என் மலர்
சினிமா செய்திகள்
- வரலட்சுமி, மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவ்-ஐ விரைவில் திருமணம் செய்யவுள்ளனர்.
- இருவரும் மோதிரம் மாற்றக்கொண்டு திருமணம் நிச்சயம் செய்துக்கொண்டனர்.
நடிகை வரலட்சுமிக்கும் மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவுக்கும் மும்பையில் பெற்றோர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவரும் மோதிரம் மாற்றக்கொண்டு திருமணம் நிச்சயம் செய்துக்கொண்டனர்.
நடிகை வரலட்சுமி, மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவ்-ஐ விரைவில் திருமணம் செய்யவுள்ளனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வரலட்சுமியின் திருமண அழைப்பிதழை சரத்குமார் வழங்கியுள்ளார். அப்போது ராதிகா சரத்குமார், வரலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.
- சூது கவ்வும் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் அடுத்த பாகம் உருவாகிறது.
- இப்படத்திற்கு 'சூது கவ்வும் 2 - நாடும் நாட்டு மக்களுக்கும்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான 'சூது கவ்வும்' திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூது கவ்வும் படத்தின் அடுத்த பாகம் உருவாகிறது. 'சூது கவ்வும் 2 - நாடும் நாட்டு மக்களுக்கும்' என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை இயக்குநர் எம்.எஸ். அர்ஜூன் இயக்குகிறார். படத்தில் விஜய் சேதுபதிக்கு மாற்றாக நடிகர் மிர்ச்சி சிவா நாயகனாக நடிக்கிறார்.
ராதாரவி, எம்எஸ் பாஸ்கர், கருணாகரன், கராத்தே கார்த்தி, ரமேஷ் திலக், அருள்தாஸ், ஹரிஷா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தியாகராஜன் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சி.வி. குமார் இணைந்து தயாரிக்கின்றனர்.
இப்படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைத்துள்ளார். அண்மையில் சூது கவ்வும் 2 படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
ஏற்கனவே இப்படத்தின் 'மண்டைக்கு சூறு ஏறுதே' என்ற பாடலும் 'பேட் பாய்ஸ் மிஷன்' என்ற பாடலும் வெளியாகி வரவேற்பை பெற்றிந்த நிலையில், தற்போது 'என்ன நடக்கும்' என்ற பாடல் வெளியாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் 'எஸ்கே23' படத்தில் நடித்து வருகிறார்.
- சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்து வருகிறார்.
அயலான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுதடுத்த படங்களில் நடித்து வருகிறார். கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
அதைத்தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 'எஸ்கே23' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கன்னட நடிகையான ருக்மணி வசந்த் நாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பிஜு மேனன் துப்பாக்கி படத்தின் வில்லனான வித்யுத் ஜம்வல் நடித்து வருகின்றனர்.
இப்படத்தை ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். 150 கோடி ரூபாய் பொருட் செலவில் இப்படம் உருவாகிக் கொண்டு இருக்கிறது. படம் இந்தாண்டு இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, ஏ.ஆர். முருகதாஸ் சல்மான் கானை வைத்து 'சிகந்தர்' என்ற பாலிவுட் படத்தை இயக்க உள்ளார். அதன் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்கவுள்ளது.
இந்நிலையில் 'எஸ்கே23' படத்தில் சல்மான் கான் கேமியோ ரோலில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்த பிறகு கொண்டாடும் முதல் பிறந்த நாள்.
- நடிகர் விஜய் நடித்து வரும் 'தி கோட்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.
நடிகர் விஜய்யின் 50-வது பிறந்தநாள் ஜூன் மாதம் 22-ந்தேதி கொண்டாடப்பட இருக்கிறது. நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்த பிறகு கொண்டாடும் முதல் பிறந்த நாள் என்பதால் இதை மிக மிக கோலாகலமாக நடத்த அவரது ரசிகர்கள், கட்சி நிர்வாகிகள் விரும்புகிறார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை செய்ய அவரது ரசிகர்கள் தொடங்கி விட்டனர். பிறந்த நாள் முன்னிட்டு கடந்த வாரத்தில் விஜய் பெயரில் ஹேஷ்டேக் ஒன்று உருவாக்கப்பட்டு சமூக வலைதள பக்கங்களில் டிரெண்டானது.
இதற்கிடையே, நடிகர் விஜய் நடித்து வரும் 'தி கோட்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. அந்த படம் செப்டம்பர் 5-ந்தேதி வெளியாக இருக்கிறது.
தொடர்ந்து, நடிகர் விஜய் நடத்தும் அரசியல் மாநாடு பிரமாண்டமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனது 50வது பிறந்த ஆண்டில், சினிமா பிரவேசத்தில் இருந்து விலகி முழுமையாக அரசியலில் களமிறங்க இருக்கும் விஜய்க்கு ரசிகர்கள் மற்றும் மக்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் நடித்து வெளியான சூப்பர் ஹிட் திரைப்படங்கள் வரும் 21ம் தேதி அன்று ரீ ரிலீஸ் ஆகவுள்ளது.
அதன்படி, 21ம் தேதி அன்று பகவதி, போக்கிரி, துப்பாக்கி, மாஸ்டர், அழகிய தமிழ்மகன் ஆகிய 5 படங்கள் திரையரங்கில் வெளியாக உள்ளது.
இதில், மாஸ்டர் திரைப்படம் உலகளவில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இசைக் கலைஞரும், முன்னணி பாடகியும், நட்சத்திர நடிகையுமான ஸ்ருதிஹாசன் அண்மையில் 'இந்தியன் 2' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்.
- ஸ்ருதிஹாசன் தனது தந்தையின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பாடல்களை, தொகுத்து அதை தன் இசை மற்றும் நடனத்தால் மெருகேற்றி பார்வையாளர்களை கவர்ந்தார்.
இசைக் கலைஞரும், முன்னணி பாடகியும், நட்சத்திர நடிகையுமான ஸ்ருதிஹாசன் அண்மையில் 'இந்தியன் 2' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு, அவருடைய தந்தை கமல்ஹாசனை கொண்டாடும் விதமாக அவரது ஹிட்டான பாடல்களை தொகுத்து ஒரு இசை நடன நிகழ்வை அரங்கேற்றினார்.
ஸ்ருதிஹாசன் தனது தந்தையின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பாடல்களை, தொகுத்து அதை தன் இசை மற்றும் நடனத்தால் மெருகேற்றி பார்வையாளர்களை கவர்ந்தார். அவரது குழுவுடன் அவர் இணைந்து பாடி நடனமாடியது.. இசை வெளியீட்டு விழாவை மேலும் மிளிரச் செய்தது. இந்த தருணத்தை தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக, காணொளி ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
அந்த காணொளியில் ஸ்ருதிஹாசன் தன் தந்தை கமல்ஹாசனின் பாதங்களை தொட்டு வணங்கி அவரது ஆசீர்வாதத்தை பெறுகிறார். அதே தருணத்தில் கமல்ஹாசன், ஸ்ருதிஹாசனை ஆரத்தழுவி அவரது அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்துகிறார். மேலும் இது தொடர்பாக சில அரிய புகைப்படங்களையும் ஸ்ருதிஹாசன் பகிர்ந்துள்ளார்.
இந்நிகழ்வு குறித்து ஸ்ருதிஹாசன் கூறுகையில்.., '' என் தந்தையின் திரை வாழ்வை கௌரவப்படுத்துவது எனக்கு கிடைத்த கௌரவம். அதுவும் இசையால் அதை நிகழத்துவது எனக்குப் பெருமை. அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற வெற்றிப்பாடல்களில் சிலவற்றை திறம்பட ஒன்றிணைத்து, தொகுத்து, ஒரு அற்புதமான மெலடியாக தயாரித்து வழங்கியதற்கு பெரு உதவியாக இருந்த எனது குழுவினருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை ரசிகர்கள் முன் இந்நிகழ்வை அரங்கேற்றியது இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் மேடையில் பாடி நடனம் ஆடும் போது என் தந்தையின் வசீகர சிரிப்பை கண்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன். அவரது அன்பும், ஆதரவும், தான் என்னை இசையமைப்பாளராக வளர்த்தது. மேலும் பல இசை நிகழ்வுகளை எனது குழுவுடன் இணைந்து அரங்கேற்றுவேன்'' என்றார்.
இந்நிகழ்வில் மேடையில் ஸ்ருதிஹாசனுடன் இசையமைப்பாளரும், பாடகருமான அனிருத் ரவிச்சந்தர், இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் மற்றும் மகள் அதிதி ஆகியோரும் இசை மற்றும் நடன நிகழ்வுகளை அரங்கேற்றினர்.
'இந்தியன் 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் எதிர்வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. மேலும் இந்தியன் படத்தின் மூன்றாம் பாகம் இந்த ஆண்டில் இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ருதிஹாசன் தெலுங்கு நடிகர் ஆத்வி ஷேஷ் நடிக்கும் தெலுங்கு திரைப்படமான டகோயிட் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் பல அற்புதமான திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், நடன இயக்குனர் என பன்முகத் திறமைகளை கொண்டவர்.
- ராகவா லாரன்ஸ், முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 போன்ற காமெடி கலந்த ஹாரர் படங்களை இயக்கி, நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். அதே சமயம் இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், நடன இயக்குனர் என பன்முகத் திறமைகளை கொண்டவர்.
நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடந்த ஆண்டு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதைத்தொடர்ந்து ராகவா லாரன்ஸ் பென்ஸ், ஹண்டர் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அதேசமயம் இவர் ரஜினியின் கூலி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகி வரும் படை தலைவன் படத்தில் கேமியா ரோலில் நடித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.
ராகவா லாரன்ஸ், முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 போன்ற காமெடி கலந்த ஹாரர் படங்களை இயக்கி, நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். கடந்த மாதம் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.
ஹாரர் கதைக்கள பாணி பெருமளவு வெற்றிப் பெற்ற காரணத்தினால் அடுத்ததாக காஞ்சனா 4 திரைப்படத்தை இயக்க ராகவா லாரன்ஸ் திட்டமிட்டுள்ளார். அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 செப்டம்பர் மாதத்தில் தொடங்க இருப்பதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது.
இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் கூடுதல் தகவல்களைப் பற்றி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்த படத்திற்கு லால்குடி எம்.ஹரிஹரன் இசையமைக்கிறார்.
- இந்த படத்திற்கு கோவிந்த் நல்லதம்பி படத்தொகுப்பு செய்கிறார்.
விதார்த் மற்றும் ஜனனி இணைந்து நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் பல வெற்றி பெற்ற படங்களுக்கு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை செய்து வந்த குவியம் ஸ்டுடியோஸ் நிறுவனம், தற்போது குவியம் பிலிம்ஸ் என்ற பெயரில் பட தயாரிப்பில் இறங்கியுள்ளது.
அந்த வகையில் குவியம் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் லால்குடி எம்.ஹரிஹரன் தயாரிக்கும் முதல் படத்தில் விதார்த் மற்றும் ஜனனி நடிக்கின்றனர். இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், சரவணன், பப்லு பிரித்விராஜ், நமீதா கிருஷ்ணமூர்த்தி, ஷாரிக் ஹாசன், விகாஸ், மகா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

கார்த்திக் நேத்தா பாடல் வரிகள் எழுத லால்குடி எம்.ஹரிஹரன் இசையமைக்கிறார். கோவிந்த் நல்லதம்பி படத்தொகுப்பு செய்யும் இப்படத்திற்கு பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை எழுதி கிருஷ்ணா குமார் இயக்குகிறார்.
இப்படம் குறித்து கிருஷ்ணா குமார் கூறும்போது, நாம் செய்த தவறு எந்த காலத்திலும் நம்மை விடாது. எதாவது ஒரு வழியில் நம்மை வந்து சேரும் என்ற கதையை, ஹைபர் லிங்க் நான் லீனியர் பாணியில் திரைக்கதை அமைத்து இருக்கிறேன். இதுவரை யாரும் சொல்லாத வகையில் வித்தியாசமாக ஒன்றை முயற்சி செய்ய இருக்கிறோம்.
சஸ்பென்ஸ் திரில்லர், டிராமா, காதல் ஆகிய மூன்று கதைகளாக திரைக்கதை நகர்ந்து ஒரே புள்ளியில் கதை முடியும். ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்கி 35 நாட்கள் தொடர்ந்து நடத்த இருக்கிறோம் என்றார்.
இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் போடப்பட்டது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். விரைவில் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட இருக்கிறார்கள்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
- இந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் இந்தியன் 2. அடுத்த மாதம் ரிலீசாக இருக்கும் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், இந்தியன் 2 படத்தில் இடம்பெற்றுள்ள "கதரல்ஸ்" என்ற பாடலின் லிரிக் வீடியோ நாளை வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது. இது இந்தியன் 2 படத்தில் இடம்பெற்றுள்ள குத்து பாடல் ஆகும். இசை வெளியீட்டின் போதே இந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
Brace yourselves for the high-energy kuthu song! ?? The #KADHARALZ lyric video from INDIAN-2 ?? is dropping tomorrow. ? Get ready to make some noise! ?Rockstar @anirudhofficial musical ?Lyrics #Rokesh ✍?Vocals @anirudhofficial ?️ #Indian2 ?? Ulaganayagan @ikamalhaasan… pic.twitter.com/dXfpZFpd5n
— Lyca Productions (@LycaProductions) June 6, 2024
அந்த வகையில், இந்த பாடலின் லிரிக் வீடியோ வெளியிடப்படுவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியன் 2 படம் அடுத்த மாதம் 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் சித்தார்த் இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.
- . இந்நிலையில் சித்தார்த்தின் அடுத்த திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் சித்தார்த் இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார். பின்னர் மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'ஆயுத எழுத்து' திரைப்படத்தின் மூலம் பாய் நெக்ஸ்ட் டோர் கதாப்பாத்திரமாக மக்கள் மனதை கவர்ந்தார். அதைத்தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்தார்.
சில வருடங்களாக அவர் நடிக்கும் படங்கள் நினைத்தது போல் மக்களிடம் வரவேற்பு இல்லை, சமீபத்தில் அவர் நடிப்பில் எஸ்.யு அருண்குமார் இயக்கத்தில் வெளியான சித்தா திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. நடிகர் சித்தார்த்துக்கு மிகப்பெரிய கம்பேக்காக இருந்தது.
சமீபத்தில் அவர் நடிகை அதிதி ராவுடன் நிச்சயம் செய்தார். இந்நிலையில் சித்தார்த்தின் அடுத்த திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
தற்பொழுது மிஸ் யூ என்ற காதல் கதைக்களத்தை மையமாக கொண்டு இருக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை 7 மைல்ஸ் பெர் செகண்ட் ப்ரொடக்ஷன் தயாரிக்க ராஜ்சேகர் இயக்குகிறார். ராஜசேகர் இதற்கு முன் ஜீவா நடிப்பில் வெளியான களத்தில் சந்திப்போம் திரைப்படத்தை இயக்கியவர். இப்படத்தில் ஆஷிகா ரங்கனாத் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் மாதவன் மற்றும் சிவகார்த்திகேயன் அவரது எக்ஸ் பக்கத்தில் இன்று வெளியிட்டனர். படத்தை குறித்து அடுத்தகட்ட அப்டேட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
- இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கியவர் மோகன். இடையில், பல ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர், சமீபத்தில் மீண்டும் நடிக்க துவங்கினார். இவர் நடிப்பில் உருவான ஹரா என்ற திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது.
இதோடு விஜய் நடிப்பில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) படத்திலும் நடிகர் மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் கோட் படம் குறித்து பேசிய மோகன், "இந்த படம் சிறப்பாக இருக்கும். விஜய் ரசிகர்களுக்கு இந்த படம் விருந்தாக அமையும். நான் இந்த படத்தில் தாடியுடன் நடித்திருக்கிறேன்."
"வெங்கட் பிரபு தனது படங்களில் நடிக்க என்னை பலமுறை அழைத்திருக்கிறார். ஆனாலும், என்னால் அவற்றில் நடிக்க முடியவில்லை. விஜய் மிகவும் எளிமையான நபராக இருக்கிறார். இந்த குழுவுடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது," என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அடுத்ததாக நடிகர் கார்த்தி 96 படம் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் `மெய்யழகன்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது.
நடிகர் கார்த்தி கடைசியாக தனது 25 வது படமான ஜப்பான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை. அடுத்ததாக நடிகர் கார்த்தி 96 படம் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் `மெய்யழகன்' எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக மெய்யழகன் படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் நடிகர் கார்த்தி, சூது கவ்வும், காதலும் கடந்து போகும் உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான நலன் குமாரசாமி இயக்கத்தில் 'வா வாத்தியார்' எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார்.
அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகளும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் கார்த்தியுடன் இணைந்து க்ரித்தி ஷெட்டி, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. மேலும் நடிகர்கள் கார்த்தி இந்த படத்தில் எம்ஜிஆரின் தீவிர ரசிகராக நடித்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் நலன் குமாரசாமி படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது, "90 காலகட்டங்களில் வெளிவந்த அனைத்து மசாலா படங்களுக்கும் இந்த படம் சமர்ப்பணமாக இருக்கும். மேலும் படத்தில் சண்டை காட்சிகளும் பாடல்களும் இருக்கின்றன. கார்த்தி மற்றும் அவருக்கு தாத்தாவாக நடித்திருக்கும் ராஜ்கிரண் ஆகியோர் எம்ஜிஆர் ரசிகர்களாக நடித்துள்ளனர்" என்று அப்டேட் கொடுத்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "நான் எட்டு வருடங்களாக திரைப்படம் எதுவும் இயக்காமல் இருந்தாலும் என்னுடைய படத்திற்காக பல ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடந்த 2016-ம் ஆண்டு வெளியான 'கிஸ்மத்' படம் மூலம் மலையாள சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷேன் நிகாம்.
- எஸ்.ஆர் புரொடக்சன்ஸ் சார்பில் ஜெகதீஷ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு வெளியான 'கிஸ்மத்' படம் மூலம் மலையாள சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷேன் நிகாம். தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான 'இஷ்க்', 'கும்பளங்கி நைட்ஸ்', 'ஆர்டிஎக்ஸ்' உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இதன் மூலம் மலையாள சினிமாவில் அடுத்து வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவராக திகழ்கிறார் ஷேன் நிகாம்.
இந்த நிலையில் ஷேன் நிகாம் தற்போது 'மெட்ராஸ்காரன்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக களம் இறங்கவுள்ளார். இயக்குனர் வாலி மோகன் தாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் கலையரசன், நிஹாரிகா கொனிடேலா, ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
எஸ்.ஆர் புரொடக்சன்ஸ் சார்பில் ஜெகதீஷ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர் வசந்தகுமார் படத்தொகுப்பு செய்கிறார். படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததையொட்டி படக்குழுவினர் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
அதில் பல அதிரடியான ஆக்ஷன் காட்சிகள், எமோஷனல், காதல் காட்சிகளின் உருவாக்கும் வீடியோ இடம்பெற்றுள்ளது. இத்திரைப்படம் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முடித்து விரைவில் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






