என் மலர்
நீங்கள் தேடியது "Aamir"
- பாதிக்கப்பட்டவருக்கு நீதி இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை
- பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்பதே அறம்
கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் 8 ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு, 6 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் பிரபல நடிகர் திலீப் உட்பட 4 பேர் விடுவிக்கப்பட்டனர். இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்தநிலையில், கேரள அரசு மேல்முறையீடு செய்யப்படும் என தெரிவித்திருந்தது.
இதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நடிகையும், நடிகை மஞ்சு வாரியரும் இதுதொடர்பாக கருத்து தெரிவித்திருந்தனர். "நீதிமன்றத்தின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு நீதி இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை. குற்றத்தைச் செய்தவர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொடூரச் செயலைத் திட்டமிட்டு, அதற்கு வழிவகுத்த அந்த மாஸ்டர் மைண்ட் அது யாருடையதாக இருந்தாலும், இன்னும் சுதந்திரமாக நடமாடுகிறது, அதுவே மிகவும் அச்சமூட்டுகிறது." என மஞ்சு வாரியர் தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் மஞ்சு வாரியரின் பக்கமே தான் நிற்பதாக நடிகரும், இயக்குநருமான அமீர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பதிவிட்டிருந்த அவர்,"பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்பதே அறம். தீர்ப்புகள் எல்லாம் நீதி ஆகிவிடாது. மஞ்சு வாரியரின் பக்கமே நான் நிற்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- சசிகுமாரின் அடுத்த படத்துக்கான தோற்றமா?
- வலைதளத்தில் ரசிகர்கள் பலர் கேள்வி.
தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர்களான பாலா, அமீர் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சசிகுமார். தொடர்ந்து சுப்பிரமணியபுரம் படத்தை இயக்கியதுடன் படத்தின் கதாநாயகனாக நடித்தார். படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
நாடோடிகள், ஈசன், சுந்தரபாண்டியன், கொடி வீரன் உள்பட பல பலபடங்களில் நடித்துள்ளார். பெரும்பாலான படங்களில் கிராமத்து தோற்றத்தில்தான் சசிகுமார் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான கருடன் படத்திலும் கிராமத்து கோவில் சொத்தை பாதுகாக்க போராடும் காட்சிகளில் அவரது கதாபாத்திரம் பேசப்படும் வகையில் அமைந்தது.

இந்நிலையில் சசிகுமார் திடீரென முற்றிலும் புதிய தோற்றத்தில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு சமூக வலைதளத்தில் அவர் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சசிகுமாரின் அடுத்த படத்துக்கான தோற்றமா? என வலைதளத்தில் ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்புகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிறப்பால் ஒரு முதலமைச்சர் தமிழகத்தில் உருவாக்கப்பட கூடாது என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
- ஜனநாயக நாட்டில் மக்கள் ஆதரவின்றி ஒருவர் முதலமைச்சராகவே முடியாது என்று இயக்குநர் அமீர் தெரிவித்தார்
சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்டார்.
அந்நிகழ்வில் பேசிய அவர், "மக்கள் உணர்வுகளை மதிக்க தெரியாத, மக்களுக்கு அடிப்படை சமூகநீதியான பாதுகாப்பை கூட உறுதி செய்ய இயலாத கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி இறுமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை. நீங்க உங்கள் சுயநலத்திற்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் கூட்டணி கணக்குகள் அனைத்தும் 2026-ல் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்" என்று தெரிவித்தார்.
மேலும் அந்நிகழ்வில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, "மன்னர் பரம்பரை போன்ற ஆதிக்கத்திற்கு தமிழகத்தில் இனி இடமில்லை. 2026ம் ஆண்டு தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும். பிறப்பால் ஒரு முதலமைச்சர் தமிழகத்தில் உருவாக்கப்பட கூடாது" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு இயக்குநர் அமீர் அறிவுரை தெரிவிக்கும் விதமாக தனது வாட்சப்பில் ஸ்டேடஸ் வைத்துள்ளார்.
அவரது பதிவில், "பிறப்பால் ஒருவர் பணக்காரர் ஆகலாம். பணக்கார வாரிசுகளை மணப்பதாலும் ஒருவர் பணக்காரர் ஆகலாம்.. ஆனால், ஜனநாயக நாட்டில் மக்கள் ஆதரவின்றி ஒருவர் முதலமைச்சராகவே முடியாது" என்றும் "செல்வந்தர்களின் திடீர் அரசியல் பிரவேசம் என்றைக்குமே மக்களுக்கு நன்மை தராது. ஆதவ் அர்ஜுனாவின் நட்பு, விஜயன் அரசியலுக்கு நல்லதல்ல" என்றும் தெரிவித்துள்ளார்.






