என் மலர்
இந்தியா
- ராணுவ ஓய்வூதிய விதிகள் 1961 அடிப்படையில், புகைபிடித்தல் காரணமாக ஏற்படும் பக்கவாதம் "பணி நிமித்தமான பாதிப்பு என்று கருதப்படாது.
- தேவையற்றப் பழக்கங்களால் ஏற்படும் நோய்களுக்கு ஊனமுற்ற ஓய்வூதியம் வழங்க முடியாது
புகைபிடித்தல் காரணமாக ஏற்படும் பக்கவாதத்திற்கு ஊனமுற்ற ஓய்வூதியம் வழங்கப்படமாட்டாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மது அருந்துதல், புகையிலை அல்லது போதைப்பொருள் பயன்பாடு போன்ற தனிப்பட்ட, தேவையற்றப் பழக்கங்களால் ஏற்படும் நோய்களுக்கு ஊனமுற்ற ஓய்வூதியம் வழங்க முடியாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி அரவிந்த் குமார் மற்றும் நீதிபதி பி.பி. வரலே ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. அவருக்கு ஏற்பட்ட 'Stroke Ischemic RT MCA TERRITORY' (மூளையின் வலது பக்க தமனியில் ஏற்பட்ட இரத்த அடைப்பால் வந்த பக்கவாதம்) பாதிப்பு, ராணுவப் பணியால் ஏற்பட்டதோ அல்லது பணிச் சூழலால் தீவிரமடைந்ததோ அல்ல என்று மருத்துவக் குழு அறிக்கை சமர்பித்த நிலையில் மனுவை தள்ளுபடி செய்து, ஊனமுற்றோர் ஓய்வூதிய கோரிக்கையை நிராகரித்த ஆயுதப்படை தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதிசெய்தது.
அவரது பக்கவாதத்திற்கு புகைபிடித்தலே காரணம் என்று மருத்துவக் குழு உறுதி செய்தது. அவர் ஒரு நாளைக்கு சுமார் 10 பீடிகள் புகைக்கும் பழக்கம் கொண்டவர் எனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஒரு ரத்த உறைவு அல்லது கொழுப்புப் படிவம் மூளைக்குச் செல்லும் தமனியை அடைக்கும்போது, ஆக்சிஜன் விநியோகத்தைத் தடுத்து இரத்த ஓட்டத்தைக் குறைப்பதன் மூலம் 'இஸ்கிமிக் ஸ்ட்ரோக்' ஏற்படுகிறது என்றும், இதன் காரணமாக மூளைத் திசுக்கள் பாதிப்படைகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இதற்கான முக்கிய காரணிகளாக உயர் இரத்த அழுத்தம், புகைபிடித்தல், சர்க்கரை நோய், அதிக கொலஸ்ட்ரால், உடல் பருமன் மற்றும் இதயத் துடிப்பு ஒழுங்கற்ற நிலை ஆகியவை இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து "முதல் மருத்துவ அறிக்கை மற்றும் மருத்துவக் குழுவின் கருத்துகளை நாங்கள் ஆய்வு செய்ததில், அவருக்கு ஏற்பட்ட 'Stroke Ischemic RT MCA TERRITORY' எனும் பாதிப்பானது இராணுவப் பணியால் ஏற்பட்டதோ அல்லது பணியின் காரணமாகத் தீவிரமடைந்ததோ அல்ல என்பதில் எங்களுக்கு எவ்விதச் சந்தேகமும் இல்லை.
மேல்முறையீடு செய்தவர் ஒரு நாளைக்கு பத்து பீடிகள் என்ற கணக்கில் புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர் என்பது இரண்டு அறிக்கைகளிலும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதே இதற்கு காரணமாகும்," என்று நீதிமன்றம் கூறியது.
இராணுவ ஓய்வூதிய விதிகள் 1961 மற்றும் மருத்துவ அதிகாரிகளுக்கான வழிகாட்டுதல் 2002 ஆகியவற்றின் அடிப்படையில், புகைபிடித்தல் காரணமாக ஏற்படும் பக்கவாதம் "பணி நிமித்தமான பாதிப்பு" (Attributable to service) என்று கருதப்படாது.
- ஓடிச் சாலையைக் கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த ராயல் என்பீல்டு புல்லட் மோதி இழுத்து செல்லப்பட்டார்.
- பைக் ஓட்டி வந்த தீபக் (21) என்ற இளைஞரும் கீழே விழுந்து காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்
பெங்களூருவில் மதிய உணவிற்காக வெளியே சென்ற வங்கி ஊழியர் இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இறந்தவர் லக்கேரே அருகே உள்ள கெம்பேகவுடா லேஅவுட்டில் வசிக்கும் யோகேஸ்வரி (27) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இவர் ராஜாஜிநகரில் உள்ள HDFC வங்கியில் பணிபுரிந்தார். திங்கட்கிழமை, மதியம் 12:30 மணியளவில், யோகேஸ்வரி தனது சக ஊழியருடன் அருகிலுள்ள உணவகத்திற்கு மதிய உணவு வாங்க சென்றுள்ளார்.

உணவு வாங்கிக்கொண்டு இருவரும் ராஜ்குமார் சாலையை கடக்க நின்றுகொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த வாகனத்தைக் கண்டு அவரது சக ஊழியர் பாதியிலேயே நின்றுவிட்டார். ஆனால், யோகேஸ்வரி வாகனத்தின் வேகத்தைக் கணிக்கத் தவறி ஓடிச் சாலையைக் கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த ராயல் என்பீல்டு புல்லட் மோதி இழுத்து செல்லப்பட்டார்.
தலையில் பலத்த காயமடைந்த அவரைமீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சக ஊழியர்கள் அனுமதித்துள்ளனர். ஆனால் அதிக ரத்த இழப்பு காரணமாக உயிரிழந்தார். இதனிடையே பைக் ஓட்டி வந்த தீபக் (21) என்ற இளைஞரும் கீழே விழுந்து காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
- இளமைப் பருவத்தில் மகனைப் பெற்றெடுப்பவர் எப்போதும் பயனுள்ளவராக இருப்பார்.
- ஒரு மகள் பிறந்தாள். அதனால்தான் நீங்கள் இன்று எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கிறீர்கள்
ராஜஸ்தான் சட்டமன்றத்தில் பட்ஜெட் விவாதத்தின் போது பாஜக எம்எல்ஏ பகதூர் சிங் கோலி, பாஜகவின் பட்ஜெட்டை ஆண்குழந்தை என்றும், காங்கிரஸின் பட்ஜெட்டை பெண்குழந்தை என்றும் ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவையில் பேசிய அவர்,
"எங்களது முதல் பட்ஜெட் வந்தது, ஒட்டுமொத்த ராஜஸ்தானும் அதனைப் பாராட்டியது. இரண்டாவது பட்ஜெட்டும் வரவேற்கப்பட்டது. மூன்றாவது பட்ஜெட்டும் வரவேற்கப்பட்டது.
எங்கள் அரசு முதல் பட்ஜெட்டில் ஒரு மகனைப் பெற்றெடுத்தது, இரண்டாவது பட்ஜெட்டில் ஒரு மகனைப் பெற்றெடுத்தது, மூன்றாவது பட்ஜெட்டிலும் ஒரு மகனைப் பெற்றெடுத்தது. இளமைப் பருவத்தில் மகனைப் பெற்றெடுப்பவர் எப்போதும் பயனுள்ளவராக இருப்பார்.
அசோக் கெலாட் முதலமைச்சராக இருந்தபோது, அவர் தனது கடைசி பட்ஜெட்டில் அறிவிப்புகளை வெளியிட்டார், அதனால்தான் அது ஒரு மகனைப் பெறவில்லை; ஒரு மகள் பிறந்தாள். அதனால்தான் நீங்கள் இன்று எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கிறீர்கள்," என்று கோலி கூறினார்.
பெண் குழந்தையை ஒரு தோல்வியாகவும் அல்லது பலவீனமாகவும் சித்தரிக்கும் இவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த பேச்சு பாலின பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, எதிர்க்கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.
இதுதொடர்பாக பேசியுள்ள ராஜஸ்தான் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஸ்வர்ணிம் சதுர்வேதி,
"தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினர், அதுவும் சட்டமன்றத்திலேயே இப்படிப் பேசுவதை கற்பனை செய்து பாருங்கள். இது அவர்களின் குறுகிய மனப்பான்மையையும், சிந்தனைப் போக்கையும் காட்டுகிறது. காங்கிரஸை விமர்சிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் எல்லா எல்லைகளையும் தாண்டிவிட்டார்கள். இது பாலினத்திற்கு எதிரான அவர்களின் பாரபட்சமான மனநிலையைக் காட்டுகிறது, இது ஒரு பாலியல் ரீதியான (sexist) கருத்தைத் தவிர வேறில்லை. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
- காட்டில் இலைகள் சேகரித்துக் கொண்டிருந்தபோது கரடி கூட்டம் சுற்றி வளைத்தது.
- ஒரு கரடி கணவனை கடுமையாக தாக்தியதால், மனைவி கரடியுடன் சண்டையிட்டார்.
ஒடிசா மாநிலம் கரன்ஜியாவில் உள்ள மிலு என்ற கிராமத்தில் மால்டே சோரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி லிலி சோரனுடன் சேர்ந்து காட்டில் இலைகள் சேகரிப்பதற்கான சென்றார்.
அடர்ந்த காட்டிற்குள் இலைகள் சேகரித்துக் கொண்டிருக்கும்போது திடீரென 6 கரடிகள் அடங்கிய கூட்டம் அவர்களை சுற்றிக் கொண்டது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அச்சத்துடன் நின்றனர்.
அப்போது அந்த கூட்டத்தில் இருந்த கரடிகளில் ஒன்று மால்டே சோரன் மீது பாய்ந்து கடுமையான தாக்கியது. கரடிகள் சுற்றி நிற்க, ஒரு கரடி தனது கணவனை கடுமையாக தாக்கிய நிலையில் லிலி சோரன் அஞ்சி ஓடவில்லை. தனது கையில் வைத்திருந்து கோடரி போன்ற ஆயுதத்தால் துணிச்சலாக தாக்கினார். இதனால் கரடி பயந்து மால்டே சோரனை விட்டுவிட்டு ஓடியது.
பலத்த காயம் அடைந்த மால்டே சோரன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் கேர்க்கப்பட்டது. பின்னர் உயர்சிகிச்சைக்கான கியோன்ஜார் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஒடிசாவில் யானைக் கூட்டம் கிராம மக்களை மிதித்து கொலை செய்ய நிலையில், தற்போது கரடிக்கூட்டம் மக்களை தாக்க தொடங்கியுள்ளது.
- நான் காங்கிரஸிலேயே நீடித்திருந்தால் எனக்கு என்ன கிடைத்திருக்குமோ, அதைவிட மிக அதிகமானவற்றை இறைவன் எனக்கு வழங்கியிருக்கிறார்.
- 2014 ஆம் ஆண்டு தருண் கோகோய் அமைச்சரவையில் இருந்து ஹிமந்தா பிஸ்வா சர்மா ராஜினாமா செய்தார்.
அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, 2014-ஆம் ஆண்டிலேயே தாம் முதலமைச்சராகப் பதவியேற்க வேண்டிய சூழல் இருந்ததாகவும், ஆனால் ராகுல் காந்தியின் தலையீட்டால் அப்போது நிலைமை தலைகீழாக மாறியதாகவும், அதனால் தான் அந்த பதவியை இழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இன்று மாநில சட்டமன்றத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹிமந்தா சர்மா,
"நான் இன்னும் மேடம் என அழைக்கும் அவர் (சோனியா காந்தி) என்னிடம் தேதியை முடிவு செய்யச் சொன்னார். ஜூன் (2014) மாதம் காமாக்யா கோயிலில் நடக்கும் அம்புபாச்சி மேளாவுக்கு அடுத்த நாள் நான் சத்தியப்பிரமாணம் செய்வேன் என்று அவரிடம் சொன்னேன்.
ஆனால் அமெரிக்காவில் இருந்துவந்த ராகுல் காந்தியின் அழைப்பால் நிலைமை மாறியது. எனக்கு நீதி வழங்கப்படவில்லை, ஆனால் கார்கே எப்போதும் கட்சியில் உள்ள எனது எதிரிகளிடம்: 'நீங்கள் ஹிமந்தாவுடன் சண்டையிடுங்கள், ஆனால் அவரிடம் தான் எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள் என்று சொல்வார்.
அப்போது நான் மனவேதனை அடைந்தேன், ஆனால் இப்போது ஒருவருடைய வாழ்க்கையில் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நான் நம்புகிறேன். நான் காங்கிரஸிலேயே நீடித்திருந்தால் எனக்கு என்ன கிடைத்திருக்குமோ, அதைவிட மிக அதிகமானவற்றை இறைவன் எனக்கு வழங்கியிருக்கிறார்.
பாஜக முதலமைச்சராக, அசாம் மாநிலத்திற்கும் சனாதன தர்மத்திற்கும் முழுமனதுடன் சேவை செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் காங்கிரஸில் இருந்திருந்தால் இது சாத்தியமாகி இருக்காது. இதற்காக நான் ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவை அனைத்தும் உண்மைகள், இதற்கு பல சாட்சிகள் உள்ளனர். ஆனால், நடக்காமல் போனதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்; ஏனெனில் அது நடந்திருந்தால், நான் என்றென்றும் களங்கப்பட்டிருப்பேன்." என்று தெரிவித்துள்ளார்.
2014-இல் அசாம் காங்கிரஸில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசலின் போது, 58 எம்.எல்.ஏ.க்கள் ஹிமந்தா சர்மாவுக்கு ஆதரவு அளித்ததாகவும், ஒருசிலர் நடுநிலை வகித்ததாகவும், அதே நேரத்தில் 12 பேர் மட்டுமே தருண் கோகோயின் ஆட்சி தொடரவேண்டும் எனக் கூறியதாகவும் தெரிவித்தார்.
2014 ஆம் ஆண்டு தருண் கோகோய் அமைச்சரவையில் இருந்து ஹிமந்தா பிஸ்வா சர்மா ராஜினாமா செய்தார். அடுத்த ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பின்னர் 2021-ல் அசாமின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- மூன்று மர்ம நபர்கள் ஏ.கே. 47 துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
- ஒரு மாதத்திற்குள் இது 2-வது கொலையாகும்.
பஞ்சாப் மாநிலத்தில் சில வாரங்களுக்கு முன் அமிர்தசரஸில் உள்ள வால்டோஹா கிராமத்தில், திருமண நிகழ்ச்சிக்காக காரில் சென்ற ஆம் ஆத்மி தலைவரும், பஞ்சாயத்து தலைவருமான ஜார்மால் சிங் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் ஹர்பிந்தர் சிங் என்ற ஆம் ஆத்தி கட்சியை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் திருமண விழாவிற்கு சென்றபோது அடையாளம் தெரியாத 3 நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த உறுப்பினர் மற்றும் பஞ்சாப் மாநில அமைச்சர் லால்ஜித் சிங் புல்லாருக்கு நெருக்கமானவர் என கிராம மக்கள் தெரிவித்துள்ளது.
மர்ம நபர்கள் ஏ.கே.47 துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளனர். சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து இரண்டு வெற்று தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டது. ஹர்பிந்தர் சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடைய உறவினர் படுகாயம் அடைந்துள்ளார் என போலீசார் தெரிவித்து்ளளனர்.
மேலும், குற்றவாளிகளை பிடிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் மாநாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது.
- எங்கள் பிரதிநிதிகளில் ஒருவருக்கு தவறான தகவல் கிடைத்துவிட்டது.
டெல்லியின் பாரத் பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு நடந்து வருகிறது.5 நாட்கள் நாட்கள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் தேதி நீட்டிக்கப்பட்டு தற்போது இந்த மாநாடு வரும் 21ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டுடன், 70,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்ட திடலில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், 600க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் 13 நாடுகளின் அரங்குகள் அடங்கிய கண்காட்சியையும் தொடங்கி வைத்தார்.
இந்த கண்காட்சியில் உத்தரப் பிரதேசத்தின் கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் ஓரியன் என்ற பெயரிடப்பட்ட ஒரு ரோபோ நாயைக் காட்சிப்படுத்தியது. இது அந்தப் பல்கலைக்கழகத்தின் சொந்தக் கண்டுபிடிப்பு என்று கூறப்பட்டது. ஆனால், அது உண்மையில் சீனாவின் 'Unitree Go2' என்ற நிறுவனத்தின் தயாரிப்பு என்றும், அதன் மீது பல்கலைக்கழகத்தின் முத்திரை மட்டுமே ஒட்டப்பட்டிருப்பதாகவும் பின்னர் தெரியவந்தது, பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த ரோபோவின் வீடியோவை ஆரம்பத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். பின்னர் சர்ச்சை வெடித்ததும் அந்தப் பதிவு நீக்கப்பட்டது. கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் மாநாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது.

இந்த நிலையில், கண்காட்சியில் சீன ரோபோ காட்சிப்படுத்தப்பட்ட விவகாரத்தில் கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளது. இது தொடர்பாக அந்த பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், "சமீபத்திய ஏ.ஐ. உச்சி மாநாட்டில் ஏற்பட்ட குழப்பத்திற்கு கல்கோடியாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நாங்கள் மிகவும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.
பெவிலியனை நிர்வகித்த எங்கள் பிரதிநிதிகளில் ஒருவருக்கு தவறான தகவல் கிடைத்துவிட்டது. தயாரிப்பின் தொழில்நுட்ப தோற்றம் குறித்து அவருக்குத் தெரியாது, மேலும் கேமராவில் இருக்கும் ஆர்வத்தில், பத்திரிகையாளர்களிடம் பேச அவருக்கு அதிகாரம் இல்லை என்றாலும், உண்மையில் தவறான தகவல்களைக் கொடுத்தார். ஏற்பாட்டாளர்களின் உணர்வைப் புரிந்துகொண்டு நாங்கள் வளாகத்தை காலி செய்துவிட்டோம்," என்று தெரிவித்தது.
- உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் தனித்துதான் போட்டி என மாயாவதி திட்டவட்டம்.
- ஆனால் கூட்டணி அமைத்து போட்டியிடப் போவதாக செய்திகள் பரவி வருவதாக மாயாவதி குற்றச்சாட்டு.
உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி, 2027 உத்தர பிரதேச தேர்தலில் தன்னுடைய கட்சி தனியாகத்தான் போட்டியிடும், எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்காது என்பதை ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
ஆனால், பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்தான் தேர்தலை சந்திக்கும் எனச் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் அந்த செய்து முற்றிலும் பொய்யானது என மாயாவதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாயாவதி கூறியதாவது:-
இது முற்றிலும் தவறான, பொய்யான, அடிப்படை ஆதாரமற்ற மற்றும் புனையப்பட்ட செய்திகள். பொதுமக்களை தவறாக வழிநடத்த வேண்டுமென்றே இந்த விவாதம் பரப்பப்படுகிறது.
இதுபோன்ற விவாதங்களுக்கு மத்தியில் ஊடகங்களின் சில பிரிவுகள் ஏதாவது ஒரு சாக்குப்போக்கைச் சொல்லி வரவிருக்கும் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும் என்ற வாதத்தைப் பரப்பி வருகின்றன. இது முற்றிலும் தவறானது.
இதுபோன்ற யூக செய்திகளில் ஈடுபடுவதை மீடியாக்கள் தவிர்க்க வேண்டும்.
கட்சி நிறுவனர் கன்ஷி ராமின் நினைவு தினமான கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9-ந்தேதி, பகுஜன் சமாஜ் கட்சி தனியாகத்தான் போட்டியிடும் என்பதை தெளிவாகத் தெரிவித்துவிட்டேன். அதன்பின் அதில் எந்த குழப்பமும் இல்லை.
இவ்வாறு மாயாவதி தெரிவித்தார்.
- என்னுடைய பாஸ்போர்ட் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
- செயலில் இருக்கும் பாஸ்போர்ட் தன்னிடம் இல்லை.
இந்தியாவின் தொழில் அதிபரான விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் கடன் பெற்று அதனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தினால் மோசடி மற்றும் பண மோசடி வழக்கை எதிர்கொண்டு வருகிறார். இவர் 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் இருந்து தப்பி ஓடினார். தற்போது இங்கிலாந்தில் உள்ளார்.
அவரை தப்பிய ஓடிய பொருளாதார குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. இதனை எதிர்த்து மும்பை நீதிமன்றத்தில் விஜய் மல்லையா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர், கவுதம் அங்காத் கொண்ட அமர்வு, விஜய் மல்லையா இந்தியா திரும்பும் வரை இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது. அவர் இந்தியாவுக்கு திரும்பும் எண்ணம் உள்ளதா? இல்லையா? என்பதை தெரிவிக்க வேண்டும் என்று கடந்த வாரம் தெரிவித்தது.
இந்த நிலையில் அமித் தேசாய் என்ற வழக்கறிஞர் மூலம் விஜய் மல்லையா மும்பை உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளார். அதில் "இங்கிலாந்தில் வெளியேற என்று சட்டபூர்வமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. என்னுடைய பாஸ்போர்ட் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதனால் செயலில் இருக்கும் பாஸ்போர் என்னிடம் இல்லை. ஆகவே, நான் எப்போது இந்தியாவுக்கு திரும்புவேன் என்று சொல்ல முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.
- ராகுல் காந்தி என்னை விட 30 வயது இளையவர்.
- அவருடன் பணிபுரியும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காதபோது, நான் எப்படி 'ராகுலியன்' ஆவேன் என்று எதிர்பார்க்க முடியும்?
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மணி சங்கர் அய்யர், மற்ற காங்கிரஸ் கட்சி தலைவர்களை கடுமையான விமர்சனம் செய்து வருகிறார். சமீபத்தில் வேணுகோபால் ரவுடி எனக் கூறியிருந்தார். சசி தரூர் பாகிஸ்தானுக்கு எதிரானவர். இவர் வெளியுறவுத்துறை மந்திரி பதவியை விரும்புகிறார். கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ராகுலியன் இல்லை என்று மணி சங்கர் அய்யர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மணி சங்கர் அய்யர் கூறியதாவது:-
நான் காந்தியன் (காந்தி கொள்கையை பின்பற்றுபவன்), நேருவியன். ராஜிவியன். ஆனால் ராகுலியன் அல்ல. ஏனென்றால் அவர் என்னைவிட மிகவும் இளமையானவர். எனது அரசியல் வாழ்க்கையில் என்னிடம் இருந்து மிகத் தொலைவில் இருக்கிறார்.
நான் இந்திராவியன் (இந்திராகாந்தி கொள்கைளை பின்பற்றுபவன்) என்று சொல்லமாட்டேன். ஏனென்றால் எமர்ஜென்சியை அறிவித்து ஜனநாயகத்தை கொடுங்கோன்மையாக இந்திராகாந்தி மாற்றிய நான் முற்றிலுமாக ஏற்கவில்லை.
ராகுல் காந்தி என்னை விட 30 வயது இளையவர். அவருடன் பணிபுரியும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காதபோது, நான் எப்படி 'ராகுலியன்' ஆவேன் என்று எதிர்பார்க்க முடியும்?
இவ்வாறு மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார்.
- இந்து சமூகம் எதிர்காலத்தில் மறைந்து போகக்கூடும்
- நமக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, ஆனால் விழிப்புணர்வு அவசியம்
இந்து சமூகத்தினர் குறைந்தது மூன்று குழந்தைகளையாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த சமூக நல்லிணக்க நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், திருமணத்தின் உண்மையான நோக்கம் சந்ததியை முன் எடுத்துச் செல்வதே தவிர, ஒருவரின் தனிப்பட்ட ஆசைகளை மட்டும் நிறைவேற்றிக் கொள்வதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
மூன்றுக்கும் குறைவாக குழந்தைகள் பெற்றுக்கொண்டால் இந்து சமூகம் எதிர்காலத்தில் மறைந்து போகக்கூடும் என தெரிவித்துள்ளார். இந்துக்களை ஒன்றிணைத்து அதிகாரம் அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்துக்களை ஒன்றிணைப்பதற்கும், அவர்களுக்கு அதிகாரமளிப்பதற்கும் ஒரு தேவை உள்ளது. நமக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, ஆனால் விழிப்புணர்வு அவசியம் எனப் பேசினார்.
மேலும் பெண்கள்தான் குடும்பத்தின் அஸ்திவாரம் எனவும் தெரிவித்துள்ளார். பெண்களை பலவீனமானவர்களாகக் கருதக்கூடாது என்றும், அவர்களுக்குத் தற்காப்புக் கலைகளில் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்திய பாரம்பரியம் பெண்களுக்கு ஒரு மரியாதைக்குரிய இடத்தையும், அவர்களின் வெளிப்புறத் தோற்றத்தை விட அவர்களின் வளர்க்கும் பண்புகளுக்கே அதிக மதிப்பையும் வழங்குகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
- உத்தவ் சிவசேனா கட்சியின் 'சாம்னா' நாளிதழ் தலையங்கம் எழுதியுள்ளது.
- முரண்பாடுகளை களைந்து, ஒற்றுமையாக ஒரு தலைவருக்குக் கீழ் பணியாற்ற வேண்டும்.
இந்தியா கூட்டணிக்கு மு.க.ஸ்டாலினை தலைவராக்க வேண்டும் -உத்தவ் சிவசேனா கட்சி வலியுறுத்தல்
இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கூறியிருந்த நிலையில், உத்தவ் சிவசேனா கட்சியும் இதே கருத்தை தெரிவித்துள்ளது.
இந்தியா கூட்டணிக்கு தேசிய அளவில் மு.க.ஸ்டாலின் அல்லது மம்தா பானர்ஜியை தலைவராக்க வேண்டும் என்று உத்தவ் சிவசேனா கட்சியின் 'சாம்னா' நாளிதழ் தலையங்கம் எழுதியுள்ளது.
அந்த தலையங்கத்தில், "இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்குள் வெவ்வேறு மாநிலங்களில் நிலவும் முரண்பாடுகளை களைந்து, ஒற்றுமையாக ஒரு தலைவருக்குக் கீழ் பணியாற்ற வேண்டும். அந்த தலைவர் ஸ்டாலினா, மம்தாவா அல்லது வேறு ஒருவரா என்பதை சீக்கிரம் முடிவு செய்வது அவசியம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






