search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "air strike"

    • ஜெட் விமானங்கள் மூலம் சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன.
    • 30-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

    இட்லிப்:

    சிரியாவில் அரசு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 6 ஆண்டுக்கு மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போரில் சிரியாவுக்கு ஆதரவாக ரஷியா இருந்து வருகிறது.

    இந்நிலையில் வடமேற்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள இட்லிப் பகுதியில் இயங்கிவரும் காய்கறி சந்தையில் ரஷிய படையினர் அதிரடி வான் வெளி தாக்குதல் நடத்தினார்கள். ஜெட் விமானங்கள் மூலம் சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன.

    இந்த திடீர் தாக்குதலில் காய்கறி சந்தைக்கு வந்த 2 குழந்தைகள் உள்பட 9 பேர் பரிதாபமாக இறந்தனர். 30-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். பக்ரீத் பண்டிகை நெருங்கி வருவதால் ஏராளமான பொதுமக்கள் பொருட்கள் வாங்க குவிந்து இருந்தனர். இவர்கள் மீது குண்டுகள் வீசப்பட்டதால் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டு உள்ளனர்.

    ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக டமாஸ்கஸ் தெரிவித்து உள்ளது. ஆனால் இது குறித்து சிரியாவோ, ரஷியாவோ எந்த கருத்தையும் கூறவில்லை. படுகாயம் அடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமாக உள்ளது. இதனால் சாவு எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த ஆண்டு சிரியாவில் நடந்த மோசமான சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சூடானின் கார்டோமில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.
    • இதில் 5 குழந்தைகள் உள்பட 17 பேர் கொல்லப்பட்டனர்.

    சூடான்:

    ஆப்பிரிக்க நாடான சூடானில் அதிகாரத்தை கைப்பற்றுவதில் ராணுவம்-துணை ராணுவம் இடையே உள்நாட்டு போர் மூண்டுள்ளது.

    இதனால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தும் உள்ளனர்.

    இந்நிலையில், சூடானில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டனர்.

    சூடான் ராணுவத்திற்கும், பாராமிலிட்டரி விரைவு ஆதரவுப் படைகளுக்கும் இடையிலான சண்டையில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    காயமடைந்த பொதுமக்களில் பலர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் 25 வீடுகள் முற்றிலும் அழிக்கப்பட்டது. இறந்தவர்களில் 5 குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் அடங்குவர் என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • சிறுபான்மையின அரசியல் அமைப்பின் ஆண்டு விழா நடைபெற்ற போது தாக்குதல் நடத்தப்பட்டது.
    • பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் உட்பட 80 பேர் கொல்லப்பட்டதாக தகவல்

    மியான்மர் நாட்டில் கடந்த 2020 ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆங் சான் சூ கியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி ஆட்சியை பிடித்தது. என்றாலும் தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த ஆட்சியை கலைத்த அந்நாட்டு ராணுவம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. ஆங் சான் சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அந்நாட்டின் வடக்கு மாகாணமான கச்சினில் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த அரசியல் அமைப்பின் ஆண்டு விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் விழா நடைபெற்ற பகுதியில் ராணுவனத்தினர் விமானம் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.

    இதில் பார்வையற்றோர், பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் உட்பட 80 பேர் உயிரிழந்தனர். நேற்று அந்நாட்டு ராணுவ அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த தாக்குதல் உறுதிபடுத்தப்பட்டது. எனினும் உயிரிழந்தவர்களில் பாடகர்கள் மற்றும் பார்வையாளர்கள் இல்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.

    இதனிடையே, மியான்மர் ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு ஐ.நா.சபை கண்டனம் தெரிவித்துள்ளது நிராயுதபாணியான பொது மக்களுக்கு எதிராக ராணுவம் தாக்குதல் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இதற்கு ராணுவ அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    ஏமனில் ஆஸ்பத்திரி மீது கிளர்ச்சியாளர்கள் வீசிய குண்டு வீச்சில் மருத்துவ ஊழியர் ஒருவர் மற்றும் 4 சிறுவர்கள் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். #YemenAirStrike
    சனா:

    ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், அதிபர் ஆதரவு படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது.

    இதில் அதிபருக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதலில் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது.

    இந்த நிலையில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சாடா நகரில் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. அப்போது அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரி மீது குண்டு வீசப்பட்டது.

    இதில் ஆஸ்பத்திரி கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் பலர் இதில் சிக்கினர்.

    மருத்துவ ஊழியர் ஒருவர் மற்றும் 4 சிறுவர்கள் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 8 பேர் பலத்த காயம் அடைந்தனர். 
    சிரியா நாட்டின் கிழக்குப்பகுதியில் ஈராக் எல்லையோரம் அமெரிக்க படைகள் ஐ.எஸ் பயங்கவாதிகளை குறிவைத்து நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 54 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். #Syria
    பெய்ரூட்:

    சிரியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போரில் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கமும் உள்நாட்டு போராளிகளுக்கு உதவுவதாக களம் இறங்கியது. ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தை அழிப்பதாக கூறி அமெரிக்கக்கூட்டு படைகளும் ஈராக்கில் நுழைந்து போர் நடத்தி வருகின்றன.

    இந்நிலையில், ஈராக் சிரியா எல்லைப்பகுதியில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் பலர் பதுங்கி இருக்கின்றனர். இவர்கள் மீது போர் விமானங்கள் மூலம் அமெரிக்கப்படைகள் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் 28 பொதுமக்கள் உட்பட 54 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சிரியா போரை கண்காணித்து வரும் மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.

    ஆனால் இந்த தாக்குதல் குறித்து இதுவரை அமெரிக்கப்படை தரப்பில் இருந்து எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை. #Syria
    ×