என் மலர்
சினிமா செய்திகள்
- சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் அடுத்ததாக அருண் விஜயின் படத்தை இயக்குகிறார்.
- இப்படத்தில் அருண் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார். தடம் படத்திற்கு பிறகு இரு வேடங்களில் நடித்திருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனவரி மாதம் விஜய் ஏ.எல் இயக்கத்தில் அருண் விஜய் , எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் இணைந்து நடித்து மிஷன் சாப்டர் 1 திரைப்படம் வெளியாகியது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் வனங்கான், பார்டர், AV 36 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் அடுத்ததாக அருண் விஜயின் படத்தை இயக்குகிறார். இப்படத்தின் நாயகியாக சித்தி இத்னானி நடிக்கவுள்ளார். இவர் இதற்கு முன் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.
இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். படத்தின் இசையை சாம். சி.எஸ் மேற்கொள்கிறார். அன்பறிவு ஸ்டண்ட் காட்சிகளை கையாளுகின்றனர். பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.
படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டரை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் கடந்த மாதம் வெளியிட்டார்.
இப்படத்திற்கு 'ரெட்ட தல' என்ற தலைப்பை வைத்துள்ளனர் அதைத்தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படக்குழுவினர் வெளியிட்டனர். இப்படத்தில் அருண் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார். தடம் படத்திற்கு பிறகு இரு வேடங்களில் நடித்திருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் படத்தின் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்தை போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர் அதில் அருண் விஜய் கூலர்ஸ் அணிந்து கார் ஓட்டியபடி அமர்ந்து இருக்கும் காட்சி அமைந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் இந்தியன் 2. அடுத்த மாதம் 17 ஆம் தேதி ரிலீசாக உள்ளது.
- "கதறல்ஸ்" என்ற பாடலின் லிரிக் வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் இந்தியன் 2. அடுத்த மாதம் 17 ஆம் தேதி ரிலீசாக இருக்கும் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், இந்தியன் 2 படத்தில் இடம்பெற்றுள்ள "கதரல்ஸ்" என்ற பாடலின் லிரிக் வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது. இது இந்தியன் 2 படத்தில் இடம்பெற்றுள்ள குத்து பாடல் ஆகும். இசை வெளியீட்டின் போதே இந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்தியன் 2 படத்தின் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
கதறல் லிரிக்கல் வீடியோவில் சித்தார்த்தும் பிரியா பவானி சங்கர் மிகவும் எனர்ஜெட்டிக்காக குத்து நடனம் ஆடியுள்ளனர். இப்பாடலின் வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் போடா போடி, சர்கார், சண்டக்கோழி 2, தாரை தப்பட்டை போன்ற பல படங்களில் கதாநாயகியாகவும், வில்லியாகவும் நடித்து அவரது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மக்கள் கவனத்தை பெற்றார்.
- தனுஷின் ராயன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் போடா போடி, சர்கார், சண்டக்கோழி 2, தாரை தப்பட்டை போன்ற பல படங்களில் கதாநாயகியாகவும், வில்லியாகவும் நடித்து அவரது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மக்கள் கவனத்தை பெற்றார். தற்போது இவர் குணசத்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். கடைசியாக ஹனுமான் திரைப்படத்தில் நடித்திருந்த வரலட்சுமி.
அதைத்தொடர்ந்து தனுஷின் ராயன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதே சமயம் வரலட்சுமி சரத்குமாருக்கும் மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இரு வீட்டாரின் சம்மதத்துடன் எளிய முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
விரைவில் இவர்களின் திருமணமும் நடைபெற இருக்கிறது. இதற்காக நடிகர் சரத்குமார், ராதிகா சரத்குமார், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் திரை பிரபலங்கள் பலருக்கும் திருமண அழைப்பிதழை வழங்கி வருகின்றனர். அதன்படி சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினர். அதைத்தொடர்ந்து தற்போது உலகநாயகன் கமல்ஹாசனையும் நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஸ்டார் திரைப்படம் கடந்த மே 10 அன்று வெளியானது.
- இதில் கவின் உடன் இணைந்து லால், கீதா கைலாசம், ப்ரீத்தி முகுந்தன், அதிதி பொஹங்கர் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
நடிகர் கவின் சின்னத்திரையில் தனது திரை பயணத்தை தொடங்கி தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்தார். சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் கதாப்பாத்திரத்தில் நடித்து அவருக்கென நடிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார். அதன் பின்னர் தனது கடின உழைப்பினால் ஹீரோவாக உருவெடுத்து `நட்புனா என்னன்னு தெரியுமா' படத்தில் நடித்து கதாநாயகனாக அறிமுகமாகினார்.
அதைத்தொடர்ந்து லிப்ட், டாடா போன்ற வெற்றி படங்களை கொடுத்தார். அடுத்ததாக ஸ்டார் திரைப்படம் கடந்த மே 10 அன்று வெளியானது. இந்த படத்தை பியார் பிரேமா காதல் பட இயக்குனர் இளன் இயக்கியிருந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்திருந்தார். ரைஸ் ஈஸ்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது.
இதில் கவின் உடன் இணைந்து லால், கீதா கைலாசம், ப்ரீத்தி முகுந்தன், அதிதி பொஹங்கர் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்தின் டிரைலர் மிகப்பெரிய கவத்தை பெற்ற நிலையில் படத்தின் மீது மக்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது.
ஸ்டார் திரைப்படம் வெளியானதில் இருந்து மக்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றது.ஆனாலும் வசூல் ரீதியாக திரைப்படம் வெற்றியைக் கண்டது. படத்தின் டிஜிட்டல் உரிமையை ஓடிடி தளமான அமேசான் பிரைம் வாங்கியுள்ளது. இன்று அமேசான் பிரைமில் ஸ்டார் திரைப்படம் வெளியாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் 50-வது திரைப்படம் "மகாராஜா." குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார்
- மகாராஜா திரைப்படம் ஜூன் 14 ஆம் தேதி ரிலீசாகும் என்று படக்குழு சில நாட்களுக்கு முன் அறிவித்தது.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் 50-வது திரைப்படம் "மகாராஜா." குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி கவனம் ஈர்த்தது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது. இந்த நிலையில், மகாராஜா திரைப்படம் ஜூன் 14 ஆம் தேதி ரிலீசாகும் என்று படக்குழு சில நாட்களுக்கு முன் அறிவித்தது.
படத்தின் ப்ரொமோஷன் பணிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி துபாயில் உள்ள மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபாவில் மகாராஜா படத்தின் போஸ்டர் திரையிடப்பட்டு ஜொலித்தது. இதைக்காண படக்குழுவினர் நேற்று துபாய் சென்றனர்.
புர்ஜ் கலீஃபாவுடன் விஜய் சேதுபதி எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. சமீபத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்று வந்த நிலையில் , இத்திரைப்படம் விஜய் சேதுபதிக்கு நிச்சயம் வெற்றிப்படமாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமாவில் நடிப்பதற்கு முன் விஜய் சேதுபதி துபாயில் அக்கவுண்டண்ட் வேலை செய்தார், ஆனால் தற்பொழுது அவரது வளர்ச்சியால் துபாயின் சொத்தான புர்ஜ் கலீஃபாவில் அவரது முகம் கொண்ட போஸ்டர் திரையிடப்பட்டுள்ளது. ரசிகர்களிடையே சேதுபதியின் வளர்ச்சி பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடந்த மாதம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர் படக்குழுவினர். அஜித் இப்படத்தில் மூன்று வேடத்தில் நடிக்கவுள்ளார்.
- படப்பிடிப்பு கடந்த மே 10 அன்று ஐதராபாத்தில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று நேற்று முடிவடைந்த நிலையில் . இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜப்பானில் நடைபெற இருக்கிறது.
மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் சமீபத்தில் அஜித் குமார் கமிட்டானார்.
விடாமுயற்சி படத்தைத் தாண்டி குட் பேட் அக்லி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரலானது. இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் யார் யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் ரசிகர்களிடையே தொன்றியுள்ளது.
கடந்த மாதம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர் படக்குழுவினர். அஜித் இப்படத்தில் மூன்று வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர் என்று சமீப காலமாக செய்திகள் பரவி வருகிறது. இந்த படமானது 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மே 10 அன்று ஐதராபாத்தில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று நேற்று முடிவடைந்த நிலையில் . இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜப்பானில் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் படத்தின் அடுத்த அப்டேட் கிடைத்துள்ளது. படத்தில் மலையாள நடிகர் பிரேமலு புகழ் நஸ்லேன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுக்குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெலியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கலைஞர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு எனக்கு ஆசை.
- படமாக எடுப்பதை விட வெப் தொடராக எடுத்தால் சரியாக இருக்கும்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜீவா. ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கை வரலாறு படத்தில் ஜெகன் மோகன் ரெட்டியாக நடித்திருக்கிறார்.
இந்நிலையில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் கலைஞர் நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சி நடந்து வருகிறது. கண்காட்சியை நடிகர் ஜீவா பார்வையிட்டார். தொடர்ந்து நடிகர் ஜீவா அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கலைஞரை பற்றி சினிமாவில் நிறைய கேள்வி பட்டிருக்கிறேன். கண்காட்சியை பார்க்கும் போது சினிமாவை தாண்டி முதல்-அமைச்சராக அவர் செய்துள்ளதை கண்டு வியந்து போனேன்.
கலைஞர் வரலாறு படமாக்கப்பட்டால் கலைஞர் கதாபாத்திரத்தில் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஜீவா, "நிச்சயமாக அந்த படத்தில் நடிப்பது எனக்கு பெருமை. கலைஞர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு எனக்கு ஆசை. கலைஞர் வரலாற்றை படமாக எடுப்பதை விட வெப் தொடராக எடுத்தால் சரியாக இருக்கும். அதை பா.விஜய் இயக்குவார் என நினைக்கிறேன்" என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சசிகுமாரின் அடுத்த படத்துக்கான தோற்றமா?
- வலைதளத்தில் ரசிகர்கள் பலர் கேள்வி.
தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர்களான பாலா, அமீர் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சசிகுமார். தொடர்ந்து சுப்பிரமணியபுரம் படத்தை இயக்கியதுடன் படத்தின் கதாநாயகனாக நடித்தார். படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
நாடோடிகள், ஈசன், சுந்தரபாண்டியன், கொடி வீரன் உள்பட பல பலபடங்களில் நடித்துள்ளார். பெரும்பாலான படங்களில் கிராமத்து தோற்றத்தில்தான் சசிகுமார் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான கருடன் படத்திலும் கிராமத்து கோவில் சொத்தை பாதுகாக்க போராடும் காட்சிகளில் அவரது கதாபாத்திரம் பேசப்படும் வகையில் அமைந்தது.

இந்நிலையில் சசிகுமார் திடீரென முற்றிலும் புதிய தோற்றத்தில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு சமூக வலைதளத்தில் அவர் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சசிகுமாரின் அடுத்த படத்துக்கான தோற்றமா? என வலைதளத்தில் ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்புகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இது இஸ்லாமிய சமூக மக்களை தவறாக சித்தரிக்கும் பிரச்சாரப் படமாக உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது
- இந்த படத்தின்மீது மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து நிலையில் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.
ஹிந்தியில் அணு கபூர், மனோஜ் ஜோஷி, அஸ்வினி காலேக்கர் ஆகியோர் நடிப்பில் கமல் சந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஹமாரே பாராஹ் (Hamare Baarah). ஆரம்பம் முதலே கடும் சர்ச்சைகளுக்கு உள்ளான இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
தனது தாயின் கர்ப்பத்தைக் கலைக்க அனுமதி வழங்குமாறு தந்தையை எதிர்த்து நீதிமன்றத்தில் மகள் வழக்கு தொடுகிறாள். இதை அடியொற்றி நகரும் கதை சர்ச்சையாவதற்கு முக்கிய காரணம், இது இஸ்லாமிய சமூக மக்களை தவறாக சித்தரிக்கும் பிரச்சாரப் படமாக உள்ளது என்ற குற்றச்சாட்டே ஆகும்.

மேலதிக பிரச்சார தொனியில் படத்தின் கதை நகர்வது மக்களிடையே விரோதத்தை உருவாக்கி சமூக மோதல்களை ஏற்படுத்தும் என்று ஒரு தரப்பினர் அச்சம் தெரிவித்துவருகின்றனர். இந்த படத்தின்மீது மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து நிலையில் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. சமீபத்தில் வெளியான இந்த வழக்கின் தீர்ப்பில் படத்தை வெளியிட எந்த தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கர்நாடகாவில் இந்த படத்தை வெளியிட மாநில அரசு தடை விதித்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநிலத்தின் பல்வேறு தரப்பில் இருந்தும் வந்த கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டும் படத்தின் டிரைலர் சொல்லப் புகும் கருத்தை ஆராய்ந்தும், இந்த படம் சமூகங்களுக்கிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் என்பதால் கர்நாடாக சினிமா ஒழுங்குமுறை சட்டம் 1964இன் படி 'ஹமாரே பாராஹ்' படத்தை திரையிட முதற்கட்டமாக 2 வாரங்களுக்கு தடைவிதிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 'காஸ்மீர் பைல்ஸ்', 'கேரளா ஸ்டோரி', 'பஸ்தர்-நக்சல் ஸ்டோரி' உள்ளிட்ட படங்களும் வரலாற்றைத் திரிக்கும் பிரச்சாரப் படங்கள் என்ற விமர்சனத்துக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
- ஐதராபாத்தில் நடிகர் அஜித் குமார் சிரஞ்சீவியை சந்தித்தார்.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகையாக விளங்கியவர் ஷாலினி. நடிகர் அஜித் குமாரை திருமணம் செய்து கொண்ட ஷாலினி, அதன் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இவருக்கு பேபி ஷாம்லி என்ற தங்கையும், ரிச்சர்ட் ரிஷி என்ற சகோததரரும் உண்டு.
இந்த நிலையில், ஷாலினி அஜித்குமார் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி தனது சகோதரி மற்றும் சகோதரருடன் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. சிரஞ்சீவி தற்போது விஷ்வம்பரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வசிஷ்டா இயக்குகிறார்.

முன்னதாக விஷ்வம்பரா படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற நடிகர் அஜித் குமார் நடிகர் சிரஞ்சீவியை சந்தித்தார். மேலும், படக்குழுவுக்கு தனது வாழ்த்தையும் தெரிவித்தார். இது தொடர்பான படங்கள் வெளியாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இரண்டு கதாநாயகிகள் நடித்தால் ஒருவரோடு ஒருவரை ஒப்பிட்டு பேசுவது வழக்கம்.
- என்னை பொறுத்தவரை நடிகைகளுக்குள் போட்டி இருப்பதை வரவேற்கிறேன்.
ரஜினிகாந்துடன் தமன்னா நடித்த ஜெயிலர் படம் கடந்த வருடம் வெளியானது. இதில் அவர் கவர்ச்சியாக ஆடிய காவாலா பாடல் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
கடந்த மே மாதம் வெளியான அரண்மனை 4-ம் பாகம் படத்தில் இன்னொரு நாயகியான ராஷிகன்னாவுடன் இணைந்து நடித்து இருந்தார். படப்பிடிப்பில் இருவருக்கும் போட்டி நிலவியதாக கூறப்பட்டது.

இதுகுறித்து தமன்னா அளித்துள்ள பேட்டியில், "ஒரு படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடித்தால் ஒருவரோடு ஒருவரை ஒப்பிட்டு பேசுவது வழக்கம். சிலர் இரண்டு நடிகைகளுக்கும் போட்டி என்றும் பேசுவார்கள். என்னை பொறுத்தவரை நடிகைகளுக்குள் போட்டி இருப்பதை வரவேற்கிறேன். ஆனால் அது ஆரோக்கியமான போட்டியாக இருக்க வேண்டும். சினிமா துறையில் போட்டிகள் இருந்தாலும் நாம் நம்மை மாதிரியே நடித்தால் போதும்.
நானும், ராஷிகன்னாவும் ஒரு பாடலில் சேர்ந்து நடித்தபோது ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தோம். நடிகைகளுக்குள் ஆரோக்கியமான போட்டி இருந்தால் நல்லது'' என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- எனக்கு அடுத்தவர்களின் வாழ்க்கை இன்ஸ்பிரேஷனாக இருக்கிறது.
- இனிமேல் இன்னும் அதிகமாக கஷ்டப்பட்டு உழைப்பேன்.
நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பில் சிக்கி சிகிச்சை பெற்றார். இதனால் சினிமாவை விட்டும் சில மாதங்கள் ஒதுங்கியும் இருந்தார். சிகிச்சைக்கு பின் உடல்நிலை தேறி மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

இந்த நிலையில் சமந்தா அளித்துள்ள பேட்டியில், "எனக்கு அடுத்தவர்களின் வாழ்க்கை இன்ஸ்பிரேஷனாக இருக்கிறது. எல்லா துறைகளில் இருப்பவர்களும் தங்களை மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்த்துக் கொள்வது சகஜம். நானும் அப்படித்தான்.
மற்றவர்களின் வெற்றிகளை பார்த்து நாமும் அவர்களைப்போல் முன்னேற கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். 'ஐஎம்டிபி'யின் 100 பிரபலங்கள் பட்டியலில் எனக்கு 13-வது இடம் கிடைத்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
எனக்கு நல்ல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன. இனிமேல் இன்னும் அதிகமாக கஷ்டப்பட்டு உழைப்பேன்''என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






