என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • சமூகம் சார்ந்த படங்களை இயக்குவது மட்டுமல்லாமல், நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல நல்ல படங்களை தயாரித்தும் வருகிறார்.
    • தற்பொழுது சீயான் விக்ரம் நடித்து இருக்கும் `தங்கலான்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார், வரும் ஜூலை மாதம் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் முக்கியமானவர் பா. ரஞ்சித், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை ஓங்கி பேசுவதும், சமூதாயத்தில் அவர்கள் படும் பிரச்சனைகள் சார்ந்த கதைகளை திரைப்படமாக கொடுத்து வருகிறார். சமூகம் சார்ந்த படங்களை இயக்குவது மட்டுமல்லாமல், நீலம் ப்ரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல நல்ல படங்களை தயாரித்தும் வருகிறார்.

    அம்பேத்கர் மற்றும் புத்தரின் சிந்தனையையும், சித்தாந்தத்தையும் அதிகம் பேசுபவர் ரஞ்சித். நீலம் குழுமம் என்ற அமைப்பின் மூலம் நூலகம், சிறப்பு திரையிடல், மார்கழி மக்களிசை என பல மாற்றத்தை சமூகத்தில் உருவாக்கி வருகிறார்.

    தற்பொழுது சீயான் விக்ரம் நடித்து இருக்கும் `தங்கலான்' திரைப்படத்தை இயக்கியுள்ளார், வரும் ஜூலை மாதம் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கலான் திரைப்படத்திற்கு பிறகு அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் படம் இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

     

    ஆர்யா வில்லன் கதாப்பாத்திரத்திலும் அசோக் செல்வன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு 'வேட்டுவம்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. இப்படம் தற்பொழுது ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இதற்கு அடுத்து சார்பாட்டா பரம்பரை இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளார். வேட்டுவம் ஒரு மாடர்ன் டே கேங்ஸ்டர் கதைக்களமாக இருக்கும் என கூறப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • கோவிலின் அறங்காவலர் குழு சார்பில் இளையராஜாவுக்கு மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது.

    உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    இந்த நிலையில், இன்று வைகாசி மாத அமாவாசை தினத்தையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


    இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா இன்று அண்ணாமலையார் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து, கோவிலின் அறங்காவலர் குழு சார்பில் அவருக்கு மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்திருந்தார்.
    • வெற்றிமாறனின் தயாரிப்பிலும் கதையிலும் உருவாகியுள்ள கருடன் படம் கடந்த மே 31ஆம் தேதி வெளியானது.

    நடிகர் சூரி, விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

    அந்த படத்தில் இருந்து நடிகர் சூரி, பரோட்டா சூரி என்று அழைக்கப்பட்டார். அதன்பின் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து பெயர் பெற்றார். ஆனால் காமெடி கதாப்பாத்திரத்தில் மட்டும் நடித்துக் கொண்டு இருந்த சூரி கதாநாயகனாக ஆக நேரம் வந்தது.

    சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படம் சூரிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த நிலையில் அடுத்தடுத்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

    அந்த வகையில் விடுதலை 2, கொட்டுக்காளி போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சூரி, துரை செந்தில்குமார் இயக்கத்தில் கருடன் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் சூரியுடன் இணைந்து சசிகுமார் , சமுத்திரக்கனி, உன்னி முகுந்தன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

    வெற்றிமாறனின் தயாரிப்பிலும் கதையிலும் உருவாகியுள்ள இந்த படம் கடந்த மே 31ஆம் தேதி வெளியானது. வெளியான முதல் நாளிலிருந்தே பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. நகர்புறங்களை விட கிராம் புறத்தில் உள்ள ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். நாளுக்கு நாள் படத்தின் திரையரங்குகளில் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

    மேலும் இந்த படத்தில் நடிகர் சூரி முதன்முறையாக ஆக்சன் ஹீரோவாக களமிறங்கி பல்வேறு தரப்பினரடையே பாராட்டுகளை பெற்று வருகிறார்.

    இந்த படம் நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆதரவையும், அதிக வசூலையும் பெற்று வருகிறது. தற்போது கிடைத்த தகவலின் படி கருடன் திரைப்படமானது உலகம் முழுவதும் 26 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் தமிழ்நாட்டில் மட்டுமே கிட்டதட்ட 15 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் அப்டேட் கிடைத்துள்ளது. இனிவரும் நாட்களிலும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. விடுதலை படத்தின் வெற்றியை தொடர்ந்து கருடன் திரைப்படமும் வெற்றிப் பெற்றுள்ளது. இதனால் சூரி அடுத்து நடித்து வெளிவர இருக்கும் கொட்டுகாளி மற்றும் விடுதலை2 திரைப்படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஏஞ்சலினா ஜோலியும், பிராட் பிட்டும் 2016-ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
    • உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

    ஹாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் ஏஞ்சலினா ஜோலிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இவர் 2014-ல் பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆறு குழந்தைகள் உள்ளனர்.

    ஏஞ்சலினா ஜோலியும், பிராட் பிட்டும் கருத்து வேறுபாடு காரணமாக 2016-ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

    இந்த நிலையில் ஏஞ்சலினா ஜோலி, பிராட் பிட்டின் 18 வயது மகள் ஷிலோ நோவல் ஜோலி பிட் தற்போது அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

    அதில் தனது பெயருடன் இணைந்து இருக்கும் தந்தையின் பிட் பெயரை நீக்கி விட்டு ஷிலோ நோவல் ஜோலி என்று சட்டப்பூர்வமாக மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார். இதுபோல் ஷிலோ நோவலோடு உடன் பிறந்தவர்களும் பிட் பெயரை தங்கள் பெயருடன் இணைத்து பயன்படுத்துவதை தவிர்க்கிறார்கள்.

    பிராட் பிட் தன்னையும், தனது குழந்தைகளையும் அடித்து துன்புறுத்தினார் என்று ஏஞ்சலினா ஜோலி ஏற்கனவே குற்றம்சாட்டி இருந்தார். இதனை பிராட் பிட் மறுத்தார். தற்போது அவரது குழந்தைகள் பிட் பெயரை நீக்கியதன் மூலம் அவர் துன்புறுத்தியது உண்மையாக இருக்குமோ என்று பலரும் பேசி வருகிறார்கள்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • திரைக்கதை தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.
    • ஜெயிலர் 2-ம் பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டது.

    நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் வெளியாகி நல்ல வசூல் பார்த்தது. இதில் பிறமொழிகளில் இருந்து மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் ஆகியோரும் நடித்து இருந்தனர்.

    ஜெயிலர் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து ஜெயிலர் 2-ம் பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான திரைக்கதை தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.

    இன்னொரு புறம் ஜெயிலர் 2-ல் நடிக்கும் இதர நடிகர், நடிகை தேர்வும் நடக்கிறது. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்து அவரோடு பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் தயாராக இருக்கிறது.

    ரஜினிகாந்த் வேட்டையன் படத்தை முடித்து விட்டு கூலி படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த சில தினங்களில் நடக்க உள்ளது. இந்த படத்தை முடித்து விட்டு ஜெயிலர் 2-ம் பாகத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 29 தொகுதிகளில் வென்றுள்ளது.
    • அசன்சோல் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் சத்ருகன் சின்ஹா ​​வெற்றி பெற்றார்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் இந்தியா கூட்டணி 234 இடங்களும் பாஜக கூட்டணி 292 இடங்களில் வென்றுள்ளது.

    மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 29 தொகுதிகளிலும் பாஜக 12 இடங்களிலும் வென்றுள்ளது

    இந்நிலையில், நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அசன்சோல் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் சத்ருகன் சின்ஹா வெற்றி பெற்றார்.

    பாஜக வேட்பாளர் சுரேந்திரஜீத் சிங் அலுவாலியாவை எதிர்த்து போட்டியிட்ட சத்ருகன் சின்ஹா 59,564 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    சத்ருகன் சின்ஹாவின் மகளான பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி வைத்து அப்பாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    • சந்திரபாபு நாயுடு கடந்த 2019 ஆம் ஆண்டு, தனது எக்ஸ் பக்கத்தில் கருது ஒன்றை கூறியிருந்தார்
    • தற்போதைய அரசியல் சூழலில் இந்த ட்வீட் மீண்டும் வைரலாகி வருகிறது.

    இந்தியாவில் பாராளும்னற மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்க அதிகம் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஆர்.ஜே.டி கட்சித் தலைவரும் பீகாரின் முதல்வருமான நிதிஷ் குமாரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திராவின் அடுத்த முதலைவராக பதவியேற்க உள்ளவருமான சந்திரபாபு நாயுடு ஆகிய இருவரும் இந்த தேர்தலில் கிங் மேக்கர்களாக விளங்குகின்றனர்.

    நாடாளுமன்றத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் 16 சீட்களும், ஆர்.ஜே.டி 12 சீட்கள் வென்றுள்ளது. இந்த இரண்டு கட்சியும் இந்தியா கூட்டணி பக்கம் சாயும் பட்சத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

     

    ஆனால் இன்று நடந்த என்.டி.ஏ கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற சந்திர பாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் மோடி பிரதமராக முழு ஆதரவு வழங்கியுள்ளனர். இந்நிலையில், மாநில உரிமைகளுக்காக அதிகம் போராடியவரும், அதில் எந்த சமரசமும் செய்யாதவறாக பார்க்கப்பட சந்திரபாபு நாயுடு கடந்த 2019 ஆம் ஆண்டு, தனது எக்ஸ் பக்கத்தில், "இந்தியாவின் இறையாண்மை மிக்க அரசு கட்டமைப்பை மோடி திட்டமிட்டு அழித்து வருகிறார்.

    பாஜக ஆட்சியில், சுதந்திரமும் மற்றும் ஜனநாயகமும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. விசாரணை அமைப்பான சிபிஐ முதல் ரிசர்வ் வங்கி வரை, அரசியலமைப்பின் உயரிய கட்டமைப்பான தேர்தல் ஆணையத்தைக் கூட மோடி விட்டுவைக்கவில்லை" என்று தெரிவித்திருந்தார்.

    தற்போதைய அரசியல் சூழலில் இந்த ட்வீட் மீண்டும் வைரலாகி வருகிறது. நடிகர் பிரகாஷ்ராஜ்  சந்திரபாபு நாயுடுவின் டீவீட்டைப் பகிர்ந்து இந்த கருத்து முற்றிலும் உண்மை என்று நகைமுரணாக பதிவிட்டுள்ளார். 

    • இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் சென்று சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் அவசர பயணமாக தற்போது டெல்லி விரைந்துள்ளார்.
    • மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளத்தற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

    பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள உள்ள நிலையில் அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ளது. பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

    இன்று தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ள மோடி 3வது முறையாக மீண்டும் பிரதமராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் சென்று சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் அவசர பயணமாக தற்போது டெல்லி விரைந்துள்ளார்.

     

    அவரது டெல்லி பயணத்துக்குக் காரணம் இன்னும் தெரியவராத நிலையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி மாபெரும் வெற்றியை பெற்றதற்கு அதன் தலைவரும் தனது நண்பருமான தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

    மேலும் ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக உள்ள சந்திரபாபு நாயுடுவுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளதற்கும் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளத்தற்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பீர்களா என்ற கேள்விக்கு, அதைக் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று ரஜினி தெரிவித்துள்ளார். 

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • பீக்கி பிளைன்டர்ஸ் என்ற பெயரில் கடந்த 2022 முதல் 2022 வரை 6 சீசன்களாக வெளிவந்த வெப் சீரிஸ் மாபெரும் ஹிட்டானது.
    • பிபிசியுடன் நெட்ப்ளிஸ்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ள இந்த திரைப்படத்தில் சிலியன் மர்பி மீண்டும் ஆர்தர் செல்பி அவதாரம் எடுக்க உள்ளார்.

    இங்கிலாந்தில் 1919 முதலாம் உலகப்போர் உலகப் போர் முடிந்த சமயத்தில் பீக்கி பிளைன்டர்ஸ் என்ற  கிரைம் கேங் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு இங்கிலாந்து நிழலுலகில் ஆதிக்கம் செலுத்தியது. பிரிம்மிங்கம் நகரில் குடும்பமாக இயங்கிய இந்த கேங் இங்கிலாந்து முழுவதும் புகழ்பெற்று விளங்கியது. இவர்களின் கதையை மையமாக வைத்து பீக்கி பிளைன்டர்ஸ் என்ற பெயரில் கடந்த 2022 முதல் 2022 வரை 6 சீசன்களாக வெளிவந்த வெப் சீரிஸ் மாபெரும் ஹிட்டானது.

     

    பீக்கி பிளைன்டர்ஸின் தலைவராக விளங்கிய டாமி செல்பி கதாபாத்திரத்தில் பிரிட்டிஷ் நடிகர் சிலியின் மர்பி கதாபாத்திரத்தோடு ஒன்றும் வகையில் தத்ரூபமாக நடித்திருந்தார். பீக்கி பிளைன்டர்ஸ் வெப் சீரிஸ் உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளத்தியே உருவாக்கி வைத்திருக்கிறது. இந்நிலையில் பீக்கி பிளைண்டர்ஸ் திரைப்படப்பாக தயாராக உள்ளதகாக பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது. பிபிசியுடன் நெட்ப்ளிஸ்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ள இந்த திரைப்படத்தில் சிலியன் மர்பி மீண்டும் ஆர்தர் செல்பி அவதாரம் எடுக்க உள்ளார்.

     சீரிஸை இயக்கிய டாம் ஹார்ப்பரும், ஸ்டீவன் கிநைட்டும் இந்த திரைப்படத்தை இயக்க உள்ளனர். 6 சீசன்களாக உள்ள கதை ஒரே படத்தில் எப்படி கூறப்பட உள்ளது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .

     

    இதற்கிடையில் உலகப் புகழ் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஓப்பன்ஹைமர் திரைப்படத்தில் இரண்டாம் உலகப் போரில் ஜப்பானிய மக்கள் கொத்துக்கொத்தாக சாக காரணமான அணுகுண்டைக் கண்டுபித்த ஓப்பன்ஹைமரின் கதாபாத்திரத்தினுடைய அறச் சிக்கலை நேர்த்தியாக திரையில் வரித்துக்காட்டி சிலியன் மர்பி ஆஸ்கார் வென்றது குறிப்பிடத்தக்கது. 

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிக பொருட்செலவில் இப்படம் உருவாக்கி வருகிறது.
    • இத்திரைப்படம் வரும் 27 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

    நடிகர் பிரபாஸ், நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் 'கல்கி 2898 ஏ.டி.' படத்தில் நடிக்கிறார். தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், ராணா, துல்கர் சல்மான், திஷா பதானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

    அதிக பொருட்செலவில் அறிவியல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    அண்மையில் படக்குழு அமிதாப் பச்சன் இப்படத்தில் அசுவத்தாமன் கதாப்பாத்திரத்தில் நடிக்கப் போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டனர். படக்குழு டிஏஜிங் தொழில்நுட்ப உதவியுடன் அமிதாப் பச்சனை இளமை தோற்றத்தில் காட்சி படுத்தி இருந்தனர். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது. 

    இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வரும் 10 ஆம் தேதி வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. இத்திரைப்படம் வரும் 27 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இது தொடர்பாக போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது.
    • இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

    விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் 50-வது திரைப்படம் "மகாராஜா." குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி கவனம் ஈர்த்தது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது. இந்த நிலையில், மகாராஜா திரைப்படம் ஜூன் 14 ஆம் தேதி ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டு உள்ளது.


    மகாராஜா திரைப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • சோபிதா துலி பாலாவுடன் அடிக்கடி டேட்டிங் செல்வதாக தகவல்கள் பரவின.
    • புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நாக சைதன்யா. இவர் நடிகர் நாகார்ஜுனாவின் மகன் ஆவார்.

    நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யா அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

    இதைத்தொடர்ந்து சமந்தா மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

    நாக சைதன்யாவும் மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். புதிய படம் ஒன்றில் மீனவர் கதாபாத்திரத்தில் நடித்துவரும் நாக சைதன்யா பிரபல நடிகை சோபிதா துலி பாலாவுடன் அடிக்கடி டேட்டிங் செல்வதாக தகவல்கள் பரவின.

    இந்த தகவலை இருவரும் ஏற்கவோ மறுக்கவோ இதுவரை இல்லை. இந்நிலையில் இருவரும் ஐரோப்பாவில் விடுமுறையை கொண்டாட சென்றுள்ளனர். அங்கு நாக சைதன்யாவும் சோபிதா துலி பாலாவும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×