search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    மியான்மர் நாட்டில் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதல்-  பொதுமக்கள் 80 பேர் உயிரிழப்பு
    X

    விமானம் மூலம் குண்டு வீச்சு, பாதிக்கப்பட்ட பகுதி

    மியான்மர் நாட்டில் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதல்- பொதுமக்கள் 80 பேர் உயிரிழப்பு

    • சிறுபான்மையின அரசியல் அமைப்பின் ஆண்டு விழா நடைபெற்ற போது தாக்குதல் நடத்தப்பட்டது.
    • பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் உட்பட 80 பேர் கொல்லப்பட்டதாக தகவல்

    மியான்மர் நாட்டில் கடந்த 2020 ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆங் சான் சூ கியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி ஆட்சியை பிடித்தது. என்றாலும் தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த ஆட்சியை கலைத்த அந்நாட்டு ராணுவம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. ஆங் சான் சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அந்நாட்டின் வடக்கு மாகாணமான கச்சினில் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த அரசியல் அமைப்பின் ஆண்டு விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் விழா நடைபெற்ற பகுதியில் ராணுவனத்தினர் விமானம் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.

    இதில் பார்வையற்றோர், பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் உட்பட 80 பேர் உயிரிழந்தனர். நேற்று அந்நாட்டு ராணுவ அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த தாக்குதல் உறுதிபடுத்தப்பட்டது. எனினும் உயிரிழந்தவர்களில் பாடகர்கள் மற்றும் பார்வையாளர்கள் இல்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.

    இதனிடையே, மியான்மர் ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு ஐ.நா.சபை கண்டனம் தெரிவித்துள்ளது நிராயுதபாணியான பொது மக்களுக்கு எதிராக ராணுவம் தாக்குதல் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இதற்கு ராணுவ அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×