என் மலர்tooltip icon

    உலகம்

    • கஜகஸ்தானின் மேற்கில் உள்ள அக்டாவ் விமான நிலையம் அருகே வந்துகொண்டிருந்தது
    • ரஷியாவின் க்ரோஸ்னிக்கு இன்று பறந்து கொண்டிருந்தது

    கஜகஸ்தானின் அக்டாவ் நகருக்கு அருகே 62 பயணிகள் 5 பணியாளர்களுடன் ரஷியா நோக்கி சென்றுகொண்டிருந்த அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் பயங்கர விபத்துக்குள்ளாகி உள்ளது.

    அஜர்பைஜானில் உள்ள பாகுவிலிருந்து ரஷியாவின் க்ரோஸ்னிக்கு இன்று பறந்து கொண்டிருந்த விமானம் அடர் பனிமூட்டம் காரணமாக 3 இடங்களில் திருப்பிடிவப்பட்டு கடைசியாக கஜகஸ்தானின் மேற்கில் உள்ள அக்டாவ் விமான நிலையத்துக்கு திசை மாற்றி விடப்பட்டது. அதன்படி அக்டாவ் விமான நிலையம் அருகே வந்துகொண்டிருந்தபோது விமானம்  கீழே விழுந்து நொறுங்கியுள்ளது என கஜகஸ்தான் அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    அக்டாவ் விமான நிலையம் அருகே அந்த விமானம் விழுந்து வெடிக்கும் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது.  இந்த விபத்தில் 42 பேர் வரை உயிரிழந்துள்ளதாவும், 14 பேர் பிழைத்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

    • பாகிஸ்தான் ஜெட் விமானங்கள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து குண்டுகளை வீசியது.
    • பெண்கள், குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்துவிட்டனர்.

    காபூல்:

    பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து கொண்டு தெக்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பினர் சமீபகாலமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இந்த அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான்கள் ஆதரவளித்து வருவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது. இந்த குற்றச்சாட்டை தலிபான் அரசு மறுத்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு எல்லையையொட்டி ஆப்கானிஸ்தான் பத்திகா மாகாணம் பர்மால் மாவட்டத்தில் உள்ள லேமன் உள்ளிட்ட 7 கிராமங்கள் மீது பாகிஸ்தான் அதிரடி வான் வழித் தாக்குதல் நடத்தியது.

    பாகிஸ்தான் விமான படைக்கு சொந்தமான ஜெட் விமானங்கள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து சரமாரியாக குண்டுகளை வீசியது.

     இந்த குண்டு வீச்சில் பர்மால் முர்க்பஜார் கிராமம் முற்றிலும் உருக்குலைந்தது. வீடுகள் கடும் சேதம் அடைந்தது. இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 15 பேர் உயிர் இழந்து விட்டனர். இவர்களில் 5 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர். பலரை காணவில்லை. படுகாயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    பாகிஸ்தானின் இந்த செயலுக்கு ஆப்கானிஸ்தான் தலிபான் அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் பொது மக்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இது கோழைத்தனமான தாக்குதல் செயல். ஒருதலைபட்ச வான்வழித் தாக்குதல்.

    இந்த தாக்குதலில் இறந்தவர்கள் பெரும்பாலானவர்கள் வஜிகிஸ்தான் பகுதியை சேர்ந்த அகதிகள் ஆவார்கள். பலரை காணவில்லை. இதனால் பலி எண்ணிக்கை உயரலாம்.

    பொதுமக்களின் நிலங்கள், இறையாண்மை ஆகியவற்றை பாதுகாப்பது தங்களின் கடமையாகும். இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என கூறப்பட்டுள்ளது.

    ஆப்கானிஸ்தான் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்தலை பாகிஸ்தான் இன்னும் உறுதிபடுத்தவில்லை. ஆனால் எல்லைக்கு அருகில் உள்ள பயங்கரவாத அமைப்பினரின் மறைவிடங்களை குறிபார்த்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ராணுவத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்த தாக்குதலையடுத்து பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே பதற்ற மான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

    • குற்றவாளிகள் செய்த கொலைகளை வன்மையாக கண்டிக்கிறேன்.
    • டொனால்டு டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் அடுத்த மாதம் (ஜனவரி) 20-ந்தேதி புதிய அதிபராக பதவி ஏற்க உள்ளார்.

    இந்த நிலையில் தற் போதைய அதிபர் ஜோபைடன் அமெரிக்க கோர்ட்டுகளில் பல்வேறு குற்ற வழக்குகள் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 40 கைதிகளில் 37 பேருக்கு ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு டொனால்டு டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் எக்ஸ் வலை தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

    குற்றவாளிகள் செய்த கொலைகளை வன்மையாக கண்டிக்கிறேன். அவர்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் வேதனையை பகிர்ந்து கொள்கிறேன். ஜோபைடன் நமது நாட்டில் மிக மோசமான கொலையாளிகள் 37 பேரின் மரண தண்டனையை குறைத்து உள்ளார்.

    ஒவ்வொருவரின் செயல்களை கேட்டால் அவர் ஏன் இதை செய்தார் என நீங்கள் கேள்வி எழுப்புவீர்கள். எந்த அர்த்தமும் இல்லை. உறவினர்கள், நண்பர்கள் கூட இதனை நம்பமாட்டார்கள். நான் பதவிக்கு வந்தவுடன் மீண்டும் மரண தண்டனையை கொடுக்க வலியுறுத்துவேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இஸ்ரேலின் வெட்கக்கேடான செயல் என்று ஈரான் கண்டனம்.
    • ஐ.நா. பொதுச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.

    ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இந்த ஆண்டு கொன்றது குறித்த ஒப்புதல் இஸ்ரேலின் வெட்கக்கேடான செயல் என்று ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது.

    "இந்த கொடூரமான குற்றத்திற்கு இஸ்ரேலிய ஆட்சி தனது பொறுப்பை வெளிப்படையாக ஒப்புக்கொண்டது வெட்கக்கேடான செயல்" என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரான் தூதர் அமீர் சயீத் இரவானி ஐ.நா. பொதுச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.

    முன்னதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ஹனியே கொலைக்கு தனது நாடு தான் பொறுப்பு என்று ஒப்புக்கொண்டார். கொன்று குவித்தது தொடர்பாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டது இதுவே முதல் முறை ஆகும்.

    காசாவில் போர் நிறுத்தத்திற்கான ஹமாஸின் பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு தலைமை தாங்கிய ஹனியே, ஜூலை 31ம் தேதி தெஹ்ரானில் உள்ள விருந்தினர் மாளிகையில் கொல்லப்பட்டார். 

    • 2 மாலுமிகள் கடலில் விழுந்த நிலையில் அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • மீட்கப்பட்ட மாலுமிகள் ஸ்பெயினின் கார்டகினா நகருக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    மாஸ்கோ:

    ரஷியாவின் ஜெயின் பீட்டர்ஸ் பெர்க் நகரில் இந்து கடந்த 12ம் தேதி விளாடிவொஸ்டோக் நகரில் உள்ள துறைமுகத்திற்கு சரக்கு கப்பல் புறப்பட்டது. அந்த கப்பலில் 16 மாலுமிகள் பயணித்தனர்.

    இந்நிலையில், கடந்த 22ம் தேதி மத்திய தரைக்கடல் வழியாக கடல் வழியாக கப்பல் சென்றுகொண்டிருந்தது. ஸ்பெயினின் அகுலியாஸ், அல்ஜீரியாவின் ஓரன் நகர்களுக்கு அருகே சர்வதேச கடல்பரப்பில் மத்திய தரைக்கடலில் சென்றுகொண்டிருந்தபோது கப்பலின் எஞ்சின் அறையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    தீ மளமளவென கப்பலின் பிற பகுதிகளுக்கும் பரவியது. இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த ஸ்பெயின் கடற்படையினர் மற்றும் அப்பகுதியில் சென்றுகொண்டிருந்த பிற கப்பல்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதில் ரஷிய கப்பலில் இருந்து 14 மாலுமிகள் உயிருடன் மீட்கப்பட்டனர். அதேவேளை, 2 மாலுமிகள் கடலில் விழுந்த நிலையில் அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    மீட்கப்பட்ட மாலுமிகள் ஸ்பெயினின் கார்டகினா நகருக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் ரஷியாவுக்கு திரும்பி அனுப்பப்பட உள்ளனர். அதேவேளை, தீப்பற்றிய சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது.

    • பெருவெள்ளம் ஆகியவற்றின் காரணமாக, அரிசி ஏற்றுமதிக்கு தற்காலிக தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டது.
    • ஏற்றுமதி ஆகியவற்றிற்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மாஸ்கோ:

    கடந்த 2022-ம் ஆண்டு ரஷியாவில் உள்ள பெடோரோவ்ஸ்கி நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து மற்றும் ரஷியாவின் முதன்மை அரிசி உற்பத்தி செய்யும் பகுதியான கிராஸ்னோடர் பகுதியில் உள்ள நெல் வயல்களில் ஏற்பட்ட பெருவெள்ளம் ஆகியவற்றின் காரணமாக, அரிசி ஏற்றுமதிக்கு தற்காலிக தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டது.

    உள்நாட்டு சந்தைக்கு நிலையான விநியோகத்தை உறுதி செய்வதற்காக டிசம்பர் 31, 2024 வரை அரிசி ஏற்றுமதிக்கான தடை நீட்டிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், நெல் விதைகளைத் தவிர, அரிசி மற்றும் அரிசிப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான தடையை மேலும் 6 மாதங்களுக்கு, ஜூன் 30, 2025 வரை நீட்டித்து ரஷிய அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதே சமயம், அரிசி ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள் யூரேசியன் பொருளாதார ஒன்றியம், அப்காசியா, தெற்கு ஒசேட்டியா, அத்துடன் மனிதாபிமான உதவிகள் மற்றும் சர்வதேச போக்குவரத்துக்கான ஏற்றுமதி ஆகியவற்றிற்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • உலகம் முழுவதும் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
    • ஈபிள் டவர் பகுதியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    பாரிஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரசித்தி பெற்ற ஈபிள் டவர் உள்ளது. கஸ்டவ் ஈபிள் என்பவர் கட்டமைத்ததால் அவரது பெயரிலேயே இந்தக் கோபுரம் அழைக்கப்பட்டு வருகிறது.

    கிறிஸ்துமஸ் தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஈபிள் டவர் பகுதியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

    இந்நிலையில், ஈபிள் டவரில் உள்ள லிப்டில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. முதல் தளத்திற்கும், இரண்டாவது தளத்திற்கும் இடையே லிப்ட்டில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர்.

    தீவிபத்து காரணமாக ஈபிள் டவர் பகுதியில் குவிந்திருந்த 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மேலும், அப்பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

    ஈபிள் டவரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அங்கு குவிந்த சுற்றுலாப் பயணிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானங்கள் இன்று திடீரென தரையிறக்கப்பட்டன.
    • தொழில்நுட்ப கோளாறு சரியானதும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் சேவையை தொடங்கின.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் முன்னணி விமான நிறுவனமாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த விமானத்தில் தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தயாராகி வரும் நிலையில், மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விமானங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே, அமெரிக்கா முழுவதும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானங்கள் இன்று திடீரென தரையிறக்கப்பட்டன.

    விமான நிறுவனத்தின் கட்டுப்பாட்டு மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விமானங்கள் நாடு முழுவதும் தரையிறக்கப்பட்டன. இதனால் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டிருந்த மக்கள் கடும் அவதிப்பட்டனர்.

    இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதையடுத்து சுமார் 2மணி நேரத்துக்கு பின் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவன விமானங்கள் மீண்டும் சேவையை தொடங்கின.

    • கடந்த ஜூன் 27 ஆம் தேதி டிரம்ப் - பைடன் இடையிலான விவாதத்தின்போது வெளிப்பட்டது
    • 277 எல்க்டோரல் வாக்குகள் பெற்று அமெரிக்க அதிபர் பதவியை குடியரசு கட்சி வேட்பாளர் டொனல்டு டிரம்ப் வென்றெடுத்தார்.

    உலக வல்லரசான அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடந்துமுடிந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் வெற்றி பெற்று ஜோ பைடன் அதிபர் பதவி வகித்து வருகிறார். துணை அதிபராக இந்திய - ஆபிரிக்க வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் இருந்து வருகிறார்.

    இரு கட்சி ஆட்சி முறை கொண்ட அமெரிக்காவில் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கு இடையில் தான் போட்டி. அந்த வகையில் குடியரசு கட்சி சார்பில் இந்த வருடம் நடந்த அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வேட்பாளராக நின்றார்.

    கடந்த 2016 முதல் 2020 வரை அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப் 2020 தேர்தலில் ஜோ பைடனிடம் தோற்ற நிலையில் இந்த தேர்தலில் மீண்டும் அவரை எதிர்த்து நின்றார். ஆனால் இந்த முறை அவரை எதிர்க்க ஜோ பைடன் திணறினர். 82 வயதாகும் ஜோ பைடன் வயது மூப்பு காரணமாக ஞாபக மராத்தி உள்ளிட்ட பிரச்சனைகளால் பொது வெளியில் பரவலாக விமர்சனங்களை ஏற்படுத்தினார்.

    இது கடந்த ஜூன் 27 ஆம் தேதி டிரம்ப் - பைடன் இடையிலான விவாதத்தின்போது பெரிதும் வெளிப்பட்டது. சொந்த கட்சியினரே பைடன் அதிபர் வேட்பாளராக இருக்க வேண்டுமா என்று யோசித்தனர்.

     

    இதற்கு மத்தியில் பைடன் ஜூலை 21 அன்று தான் அதிபர் ரேஸில் இருந்து விலகுவதாகவும், தனக்கு பதிலாக துணை அதிபர் கமலா ஹாரிஸை வேட்பாளராக முன்மொழிவதாகவும் அறிவித்தார்.

    இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் டிரம்ப் உடனான விவாதங்களிலும், தனது பிரச்சாரங்களிலும் அழுத்தமான பேச்சுகளால் ஜனநாயக கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்ந்தார்.

     

    ஆனால் இந்த முறை டிரம்ப் மீது நடந்த கொலை முயற்சிகள் அவருக்கு பெரும் அனுதாப அலையை சம்பாதித்து கொடுத்தன. கடந்த ஜூலை 13 ஆம் தேதி பென்சில்வேனியா மாகாணத்தில் டிரம்ப் பேரணியில் பேசிக்கொண்டிருந்தபோது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடந்தது.

    தலையை லேசாக அசைத்ததால் துப்பாக்கி குண்டு அவரது வலது காதின் மேற்பகுதியை உரசிச் சென்றது. இதில் அவர் உயிர்தப்பிய நிலையில் அவரை சுட்ட மாத்தியூ க்ரூக்ஸ் என்ற 20 வயது இளைஞர் அந்த இடத்திலேயே பாதுகாப்பு அதிகரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.  

     

    தொடர்ந்து கடந்த செப்டம்பர் 15 ஆம் தேடி தனக்கு சொந்தமான மைதானத்தில் கோல்ப் விளையாடிக்கொண்டுருந்த டிரம்ப் மீது இரண்டாவது கொலை முயற்சி நடந்தது. இதிலும் டிரம்ப் தப்பித்த நிலையில் தூரத்தில் வேலிக்கு அருகில் இருந்து குறிவைத்த 58 வயதான ரயான் வெஸ்லி ரூத் தப்பியோடும்போது கைது செய்யப்பட்டார்.

     

    டிரம்பின் செல்வாக்கு இந்த கொலை முயற்சிகளுக்குப் பின் அதிகரிக்கத்தொடங்கிய நிலையில் உலகப் பணக்காரருக்கும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், உள்ளிட்டவற்றின் நிறுவனருமான எலான் மஸ்க் டிரம்புக்கு ஆதரவு தெரிவித்து சுமார் 270 மில்லியன் டாலர் வரை நன்கொடை வழங்கினார்.

    வாக்குப்பதிவுக்கு சில வாரங்கள் முன்பிருந்தே நாள் ஒன்றுக்கு ஒரு அதிர்ஷ்டசாலிலுக்கு 1 மில்லியன் டாலர் என வெளிப்படையாக வாக்காளர்களுக்கு பணம் வழங்கினார்.

     

    இருந்தபோதிலும் டிரம்புக்கு கடுமையான சவாலாக கமலா ஹாரிஸ் விளங்கினார். கமலா குறித்து தனிப்பட்ட முறையிலும் கடுமையாக டிரம்ப் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.

     

    இருப்பினும் பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார் என்றே கணிக்கப்பட்டது. இறுதியாக தேர்தலும் வந்தது.

    வாக்கு எண்ணிக்கையில் கமலா ஹாரிஸின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் தகர்ந்தன. கருத்துக்கணிப்புகளுக்கு மாறாக டிரம்ப் ஆரம்பத்திலிருந்தே முன்னிலை வகித்தார். 50 மாகாணகளில் மொத்தம் உள்ள 538 எலக்டோரல் வாக்குகளில் 270 க்கு மேல் பெறுபவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படும்.

    அந்த வகையில் 277 எல்க்டோரல் வாக்குகள் பெற்று அமெரிக்க அதிபர் பதவியை குடியரசு கட்சி வேட்பாளர் டொனல்டு டிரம்ப் வென்றெடுத்தார்.

     

    ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 224 எல்க்டோரல் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார். பராமரியமாக டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு வாக்களிக்கும் மாகாணங்கள் ரெட் ஸ்டேட்டஸ் என்றும் கமலாவின் ஜனநாயக கட்சிக்கு வாக்களிக்கும் மாகாணங்கள் புளு ஸ்டேட்டஸ் என்றும் அழைக்கப்படும்.

    இரண்டு கட்சிக்கும் மாறி மாறி வாக்களித்து இழுபறி ஏற்படுத்தும் மாகாணங்கள் ஸ்விங் ஸ்டேட்ஸ் என்று அழைக்கப்படும். வட கரோலினா, பென்சில்வேனியா, அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, விஸ்கான்சின் ஆகியவை ஸ்விங் மாகாணங்கள்.

    அந்த இழுபறி மாகாணங்களில் அனைத்திலும் டிரம்ப் வெற்றி பெற்றார். இதன்மூலம் 47வது அமெரிக்க அதிபராக அடுத்த மாதம் [ஜனவரி] 20 ஆம் தேதி வாக்கில் டிரம்ப் பதவியேற்க உள்ளார்.

    பாலஸ்தீனம் - இஸ்ரேல் போர், உக்ரைன் - ரஷியா போர் ஆகியவற்றை முடிவுக்கு கொண்டுவருவேன் என்று கூறும் டிரம்ப் மற்ற நாடுகளுடன் வரி விதிப்பு விவகாரங்களில் தற்போதிருந்தே கறார் காட்டி வருகிறார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவர முயன்ற கொரில்லா குட்டியை துருக்கி அதிகாரிகள் மீட்டனர்.
    • இந்த விலங்கு தேசிய பூங்கா ஊழியர்களால் பராமரிக்கப்படுகிறது.

    இஸ்தான்புல் விமான நிலையத்தில் ஆவணங்கள் இல்லாமல் கடத்தப்பட்ட கொரில்லா குட்டியை துருக்கி அதிகாரிகள் மீட்டனர். அழிந்து வரும் அந்த கொரில்லாவை துருக்கி அதிகாரிகள் காப்பாற்றும் வீடியோவை அந்நாட்டின் வேளாண்மை மற்றும் வனத்துறை அமைச்சகம் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில் அதிகாரிகள் கொரில்லாவை கூண்டில் இருந்து எடுத்து, உணவளிப்பதைக் காணலாம்.

    மேலும் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வர்த்தக அமைச்சகத்தின் சுங்க அமலாக்க குழுவினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி நம் நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற கொரில்லா குட்டி ஒன்று கைப்பற்றப்பட்டது.

    எங்கள் ஊழியர்களால் பராமரிக்கப்பட்டு வரும் குட்டியின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது. ஆனால் அது தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்படும் என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

    தற்போதைக்கு, இந்த விலங்கு தேசிய பூங்கா ஊழியர்களால் பராமரிக்கப்படுகிறது. இருப்பினும் கொரில்லா நிரந்தரமாக எங்கு வைத்து பராமரிக்கப்படும் என இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

    • கைது செய்யப்பட்ட மான்ஜியோனுக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.
    • மான்ஜியோனுக்கு ஆதரவாக வாதாட பெண் வழக்கறிஞர் கேரன் ஆக்னிபிலோ ஆஜரானார்.

    அமெரிக்காவில் மருத்துவத்துறை சார்ந்த முன்னணி நிறுவனம் யுனைடட் ஹெல்த்கேர். இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி [சிஇஓ] பிரையன் தாம்சன் [50 வயது] கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி ஹோட்டல் வாசலில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.

     

    இந்த கொலை தொடர்பாக கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி பென்சில்வேனியாவில் மெக்டோனால்ஸ் கடையில் வைத்து 26 வயதான இன்ஜினீயரிங் பட்டதாரி லூய்கி மான்ஜியோன் என்ற இளைஞரை எப்.பி.ஐ. போலீஸ் கைது செய்தது. வீட்டிலேயே 3டி பிரிண்டர் மூலம் துப்பாக்கியை செய்து அதன்மூலம் இந்த கொலையை அவர் செய்ததாக போலீஸ் தெரிவித்தது.

     

    லைஃப் இன்சூரன்ஸ் சார்ந்த யுனைடட் ஹெல்த்கேர் உள்ளிட்ட நிறுவனங்களின் அணுகுமுறை மக்களின் உயிரை பணமாக பார்ப்பதாக வெகு மக்களிடையே கோபம் இருந்து வந்த நிலையில் இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மான்ஜியோனுக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் தான் அந்த கொலையை செய்யவில்லை என்று மாஞ்சியோன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

    கொலை, பயங்கரவாத செய்லபாடுகள் உள்ளிட்ட 11 பிரிவுகளின்கீழ் மாஞ்சியோன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மான்ஹாட்டனில் உள்ள நியூ யார்க் மாகாண குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று [திங்கள்கிழமை] மாஞ்சியோன் ஆஜர்படுத்தப்பட்டார்.

     

    மான்ஜியோனுக்கு ஆதரவாக வாதாட பெண் வழக்கறிஞர் கேரன் ஆக்னிபிலோ ஆஜரானார். தனது கட்சிக்காரரை மனித பிங்பாங் பந்துபோல் அதிகாரிகள் நடத்துவதாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய மாஞ்சியோன் தான் குற்றம் செய்யவில்லை [NOT GUILTY] என்று தெரிவித்தார்.

     

    இதனையடுத்து வழக்கு விசாரணை 2025, பிப்ரவரி 21 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. பொதுமக்கள் மத்தியில் கவனம் பெற்றுவரும் இந்த வழக்கில் மாஞ்சியோன் குற்றத்தை ஒப்புக்கொள்ளாதது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

    முன்னதாக [மருத்துவ] சுகாதாரத் துறை நோயாளிகளின் நலனை விட லாபத்தையே முதன்மை நோக்கமாக வைத்திருப்பதை விமர்சித்து, இதற்கு வன்முறைதான் பதில் என்றும் நான் இதற்காக மன்னிப்பு கேட்கிறேன், ஆனால் இதை செய்தே ஆக வேண்டும், இந்த ஒட்டுண்ணிகளுக்கு இது நடக்க வேண்டியதுதான் [These parasites had it coming] என்று கைது செய்யப்பட்டபோது மான்ஜியோனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அறிக்கையில் எழுதியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • முதல் முறையாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.
    • பாதுகாப்பு அமைப்புகளை கண்மூடித்தனமாக அழித்துவிட்டோம்.

    இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ஜூலை மாதம் ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் கொன்றதை முதல் முறையாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.

    இது குறித்து பேசிய அவர், "இந்த நாட்களில், ஹவுதி பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசும்போது, எனது கருத்துகளின் தொடக்கத்தில் அவர்களுக்கு ஒரு தெளிவான செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன்: நாங்கள் ஹமாஸை தோற்கடித்துவிட்டோம். ஹிஸ்புல்லாவை தோற்கடித்தோம், ஈரானின் பாதுகாப்பு அமைப்புகளை கண்மூடித்தனமாக அழித்துவிட்டோம்.

    உற்பத்தி முறைகள், சிரியாவில் அசாத் ஆட்சியை வீழ்த்திவிட்டோம், தீமையின் அச்சுக்கு கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளோம். மேலும் கடுமையான தாக்குதலை எதிர்கொண்டு ஏமனில் உள்ள ஹவுதி பயங்கரவாத அமைப்பு, கடைசியாக நிற்கிறது" என்று காட்ஸ் கூறினார்.

    இஸ்ரேல் "அவர்களின் மூலோபாய உள்கட்டமைப்பை சேதப்படுத்தும், நாங்கள் அவர்களின் தலைவர்களின் தலையை துண்டிப்போம் - நாங்கள் தெஹ்ரான், காசா மற்றும் லெபனானில் உள்ள ஹனியே, சின்வார் மற்றும் நசரெல்லாவுக்கு செய்தது போல் - நாங்கள் அதை ஹொடைடா மற்றும் சனாவிலும் செய்வோம்" என்று காட்ஸ் மேலும் தெரிவித்தார்.

    ×