிழர் என மோடியிடம் ஒருவர் தன்னை அறிமுகப்டுத்திக்கொள்ளவே உடனே அவரிடம் வணக்கம் என மோடி தெரிவித்துள்ளார்.
இந்த பயணத்தில் பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய குடிமக்களுக்கான விருது வழங்கப்பட்டது. குவைத்தின் அமீர், ஷேக் மெஷல் அல்-அகமது அல்-ஜாபர் அல் சபா, பிரதமர் மோடிக்கு விருது வழங்கி கவுரவம் அளித்துள்ளார்.
தி ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர் என்ற இந்த விருது நாடுகளின் தலைவர்கள், வெளிநாட்டு ஆட்சியாளர்கள் மற்றும் வெளிநாட்டு அரச குடும்பத்தினர் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
இந்தப் பயணத்தின்போது மருந்து, தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் ஒத்துழைப்புடன் செயல்படுவது பற்றி குவைத்தின் அமீருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
- ஓயோ மாநிலத்தில் கடந்த புதன்கிழமை 35 குழந்தைகள் வரை கொல்லப்பட்டனர்
- தேவாலயத்தில் வைத்து வழங்கப்பட்ட உடைகள் மற்றும் உணவைப் பெற 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடினர்.
ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் கடுமையான பஞ்சம் நிலவி வருகிறது. பட்டினியால் மக்கள் குறிப்பாக குழந்தைகள் கடும் சிரமங்களை சந்தித்து வளர்கின்றனர்.
இந்நிலையில் கிறிஸ்துமஸை முன்னிட்டு கடந்த வாரம் நைஜீரியாவின் பல்வேறு நகரங்களில் உணவு வழங்கும் நிகழ்வின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 67க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஓயோ மாநிலத்தில் கடந்த புதன்கிழமை 35 குழந்தைகள் வரை கொல்லப்பட்டனர். சனிக்கிழமையன்று, தென்கிழக்கு அனம்ப்ரா மாநிலத்தில் 22 பேர் இறந்தனர், தலைநகர் அபுஜாவில் 10 பேர் இறந்தனர், அபுஜாவில் தேவாலயத்தில் வைத்து வழங்கப்பட்ட உடைகள் மற்றும் உணவைப் பெற 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடினர்.


இந்த சம்பங்கள் குறித்த முழுமையான விசாரணைக்கு நைஜீரிய அரசு உத்தரவிட்டுள்ளது.
இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஜனாதிபதி போலா டினுபு, வரவிருக்கும் அனைத்து கொண்டாட்டங்களையும் ரத்து செய்துள்ளார்.
இந்த துயரங்களுக்கு நாட்டில் நிலவும் அதிகப்படியான வறுமை, அதிக உணவு விலைகள் மற்றும் அரசாங்கத்தின் தவறான நடவடிக்கைகளே காரணம் என்று தொழிலாளர் கட்சித் தலைவர் பீட்டர் ஓபி குற்றம் சாட்டியுள்ளார்.
- அமெரிக்க அரசியலமைப்பு, ஒரு ஜனாதிபதி இயற்கையாக பிறந்த அமெரிக்க குடிமகனாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது.
- டிரம்ப் வெற்றி பெற 277 மில்லியன் டாலர்கள்வரை மஸ்க் பணத்தை வாரி இறைத்துள்ளார்.
அரிசோனாவின் பீனிக்ஸ் நகரில் நடந்த குடியரசுக் கட்சி மாநாட்டில் நேற்று டொனல்டு டிரம்ப் கலந்துகொண்டார். இந்நிலையில் வரவிருக்கும் டிரம்ப் நிர்வாகத்தில் பெரும் ஆதிக்கம் செலுத்த உள்ள உலகப் பணக்காரர் எலான் மஸ்க் ஒரு நாள் அதிபராக முடியுமா? என்று டிரம்ப் -இடம் கேட்கப்பட்டது.
அதற்கு டிரம்ப், இல்லை, அது நடக்காது என்று பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், அவர் ஏன் இருக்க முடியாது என்று உங்களுக்குத் தெரியுமா? அவர் இந்த நாட்டில் பிறக்கவில்லை என்று டிரம்ப் கூறினார்.
அமெரிக்க அரசியலமைப்பு, ஒரு ஜனாதிபதி இயற்கையாக பிறந்த அமெரிக்க குடிமகனாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் உள்ளிட்டவற்றின் முதலாளியான உலகின் முதல் பணக்காரர் எலான் மஸ்க் தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர் ஆவார்.

அவர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர் என்று பைடன் நிர்வாகம் சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தது. கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற 277 மில்லியன் டாலர்கள்வரை மஸ்க் பணத்தை வாரி இறைத்துள்ளார்.
இதற்காக அவருக்கு அரசு செயல்திறன் தொடர்பான GOVERNMENT OF EFFICIENCY பதவி வழங்கப்பட்டுள்ளது. எக்ஸ் தளத்தில் 200 மில்லியன் பாலோயர்களை கொண்ட மஸ்க்கை, பிரசிடெண்ட் மஸ்க் என குறிப்பிட்டு ஒரு கூட்டம் சமூக வலைதளத்தில் வைரல் செய்து வந்த நிலையில் இந்த விவகாரம் தற்போது டிரம்ப் காது வரை சென்றுள்ளது.

இதற்கிடையே அரசு நிதியுதவி திட்டத்துக்கு எதிராக மஸ்க் போர்க்கொடி தூக்கியுள்ளதும் டிரம்ப் உடைய ஜனநாயக கட்சியினரிடையே புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
- அரிசோனாவின் பீனிக்ஸ் நகரில் நடந்த இளம் பழமைவாதிகளுக்கான நிகழ்ச்சியில் அவர் பேசினார்
- இரு பாலினங்கள் மட்டுமே அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ கொள்கையாக இருக்கும்
பழமைவாதியான டொனல்டு டிரம்ப் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். அடுத்த மாதம் இரண்டாவது முறையாக அதிபர் பதவி ஏற்கும் டிரம்ப் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
கடந்த 2016 முதல் 2020 வரையிலான டிரம்ப்பின் ஆட்சி காலத்தில் மக்கள் கடும் கட்டுப்பாடுகளை சந்தித்த நிலையில் இனி வரும் 4 வருடமும் அப்படியே அமையும் என்பதை அவரது முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.
அந்த வகையில் நேற்று அரிசோனாவின் பீனிக்ஸ் நகரில் நடந்த இளம் பழமைவாதிகளுக்கான குடியரசுக் கட்சி மாநாட்டில் பேசிய டொனால்டு டிரம்ப், அதிபர் பதவி ஏற்கும் நாள் முதல் திருநங்கைகள் என்ற பைத்தியக்காரத்தனத்தை நிறுத்தப்போவதாக தெரிவித்துள்ளார்.

குழந்தைகளின் பாலியல் சிதைவை நிறுத்தவும், திருநங்கைகளை ராணுவத்திலிருந்து வெளியேற்றவும், தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் இருந்து அவர்களை வெளியேற்றும் நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஆண்களை பெண்கள் விளையாட்டுகளில் இருந்து விலக்கி வைப்பதாக அவர் சபதம் செய்தார். ஆண் மற்றும் பெண் என்ற இரு பாலினங்கள் மட்டுமே அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ கொள்கையாக இருக்கும் என்று டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மூன்றாம் பாலினத்தவரான LGBTQ சமூகத்தினரின் உரிமைகளுக்கு எதிராக அதிக அழுத்தம் கொடுக்கும் வகையில் அவர் பேசியுள்ளார். LGBTQ பிரச்சினைகள் சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்க அரசியலை பெரிதும் தாக்கம் செலுத்த வருவது குறிப்பிடத்தக்கது.
- உயிரிழந்தவர்களில் 70 சதவீதம் பெண்களும் குழந்தைகளுமே ஆவர் என்று ஐநா தெரிவித்துள்ளது.
- பாலஸ்தீனிய முகாமில் ரோலர் ஸ்கேட்டைப் பயன்படுத்தி சுற்றித் திரியும் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவின.
பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிரித்து கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு அந்நாட்டில் ஆபரேஷன் அல்-அக்ஸா மூலம் திடீர் தாக்குதலை நடத்தியது.
இதில் 1200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 100 பேர் வரை பணய கைதிகளாக அழைத்துச்செல்லப்பட்டனர். இதற்கு பழிக்கு பழி வாங்க கடந்த 13 மாத காலமாக காசா உள்ளிட்ட பாலஸ்தீன நகரங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி 45,227 பேரை கொன்று குவித்துள்ளது.
இதில் 107,573 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 70 சதவீதம் பெண்களும் குழந்தைகளுமே ஆவர் என்று ஐநா தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல்களில் கை கால்களை இழந்த ஆயிரக்கணக்கான குழந்தைகளில் ஒருவன் முகமது சயீத் ஷபான்.
வடக்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஏழு வயது சயீத் தனது இரண்டு கால்களையும் வலது கையையும் இழந்தான். சயீத்தின் கதை சமூக ஊடகங்களில் வைரலானது. அவன் பாலஸ்தீனிய முகாமில் ரோலர் ஸ்கேட்டைப் பயன்படுத்தி சுற்றித் திரியும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவின.
இது துபாய் நாட்டின் இளவரசரும், துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் முகமது கவனத்துக்கு சென்றுள்ளது. பாலஸ்தீனிய சிறுவன் முகமது சயீத் ஷபானுக்கு செயற்கை உறுப்புக்கள் வழங்குவதாக அவர் தற்போது உறுதி அளித்துள்ளார்.
- இந்திய அமெரிக்க தொழிலதிபர் ஸ்ரீராம் கிருஷ்ணனை பரிந்துரை செய்துள்ளார்.
- ஏ.ஐ. தொழில்நுட்ப துறையின் கொள்கை ஆலோசகராக இருப்பார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று விரைவில் அதிபராக பொறுப்பேற்க இருக்கும் டொனால்டு டிரம்ப், செயற்கை நுண்ணறிவு துறைக்கான கொள்கை ஆலோசகர் பதவிக்கு இந்திய அமெரிக்க தொழிலதிபர் ஸ்ரீராம் கிருஷ்ணனை பரிந்துரை செய்துள்ளார்.
தொழில்நுட்பத் துறையை சேர்ந்தவரான ஸ்ரீராம் கிருஷ்ணன் டேவிட் சாக்ஸ் உடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார். இவர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தில் ஏ.ஐ. தொழில்நுட்ப துறையின் கொள்கை ஆலோசகராக இருப்பார்.
"ஸ்ரீராம் கிருஷ்ணன் ஏஐ-இல் தொடர்ந்து அமெரிக்கத் தலைமையை உறுதி செய்வதில் கவனம் செலுத்துவார். மேலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஜனாதிபதியின் ஆலோசகர்கள் குழுவுடன் இணைந்து பணியாற்றுவது உட்பட, ஏஐ கொள்கையை வடிவமைக்கவும் ஒருங்கிணைக்கவும் உதவுவார்" என்று டிரம்ப் கூறினார்.
முன்னதாக ஸ்ரீராம் கிருஷ்ணன் மைக்ரோசாப்ட், டுவிட்டர், யாஹூ, பேஸ்புக் மற்றும் ஸ்னாப் என பல்வேறு முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். டிரம்ப் தலைமையிலான அரசாங்கத்தில் ஸ்ரீராம் கிருஷ்ணன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் ஆலோசகர்கள் குழுவில் இணைந்து பணியாற்ற இருக்கிறார்.
புதிய பொறுப்பு குறித்து பேசிய ஸ்ரீராம் கிருஷ்ணன், "ஏ.ஐ. துறையில் அமெரிக்காவை தொடர்ந்து முன்னிலைப்படுத்துவதை உறுதி செய்து, நாட்டிற்கு சேவையாற்ற இருப்பது பெருமையான உணர்வை கொடுக்கிறது," என்று தெரிவித்தார்.
- கேத்தி தான் கைகளில் மறைத்து வைத்திருந்த இ-சிகரெட்டை கொண்டு புகை பிடித்தார்.
- கேத்தி ஜூவினோ தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து நாட்டு மக்களிடமும், சபாநாயகரிடமும் மன்னிப்பு கோரினார்.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவை சேர்ந்தவர் கேத்தி ஜூவினோ. அந்த நாட்டின் முக்கிய தேசிய கட்சிகளில் ஒன்றான கிரீன் கட்சியை சேர்ந்தவரான இவர் கடந்த 2022-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்று எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்தநிலையில் தலைநகர் பகோடாவில் உள்ள அந்த நாட்டின் பாராளுமன்ற அவையில் பொது சுகாதாரம் தொடர்பான மசோதாவுக்கான விவாதம் நடந்தது. விவாதத்தில் கேத்தி ஜூவினோ கலந்து கொண்டிருந்தார். அப்போது கேத்தி தான் கைகளில் மறைத்து வைத்திருந்த இ-சிகரெட்டை கொண்டு புகை பிடித்தார்.
இது அங்கு பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவானநிலையில் சமூக வலைத்ததளத்தில் பதிவிடப்பட்டது. தொடர்ந்து அந்த வீடியோ காட்டுத்தீ போல பரவி ஒரே நாளில் வைரலானது. இதனை தொடர்ந்து கேத்தி ஜூவினோ தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து நாட்டு மக்களிடமும், சபாநாயகரிடமும் மன்னிப்பு கோரினார்.






