என் மலர்
இந்தியா
- செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு நடந்து வருகிறது
- உலக நாடுகளின் ஏஐ கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்படுகிறது.
டெல்லியின் பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 6 நாட்கள் நாட்கள் நடக்கும் இந்த மாநாடு வரும் 21-ந்தேதி முடிவடைகிறது.
70,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்ட மாநாட்டு திடலில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், 600க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் 13 நாடுகளின் அரங்குகள் அடங்கிய கண்காட்சியையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் உலக நாடுகளின் ஏஐ கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்துள்ள Google CEO சுந்தர் பிச்சை பிரதமர் மோடியை சந்தித்து உரையாடினார்.
தொழில்நுட்பம், AI, புதிய கண்டுபிடிப்புகள், இந்தியாவின் வளர்ந்து வரும் டிஜிட்டல் சூழல் அமைப்பை வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தாக தகவல் வெளியாகியுள்ளது.
- மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த ரோபோவின் வீடியோவை பகிர்ந்திருந்தார்.
- பின்னர் சர்ச்சை வெடித்ததும் அந்தப் பதிவு நீக்கப்பட்டது.
டெல்லியின் பாரத் பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு நடந்து வருகிறது.
5 நாட்கள் நாட்கள் நடக்கும் இந்த மாநாடு வரும் 20ம் தேதி முடிவடைகிறது. நேற்று முன்தினம் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
70,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்ட மாநாட்டு திடலில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், 600க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் 13 நாடுகளின் அரங்குகள் அடங்கிய கண்காட்சியையும் அவர் தொடங்கி வைத்தார்.
இந்த கண்காட்சியில் உத்தரப் பிரதேசத்தின் கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் ஓரியன் என்ற பெயரிடப்பட்ட ஒரு ரோபோ நாயைக் காட்சிப்படுத்தியது.
இது அந்தப் பல்கலைக்கழகத்தின் சொந்தக் கண்டுபிடிப்பு என்று கூறப்பட்டது. ஆனால், அது உண்மையில் சீனாவின் 'Unitree Go2' என்ற நிறுவனத்தின் தயாரிப்பு என்றும், அதன் மீது பல்கலைக்கழகத்தின் முத்திரை மட்டுமே ஒட்டப்பட்டிருப்பதாகவும் பின்னர் தெரியவந்தது.
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த ரோபோவின் வீடியோவை ஆரம்பத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். பின்னர் சர்ச்சை வெடித்ததும் அந்தப் பதிவு நீக்கப்பட்டது. கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் மாநாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது.
இதுகுறித்து காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில், மோடி அரசாங்கம், செயற்கை நுண்ணறிவு (AI) விஷயத்தில் உலகளவில் இந்தியாவை கேலி செய்யும் ஒரு விஷயமாக மாற்றியுள்ளது.
நடந்து கொண்டிருக்கும் செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டில், சீன ரோபோக்கள் நம்முடையது போலக் காட்டப்படுகின்றன. சீன ஊடகங்கள் நம்மை கேலி செய்துள்ளன. இது இந்தியாவிற்கு உண்மையிலேயே சங்கடமான ஒன்று.
மோடியின் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்திய உச்சிமாநாட்டில் சீனாவின் ரோபோக்களை விளம்பரப்படுத்தி, அதே பொய்யை ஆதரிப்பது இன்னும் வெட்கக்கேடானது.
மோடி அரசாங்கம் நாட்டின் பிம்பத்திற்கு ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் செயற்கை நுண்ணறிவை ஒரு நகைச்சுவையாக மாற்றியுள்ளனர்" என்று தெரிவித்துள்ளது.
இதை குறிப்பிட்டு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதவில், இந்தியாவின் திறமை மற்றும் தரவுகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, AI உச்சிமாநாடு ஒரு ஒழுங்கற்ற விளம்பர (PR) நிகழ்வாக மாறியுள்ளது. இந்திய தரவு விற்பனைக்கு, சீன தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.
- ஏஐ உச்சி மாநாட்டின் அட்டவணை தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
- உலகத் தலைவர்கள் பங்கேற்க உள்ளதால் பொதுமக்களுக்கு நாளை அனுமதி இல்லை.
டெல்லியின் பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 5 நாட்கள் நாட்கள் நடக்கும் இந்த மாநாடு வரும் 20-ந்தேதி முடிவடைகிறது.
70,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்ட மாநாட்டு திடலில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், 600க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் 13 நாடுகளின் அரங்குகள் அடங்கிய கண்காட்சியையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் உலக நாடுகளின் ஏஐ கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் டெல்லியில் நடைபெறும் ஏஐ தாக்க உச்சி மாநாடு பிப்.21-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிப்.20-ந்தேதியுடன் நிறைவடைய இருந்த ஏஐ உச்சி மாநாட்டின் அட்டவணை தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
ஏஐ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, பிற உலகத் தலைவர்கள் பங்கேற்க உள்ளதால் பொதுமக்களுக்கு நாளை அனுமதி இல்லை. பிப்.20, 21 ஆகிய நாட்கள் ஏஐ உச்சி மாநாட்டிற்கு பொதுமக்கள் தாராளமாக செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- கன்னியாகுமரியில் இருந்து திங்கள், புதன், வியாழன், சனி என வாரத்தில் 4 நாட்கள் இயக்கப்படுகிறது.
- கஞ்சாவை கடத்தி வந்த நபர்களை ரெயிலில் போலீசார் தேடிப்பார்த்தனர்.
திருவனந்தபுரம்:
அசாம் மாநிலம் திப்ருகரில் இருந்து கன்னியாகுமரிக்கு இயக்கப்படும் வாராந்திர ரெயில் திப்ருகர் எக்ஸ்பிரஸ். இந்தியாவின் மிகவும் நீளமான ரெயில் பாதையை கொண்ட இந்த எக்ஸ்பிரஸ், 4,189 கிலோமீட்டர் தூரத்தை 74 மணி நேரத்தில் கடக்கிறது.
விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் 2013-ம் ஆண்டு இந்த ரெயில் சேவை தொடங்கப்பட்டது. கன்னியாகுமரியில் இருந்து திங்கள், புதன், வியாழன், சனி என வாரத்தில் 4 நாட்கள் இயக்கப்படுகிறது.
அசாம், நாகாலாந்து, மேற்கு வங்காளம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய 9 மாநிலங்களின் வழியாக இயக்கப்படும் விவேக் எக்ஸ்பிரசில், சமீபகாலமாக அதிகளவில் கஞ்சா கடத்தி கொண்டுவரப்படுகிறது.
அவ்வாறு கடத்தி வரப்பட்ட கிலோ கணக்கிலான கஞ்சாவை, குமரி மாவட்ட ரெயில்வே போலீசார் பிடித்துள்ளனர். இந்தநிலையில் விவேக் எக்ஸ்பிரசில் கடத்தி கொண்டுவரப்பட்ட 33 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திப்ருகரில் இருந்து கன்னியாகுமரி வந்த அந்த ரெயில், ஆலுவா ரெயில் நிலையத்திற்கு வந்தபோது கலால் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த ரெயிலின் பின்பகுதியில் இருந்த பொதுப்பெட்டியில் கழிவறைக்கு அருகே சந்தேகமளிக்கும் வகையில் சில பைகள் கிடந்தன. அவற்றை அவர்கள் சோதனை செய்தபோது, அதில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மொத்தம் 33 கிலோ கஞ்சா இருந்தது. அதனை போலீசாரும், கலால் துறையினரும் பறிமுதல் செய்தனர். கஞ்சாவை கடத்தி வந்த நபர்களை ரெயிலில் போலீசார் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர்கள் சிக்கவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு பல லட்சம் ரூபாய் ஆகும்.
ஆலுவா ரெயில் நிலையத்தில் கடந்த 13-ந்தேதி 10 கிலோ கஞ்சாவும், ஆலுவா சந்தையில் ரூ.17லட்சம் மதிப்புள்ள கஞ்சாவும், திருச்சூர் ரெயில் நிலையத்தில் நேற்று(17-ந்தேதி) 5 கிலோ கஞ்சாவும் பிடிபட்டது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் வெளி மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தல் அதிகரித்திருப்பதாக குற்ற புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜிபின் தெரிவித்துள்ளார்.
- குற்றம்சாட்டப்பட்டவருக்கு தண்டனை குறையும் சூழல் ஏற்பட்டது.
- பாதிக்கப்பட்டவர் மீதான இரக்கமும், மனிதாபிமானமும் இருக்க வேண்டும்.
அலகாபாத் உயர் நீதிமன்றம், சிறுமிக்கு பாலியல் தொந்தறவு அளித்த நபர் மீதான போக்சோ வழக்கு ஒன்றில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வழங்கிய தீர்ப்பில், தகாத முறையில் தொடுவதும், பைஜாமாவை கீழிறக்குவதும் பாலியல் வன்கொடுமைக்கான ஆயத்தம் மட்டுமே என்றும், அது வன்புணர்வு முயற்சி அல்ல என்றும் கூறியிருந்தது.
இதனால் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு தண்டனை குறையும் சூழல் ஏற்பட்டது. இந்த தீர்ப்பு விமர்சனங்களை ஏற்படுத்தியது
இதை கண்டித்து மூத்த வழக்கறிஞர் ஷோபா குப்தா எழுதிய கடிதத்தை ஏற்று, உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.
தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை நேற்று விசாரித்தது.
தலைமை நீதிபதி சூர்ய காந்த், "நீதிபதிகளின் தீர்ப்புகள் சட்டக் கொள்கைகளை மட்டும் கொண்டிருக்கக் கூடாது; பாதிக்கப்பட்டவர் மீதான இரக்கமும், மனிதாபிமானமும் அதில் இருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்த உச்சநீதிமன்ற அமர்வு, போக்சோ சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் மீது மீண்டும் பாலியல் வன்கொடுமை முயற்சி என்ற கடுமையான பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
மேலும், பாலியல் குற்ற வழக்குகளைக் கையாளும் போது நீதிபதிகள் உணர்வுப்பூர்வமாகச் செயல்பட வேண்டியது அவசியம் என்றும் இதற்காகப் புதிய வழிகாட்டுதல்களை உருவாக்க ஒரு நிபுணர் குழுவை அமைக்குமாறும் தேசிய நீதித்துறை அகாடமியின் இயக்குநருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- இதுவரை பாகிஸ்தானுக்கு வீணாகச் சென்ற நீரை, இனி நமது நாட்டு விவசாயிகளின் நலனுக்காகப் பயன்படுத்துவோம்
- இந்தத் திட்டத்திற்கு 1982-லேயே இந்திரா காந்தி அடிக்கல் நாட்டினார்.
பஞ்சாப் - ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் கட்டப்பட்டு வரும் ஷாபுர்கண்டி அணைத் திட்டம் இறுதி நிலையை எட்டியுள்ளது.
இதன் மூலம், ரவி நதியிலிருந்து பல தசாப்தங்களாக பாகிஸ்தானுக்குச் சென்று கொண்டிருந்த உபரி நீர், இந்த அணை கட்டி முடிக்கப்பட்ட பிறகு முழுமையாக நிறுத்தப்படும்.
ஷாபுர்கண்டி அணைத் கட்டுமானம் வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் நிறைவடையும் என்று ஜம்மு காஷ்மீர் நீர்வளத்துறை அமைச்சர் ஜாவேத் அகமது ராணா அறிவித்துள்ளார்.
"இதுவரை பாகிஸ்தானுக்கு வீணாகச் சென்ற நீரை, இனி நமது நாட்டு விவசாயிகளின் நலனுக்காகப் பயன்படுத்துவோம்" என்று அமைச்சர் ராணா தெரிவித்துள்ளார்.
இந்த அணையில் தேக்கப்படும் நீரைக் கொண்டு ஜம்மு காஷ்மீரின் கதுவா மற்றும் சாம்பா மாவட்டங்களில் உள்ள 32,173 ஹெக்டேர் வறண்ட நிலங்களுக்குப் பாசன வசதி அளிக்கப்படும்.
மேலும், பஞ்சாபில் உள்ள 5,000 ஹெக்டேர் நிலங்களும் பலன் பெறும். இந்தத் திட்டத்தின் மூலம் 206 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
1960-ஆம் ஆண்டு போடப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி, ரவி நதியின் மீது இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு.
இந்தத் திட்டத்திற்கு 1982-லேயே இந்திரா காந்தி அடிக்கல் நாட்டினார். ஆனால், மாநிலங்களுக்கு இடையிலான சிக்கல்களால் தடைபட்டிருந்த இந்தப் பணி, 2018ல் மத்திய அரசின் தலையீட்டிற்கு பிறகு வேகம் எடுத்தது.
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. மேலும் செனாப் நதியின் குறுகியும் நீர் மின் நிலையத்தை கட்ட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
- வழிப்பறியில் ஈடுபட்டு தனது மனைவியைக் கொன்றுவிட்டதாக அன்ஷுல் போலீசுக்கு போன் செய்துள்ளார்.
- முதலில் கழுத்தை நெரித்தும், பின்னர் கத்தரிக்கோலால் கழுத்தை அறுத்தும் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்தவர் மஹக் (27). இவரின் கணவர் அன்ஷுல் தவான், சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் ஆக உள்ளார். இவர்களுக்கு கடந்த செப்டம்பர் 25, 2025 அன்று திருமணம் நடைபெற்றது.
மஹக் கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த பிப்ரவரி 14, சனிக்கிழமை அன்று தம்பதியினர் குருகிராமிலிருந்து அன்ஷுலின் சொந்த ஊரான ஹிசாரிற்கு சென்றுள்ளனர்.
அங்கு காதலர் தினத்தை அவர்கள் கொண்டாடிவிட்டு, அடுத்த நாள் பிப்ரவரி 15 ஹன்சியில் உள்ள மஹக்கின் பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
அன்று மாலை 7 மணி அளவில் இருவரும் மீண்டும் குருகிராமிற்கு காரில் புறப்பட்டுள்ளனர்.
ஆனால், வழியில் ஜஜ்ஜார் அருகே உள்ள பசோளர் கிராமத்தின் அருகே ஒரு ஒதுக்குப்புறமான பாதையில் சிலர் வழிப்பறியில் ஈடுபட்டு தனது மனைவியைக் கொன்றுவிட்டதாக அன்ஷுல் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அன்ஷுல் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது.
தீவிர விசாரணைக்குப் பிறகு அன்ஷுல் தானே மனைவியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும், அன்றைய தினம் காரில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் முதலில் கழுத்தை நெரித்தும், பின்னர் கத்தரிக்கோலால் கழுத்தை அறுத்தும் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
தடயங்கள் சிக்காமல் இருக்க கையுறைகளை அணிந்து இக்கொலையைச் செய்துள்ளார். காவல்துறையினர் அன்ஷுலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நான் வீட்டில் இல்லாதபோது எனது மகன் யாருக்கும் தெரியாமல் கார் சாவியை எடுத்துச் சென்றிருக்கிறான்.
- எனது மகன் விபத்து நடந்த இடத்திலிருந்து தப்பி ஓடவில்லை.
டெல்லியின் துவாரகாவில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி கல்லூரி அருகே கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி நடந்த சாலை விபத்தில் சஹில் தனேஷ்ரா என்ற 23 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
17 வயது சிறுவன் தனது சகோதரியுடன் ரீல்ஸ் எடுத்துக்கொண்டு அதிவேகமாக ஓட்டி வந்த ஸ்கார்பியோ கார், எதிரே வந்த சஹிலின் மோட்டார் சைக்கிள் மீது மோதியதுடன், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு டாக்ஸி மீதும் மோதியுள்ளது. சஹில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டாக்ஸி ஓட்டுநரும் காயமடைந்தார்.
அந்த சிறுவன் கைது செய்யப்பட்டு சிறார் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டார். ஆனால் சிறுவன் 10-ஆம் வகுப்பு மாணவன் என்பதாலும், அவனுக்கு தேர்வுகள் இருப்பதாலும் நீதிமன்றம் அவனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.
ஆனால் தனக்கு நீதி வேண்டும் என்றும், சிறுவனை வயது வந்தவராக கருதி நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும் விபத்தில் உயிரிழந்த சஹில் தனேஷ்ராவின் தாய் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
மேலும், சிறுவனிடம் காரைக் கொடுத்த அவனது தந்தை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த வீடியோ வைரலாகி, சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதற்கு கண்டனம் எழுந்தது.
இந்நிலையில் விபத்து ஏற்படுத்திய சிறுவனின் தொழிலதிபர் தந்தை, ஊடகத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், இது ஒரு மிகப்பெரிய தவறு. இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். என் குடும்பமே இந்தச் செயலால் கடும் அதிர்ச்சியிலும் அவமானத்திலும் ஆழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட தாயிடம் நான் வாழ்நாள் முழுவதும் மன்னிப்பு கோருவேன்.
சம்பவம் நடந்த போது நான் வேலை விஷயமாக கோரக்பூரில் இருந்தேன். நான் வீட்டில் இல்லாதபோது எனது மகன் யாருக்கும் தெரியாமல் கார் சாவியை எடுத்துச் சென்றிருக்கிறான். நான் டெல்லியில் இருந்திருந்தால் நிச்சயம் இது நடந்திருக்காது.
நான் வீட்டில் இருக்கும்போது எப்போதும் கண்டிப்பாகவே இருப்பேன். நான் இல்லாதபோது அவனது தாயாரையும் மீறி அவன் இவ்வாறு நடந்து கொண்டுள்ளான்.
எனது மகன் விபத்து நடந்த இடத்திலிருந்து தப்பி ஓடவில்லை. அங்கேயே இருந்து உதவி செய்தான். எனது மனைவி போன் செய்து தகவல் சொன்னவுடன், உடனடியாகக் காயமடைந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி நான் அறிவுறுத்தினேன்" என்று தெரிவித்தார்.
விபத்து ஏற்படுத்திய கார் சாலை விதிகளை மீறியதாக ஏற்கனவே பல அபராதங்களை பெற்றுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "நாங்கள் வணிக ரீதியான தொழில் செய்து வருவதால், டிரைவர்கள்தான் பெரும்பாலும் இந்த வாகனத்தை ஓட்டுவார்கள். முந்தைய அபராதங்களுக்கு அதுவே காரணம்" என்று பதிலளித்தார்.
- வங்கியின் எதிரே உள்ள ஒரு உணவகத்தில் மதிய உணவு வாங்கிக்கொண்டு சாலையைக் கடக்க முயன்றார்.
- அந்த வழியாக அதிவேகமாக வந்த ராயல் என்பீல்டு புல்லட் பைக் அவர் மீது மோதியது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கெம்பேகவுடா லேஅவுட் பகுதியைச் சேர்ந்த யோகேஸ்வரி (27 டாக்டர் ராஜ்குமார் சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார்.
கடந்த திங்கள்கிழமை மதியம் 1 மணி அளவில், யோகேஸ்வரி வங்கியின் எதிரே உள்ள ஒரு உணவகத்தில் மதிய உணவு வாங்கிக்கொண்டு சாலையைக் கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த ராயல் என்பீல்டு புல்லட் பைக் அவர் மீது மோதியது.
இந்த விபத்தில் யோகேஸ்வரி மற்றும் பைக்கை ஓட்டி வந்த தீபக் ஆகிய இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி, யோகேஸ்வரி அன்று இரவு 9 மணி அளவில் உயிரிழந்தார்.
பைக்கை ஓட்டி வந்தவர் உல்சூர் பகுதியைச் சேர்ந்த தீபக் என்ற மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து, அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் அதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
- சிறுமியின் உடலை அடைத்து வைத்த அறையிலேயே குல்வர்தன் மது போதையில் இரவு முழுவதும் தூங்கினான்.
- சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர்.
ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளி அருகே உள்ள நீருகட்டு வாரி பள்ளியை சேர்ந்தவர் கோபிநாத். நெசவு தொழிலாளி. இவரது மகள் ரிஷிகா பிரியா (வயது 7). பெற்றோர்கள் இருவரும் தனித்தனியாக வேலைக்குச் சென்று தங்களது 2 குழந்தைகளையும் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்க வைத்து வந்தனர்.
நேற்று முன்தினம் பள்ளிக்கு விடுமுறை என்பதால் ரஷிகா பிரியா தனது தாத்தா, பாட்டியுடன் வீட்டில் இருந்தார். அவரது பெற்றோர் வேலைக்குச் சென்று இருந்தனர்.
சிறுமியின் எதிர்த்த வீட்டை சேர்ந்தவர் குல்வர்தன் (30). மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையானவர். வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை குல்வர்தன் நைசாக பேசி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
பின்னர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து துடிதுடிக்க கொலை செய்தார்.
யாருக்கும் தெரியாமல் இருக்க வீட்டில் இருந்த பிளாஸ்டிக் டிரம்மில் சிறுமியின் உடலை அடைத்து வைத்தார். வீட்டிற்கு வெளியே விளையாடிய சிறுமி காணாமல் போனது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
கணவன், மனைவி இருவரும் பதறி அடித்து கொண்டு வந்து அப்பகுதியில் உள்ளவர்களுடன் சேர்ந்து சிறுமியை தேடிப் பார்த்தனர். ஆனால் அவர்களால் மகளை கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து மதனப்பள்ளி போலீசில் புகார் செய்தனர். இந்த நிலையில் சிறுமியின் உடலை அடைத்து வைத்த அறையிலேயே குல்வர்தன் மது போதையில் இரவு முழுவதும் தூங்கினான்.
நேற்று காலை சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் போலீசார் குல்வர்தன் வீட்டின் கதவை தட்டினர். மது போதையில் இருந்த குல்வர்தன் கதவை திறக்கவில்லை. ஜன்னல் வழியாக பார்த்தபோது குல்வர்தன் தூங்கிக்கொண்டு இருந்தார்.
அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் குல்வர்தன் ரிஷிகா பிரியாவை அழைத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
மீண்டும் குல்வர்தன் வீட்டிற்கு சென்ற போலீசார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். குல்வர்தன் போலீசாரை தாக்கி கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது ரிஷிகா பிரியாவின் உடலில் ஆடை இல்லாமல் கொலை செய்யப்பட்டு பிளாஸ்டிக் டிரம்மில் அடைக்கப்பட்டு பிணமாக கிடந்தார்.
போலீசார் சிறுமியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல முயன்றனர். சிறுமியின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் சிறுமியின் பிணத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் மும்பை-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
குல்வர்தனை பொது இடத்தில் வைத்து தூக்கிலிட வேண்டும். இல்லை என்றால் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்தனர். போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் குல்வர்தனுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என உறுதியளித்தனர்.
இதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் ஆந்திரா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- யாரும் தன்னை கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதற்காக வாகனத்தின் நம்பர் ப்ளேட் இல்லாமல் உலா வந்துள்ளார்.
- இதற்கு முன்பு இதே போன்ற சம்பவங்களில் ஈடுபட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் வீடியோவிற்கு கிடைக்கும் லைக்கிற்கு ஆசைப்பட்டு பலரும் ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டு இன்னுயிரை இழக்கும் பல வீடியோக்களை காணமுடிகிறது. இந்த வீடியோக்களை பார்த்து விழிப்புணர்வு வரும் என்று பார்த்தால் இங்கு ஒருவர் அவருக்கு மட்டுமல்லாமல் மற்றவருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வீடியோவை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இதெல்லாம் பார்த்து சும்மா விடுவாங்களா நம்ம போலீசார்... அதிரடி ஆக்ஷனில் இறங்கி அந்த வாலிபரை கைது செய்துள்ளனர். அதுகுறித்து பார்ப்போம்...
ரீல்ஸ்க்கு ஆசைப்பட்டு சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் வாலிபர் ஒருவர், சாலையில் இயங்கிக்கொண்டிருக்கும் அரசு பேருந்தின் கதவை திறப்பது, பேருந்தின் முன்பு வேகமாக இருசக்கர வாகனத்தில் போய் நிற்பது மற்றும் சாலையில் செல்லும் வாகனங்களின் கதவை திறப்பது என்று பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் நடந்துக்கொண்டுள்ளார். மேலும் அதி புத்திச்சாலித்தனமாக யாரும் தன்னை கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதற்காக வாகனத்தின் நம்பர் ப்ளேட் இல்லாமல் உலா வந்துள்ளார்.
இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட வாலிபரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு பல்வேறு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து இருசக்கர வாகனத்தை ஓட்டிய வாலிபரின் அடையாளத்தை கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து வடகிழக்கு டெல்லியில் கஜூரி காஸில் வசிக்கும் துஷார் புனியா என்ற வாலிபரை கைது செய்து அவரிடம் இருந்து இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதற்கு முன்பு இதே போன்ற சம்பவங்களில் ஈடுபட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 13 நாடுகளின் அரங்குகள் அடங்கிய கண்காட்சியும் நடைபெற்று வருகிறது.
- இந்தியாவின் தொழில்நுட்பத் திறனை உலகுக்குக் காட்டும் ஒரு முக்கியமான நிகழ்ச்சி பாழாகியுள்ளது.
டெல்லியின் பாரத் பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு நடந்து வருகிறது.
5 நாட்கள் நாட்கள் நடக்கும் இந்த மாநாடு வரும் 20ம் தேதி முடிவடைகிறது. நேற்று முன்தினம் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
70,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்ட மாநாட்டு திடலில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், 600க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் 13 நாடுகளின் அரங்குகள் அடங்கிய கண்காட்சியையும் அவர் தொடங்கி வைத்தார்.
இதில் உலக நாடுகளின் ஏஐ கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் மாநாட்டிற்கான ஏற்பாடுகளில் குளறுபாடு ஏற்பட்டதால் கண்காட்சியாளர்கள், சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகள், பார்வையாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பலர் உணவு, குடிநீர் இன்றி தவித்தனர்.
பாதுகாப்பு காரணம் காட்டி சில நிறுவனங்கள் அவர்களின் ஏஐ தயாரிப்புகள் காட்சிப்படுத்த அனுமதிக்கப்படவில்லை. இதனால் பெரும் செலவு செய்து வந்த அவர்கள் விரக்தியுடன் திரும்பினர்.
லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் திருடு போனதால் கண்காட்சி நடத்த வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் 24 மணி நேரத்தில் அவை மீட்கப்பட்டன.
இதுபோன்ற மோசமான ஏற்பாட்டிற்காக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்கள் சந்திப்பில் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.
மக்களின் வருகை அதிகமாக இருந்தது. புகார்களை உடனுக்குடன் தீர்க்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்களின் கருத்துகளைக் கொண்டு எஞ்சிய நாட்களில் ஏற்பாடுகள் சீர் செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்தக் குளறுபடிகளை விமர்சித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "இது அரசின் தவறான நிர்வாகத்தைக் காட்டுகிறது. போதிய திட்டமிடல் இல்லாததால், இந்தியாவின் தொழில்நுட்பத் திறனை உலகுக்குக் காட்டும் ஒரு முக்கியமான நிகழ்ச்சி பாழாகியுள்ளது" என்று தெரிவித்தார்.






