search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Director Ameer"

  • ஜாபர் சாதிக் 'இறைவன் மிகப் பெரியவன்' படத்தின் தயாரிப்பாளர் என்பதால், அப்படத்தில் நடித்த என்னை பற்றி அவ்வளவு அவதூறுகள் பரப்புகிறார்கள்.
  • என் கருத்தியலோடு மோத முடியாதவர்கள், என் மீது அவதூறுகள் பரப்பி என்னை வீழ்த்த நினைக்கிறார்கள்

  இயக்குநர் அமீர் நடித்துள்ள 'உயிர் தமிழுக்கு' என்ற திரைப்படம் வரும் மே 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. அரசியல் நையாண்டிப் படமான இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

  அந்நிகழ்வில் பேசிய அமீர், "ஜாபர் சாதிக்கை எனக்கு தெரியும், அவருடன் பழகியிருக்கிறேன். ஆனால், அவர் என்னவெல்லாம் செய்கிறார், அவர் தொழில்கள் என்னென்ன, அவருக்கு எப்படி பணம் வருகிறது என்றெல்லாம் நான் ஒரு நாளும் கேட்டதில்லை. நம்முடன் நிறைய பேர் பழகுவார்கள் அவரின் பின்னணியெல்லாம் ஆய்வு செய்து கொண்டிருக்க முடியாது.

  'லைகா' நிறுவனம் மீது பல வழக்குகள் இருக்கிறது. 'லைகா' தயாரிப்பில் ரஜினி நடித்திருக்கிறார். என்றாவது ரஜினியிடம், லைகா நிறுவனத்தின் வழக்குகள் குறித்து யாரும் கேட்டிருக்கிறீர்களா. ஆனால், ஜாபர் சாதிக் 'இறைவன் மிகப் பெரியவன்' படத்தின் தயாரிப்பாளர் என்பதால், அப்படத்தில் நடித்த என்னைப் பற்றி அவ்வளவு அவதூறுகள் பரப்புகிறார்கள்.

  என்னுடைய திரை பயணம் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து, அரசியல் பயணம் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து, நான் சந்தித்திராத ஒரு புதிய மேடை இது.

  இந்த சூழலில் நான் யார் என யோசித்தால், ராமாயணத்தில் வரும் சீதையும், நானும் கிட்டத்தட்ட உடன் பிறந்தவர்கள் போல தான். அவர் அக்னியில் மிதந்து தன்னுடைய கற்பை நிரூபித்தார். அவராவது ஒரு முறை நிரூபித்தார். நான் வாரா வாரம் நிரூபித்துக் கொண்டே இருக்கிறேன்.

  நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று விளக்கமளித்த பின்பும் என்னைப் பற்றி அவதூறுகள் பரப்பப்படுகிறது. என் கருத்தியலோடு மோத முடியாதவர்கள், என் மீது அவதூறுகள் பரப்பி என்னை வீழ்த்த நினைக்கிறார்கள்.

  இந்த அவதூறுகள் எல்லாம் என்னை பாதிப்பதில்லை. ஆனால், இவையெல்லாம் என் குடும்பத்தையும், என் குழந்தைகளையும் பாதிக்கிறது. அவர்களுக்கு தேவையில்லாத மன அழுத்தத்தைக் கொடுக்கிறது.

  அமலாக்கத்துறை என்னை விசாரித்தது, நானும் முழு ஆதரவுக் கொடுத்து அவர்களின் கேள்விகளுக்கு உரிய பதிலளித்தேன். நான் எந்தத் தவறும் செய்யவில்லை, அதனால் எனக்கு எந்தப் பயமுமில்லை. என் மீது சந்தேகப்படுவது, கேள்வி கேட்பதையெல்லாம் நான் தாங்கிக் கொள்வேன், ஆனால் அவதூறு பரப்புவது சரியானதல்ல. சிலர் அதைத் திட்டமிட்டுச் செய்கின்றனர்" என்று வருத்தத்துடன் பேசியுள்ளார்.

  • என்னை மட்டுமே மையமாக வைத்து விசாரணை நடத்துவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன.
  • ஓடி, ஒளிய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

  மதுரை:

  திரைப்பட இயக்குனர் அமீரை ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக டெல்லி என்.சி.பி. போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர். இரண்டாவது முறையாக ஆஜராகவும் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

  இந்தநிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் திரைப்பட இயக்குனர் அமீர் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

  ரமலான் மாதம் 30 நாட்கள் நோன்பு நோற்று முடித்து இன்று ரம்ஜான் பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறோம். அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். என்.சி.பி. அதிகாரிகள் என்னை இரண்டாவது முறையாக ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பி இருக்கிறார்கள்.

  என்னை பொறுத்தவரை இது ஒரு புது அனுபவம்தான். என்னோடு பயணித்த நபர் ஒருவர் மீது இவ்வளவு பெரிய குற்றப்பின்னணி இருக்கும்போது, அந்த குற்றத்திற்கான சந்தேக நிழல் என்மீது விழுவதில் தவறில்லை. இதில் என்மீது சந்தேகமே படக்கூடாது என்று நான் கூறமுடியாது. அவர் மீது குற்றப்பின்னணி இருப்பதால் அவருடன் பயணித்தவர் என்ற முறையில் என்னிடம் கேள்வி கேட்பதில் நியாயம் இருக்கிறது.

  ஆனால் அதே நேரத்தில் என்னை மட்டுமே மையமாக வைத்து விசாரணை நடத்துவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. வழக்கு குறித்தும், விசாரணை குறித்தும் எந்தவித முழுமையான தகவலை அறியாதவர்கள் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இஷ்டத்துக்கு கருத்து சொல்வதற்கு விரைவில் ஒரு முற்றுப்புள்ளி வரும்.

  என்.சி.பி.யின் இரண்டாம் கட்ட விசாரணைக்கோ, என்னிடம் உள்ள சொத்து ஆவணங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவோ நான் எந்தவொரு கால அவகாசமும் கேட்கவில்லை. இந்த வழக்கு தொடர்பாக முதன்முறையாக என்னுடைய அறிக்கையில், என்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள கால அவகாசம் வேண்டும். ஆரம்பம் முதல் குற்றம் சாற்றப்பட்ட நபர் ஜாபர் சாதிக்கை தற்போது வரை யாரும் பார்க்கவில்லை. அவர் சிறைக்கு சென்று விட்டார்.

  எனவே அவரைப்பற்றியோ, அவர் தொடர்பான வழக்கு பற்றியோ எதுவும் தற்போது கூறமுடியாது. அவரோடு பயணித்தவன் என்ற முறையில் என்மீது சந்தேக நிழல் விழுவதை நான் தட்டிக்கழிக்க முடியாது. இந்த வழக்கு விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். விசாரணை முடிந்ததும் முழுமையாக என்னுடைய பங்களிப்பு என்ன என்பதை தெளிவாக கூறுவேன். எனவே ஓடி, ஒளிய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அதற்கான தேவையும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் காழ்ப்புணர்ச்சி காரணமாக யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பேசுவது, எழுதுவது ஆகியவற்றை நான் கடந்து தான் செல்ல வேண்டும், சிரிப்பதை தவிர வேறு ஒன்றும் இருக்க முடியாது. என்தரப்பில் இருந்து இந்த வழக்கில் நல்ல முடிவு வரும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • டெல்லியில் இருந்து போதைப்பொருட்களை கடத்தி ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் சம்பாதித்ததாக ஜாபர் சாதிக் என்பவர் கைது செய்யப்பட்டார்
  • ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குனர் அமீர் ஆஜராக, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது

  டெல்லியில் இருந்து போதைப்பொருட்களை கடத்தி ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் சம்பாதித்ததாக கைது செய்யப்பட்டுள்ள தமிழ் சினிமா தயாரிப்பாளரும் தி.மு.க. அயலக அணி முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை கைது செய்த மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

  டெல்லியில் இருந்து உணவுப் பொருட்களை நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு அனுப்புவது போல ஜாபர் சாதிக் போதைப்பொருட்களை கடத்தி இருப்பது அம்பலமானதை அடுத்து அவர் மீதான பிடி இறுகியது.

  இந்நிலையில், ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குனர் அமீர் ஆஜராக, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது.

  அதில், வரும் 2ம் தேதி டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

  இந்தநிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அளித்துள்ள சம்மன் தொடர்பாக இயக்குனர் அமீர் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ஜாபர் சாதிக் வழக்கு தொடர்பான விசாரணையை எதிர்கொள்ள தயார். கொஞ்சமும் தயக்கமில்லாமல், என் தரப்பிலிருக்கும் உண்மையையும், நியாயத்தையும் எடுத்து சொல்வேன்" எனவும் தெரிவித்துள்ளார். 100 சதவிகிதம் வெற்றியோடு இறைவன் அருளால் வருவேன் என அமீர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

  ஜாபர் சாதிக் தயாரித்த படத்தை, அமீர் இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

  • மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராக சம்மன்.
  • ஜாபர் சாதிக் தயாரித்த படத்தை, அமீர் இயக்கி இருந்தார்.

  டெல்லியில் இருந்து போதைப்பொருட்களை கடத்தி ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் சம்பாதித்ததாக கைது செய்யப்பட்டுள்ள தமிழ் சினிமா தயாரிப்பாளரும் தி.மு.க. அயலக அணி முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை கைது செய்த மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

  டெல்லியில் இருந்து உணவுப் பொருட்களை நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு அனுப்புவது போல ஜாபர் சாதிக் போதைப்பொருட்களை கடத்தி இருப்பது அம்பலமானதை அடுத்து அவர் மீதான பிடி இறுகியது.

  இந்நிலையில், ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குனர் அமீர் ஆஜராக, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது.

  அதில், வரும் 2ம் தேதி டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

  ரூ.2000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில், ஜாபர் சாதிக், அவரது கூட்டாளி சதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

  ஜாபர் சாதிக் தயாரித்த படத்தை, அமீர் இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

  • கடந்த இரண்டு நாட்களாக, எனது ‘இறைவன் மிகப் பெரியவன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது
  • ஜாபர்சாதிக், கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘மங்கை’ படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

  "செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயானால், அது கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமே. சட்டவிரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை" என்று தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் குறித்து இயக்குநர் அமீர் விளக்கம் அளித்துள்ளார்.

  இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "கடந்த இரண்டு நாட்களாக, எனது 'இறைவன் மிகப் பெரியவன்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த 22-ம் தேதி நான் 'இறைவன் மிகப் பெரியவன்' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்த போது, திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஏன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது? என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை ஊடகங்கள் வாயிலாகவே நான் அறிந்து கொண்டேன்.

  உண்மை எதுவென்று இப்போது வரை எனக்குத் தெரியவில்லை. எதுவாயினும், செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயானால், அது கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமே.

  நடிகர்களோடும், தயாரிப்பாளர்களோடும் சமரசங்களுக்கு உட்பட்டால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற கொள்கைக்கு நான் எப்போதும் எதிரானவன் என்பதை ஊடகத் துறையினர் நன்கு அறிவர். அந்த வகையில், சட்டவிரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  தற்போதும், நான் பத்திரிகையாளர்களை வழக்கமாகச் சந்திக்கும் எனது அலுவலகத்தில் திரைப்பட பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன். முழு விபரங்கள் தெரிந்த பிறகு, விரைவில் பத்திரிகை மற்றும் ஊடக துறையினரைச் சந்திக்கின்றேன்" என தெரிவித்துள்ளார்.மேலும் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜாபர், கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள 'மங்கை' படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

  டெல்லியில், சுமார் 2,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களைக் கடத்த முயன்ற கும்பல், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது. விசாரணையில், இவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், இந்தக் கும்பலின் தலைவனாகச் செயல்பட்டவர், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து ஜாபர் சாதிக் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார்

  மேலும் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜாபர்சாதிக், கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள 'மங்கை' படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • சுதா கொங்கரா இயக்குனர் அமீர் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
  • பிரசாத் ஸ்டீடியோஸ்-க்கு வெளியே வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன்.

  இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையேயான கருத்து பரிமாற்றம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு ஆதரவாக திரைத் துறையை சேர்ந்த சிலரும், இயக்குனர் அமீருக்கு ஆதரவாக சிலரும் தங்களின் கருத்துக்களை இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

  அந்த வரிசையில், இயக்குனர் சுதா கொங்கரா இயக்குனர் அமீர் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கும் பதிவு வைரல் ஆகி வருகிறது. அந்த பதிவில், "2016, பிப்ரவரி 2-ம் தேதி அமீர் அண்ணாவிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அப்போது நான் பிரசாத் ஸ்டீடியோஸ்-க்கு வெளியே வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன்."

  "அந்த சமயத்தில் இறுதி சுற்று படத்துக்காக திரைத்துறையில் இருந்து என்னை பாராட்டிய வெகு சிலரில் அவரும் ஒருவர் என்பதால், அந்த தருணம் எனக்கு அப்படியே நினைவில் இருக்கிறது. அப்போது நான் அவரிடம் கூறியது ஒன்று மட்டும்தான், மதி என்ற கதாபாத்திரத்தை நான் எழுதுவதற்கு முதல் காரணம் முத்தழகு தான்."

  "மேலும் ஒரு ஆண் எழுதிய மிகச் சிறப்பான பெண் கதாபாத்திரம் பற்றி நான் பேசினேன். மதி மற்றும் பொம்மி என இரு கதாபாத்திரங்களில் நடிக்கும் முன், இரண்டு நடிகைகளையும் நான் பருத்தி வீரன் படத்தை எடுத்துக்காட்டுக்காக பார்க்க வைத்தேன். தமிழ் சினிமாவின் சிறந்த படைப்பாளிக்கு நான் செய்யும் மரியாதை இது மட்டும்தான். நான் கூற விரும்புவதும் இதை மட்டும்தான்," என்று குறிப்பிட்டுள்ளார். 

  ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பேரன்பு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை ஆண்ட்ரியா, ராம் மீதோ, அஞ்சலி மீதோ தனக்கு கோபம் இல்லை என்று கூறினார். #Peranbu
  கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி என்று மூன்று தரமான படங்களை ராம் இயக்கி இருக்கிறார். அடுத்ததாக அவரது இயக்கத்தில் ‘பேரன்பு’ படம் உருவாகி இருக்கிறது. மம்முட்டி, அஞ்சலி, சமுத்திரகனி, தங்க மீன்கள் சாதனா, ஆண்ட்ரியா உள்ளிட்டவர்கள் நடித்து இருக்கும் இந்த படத்தின் இசை வெளியீடு நடந்தது.

  இதில் கவிஞர் வைரமுத்து, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர்கள் மம்முட்டி, சத்யராஜ், சித்தார்த், வசந்த் ரவி, இயக்குனர்கள் பாரதிராஜா, பாலா, மிஷ்கின், வெற்றிமாறன், அமீர், கே.எஸ்.ரவிகுமார், விஜய், சமுத்திரகனி, கரு.பழனியப்பன், மனோபாலா, கோபி நயினார், சசி, மீரா கதிரவன், ஈ.ராம்தாஸ், நடிகைகள் அஞ்சலி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  சத்யராஜ் பேசும்போது ‘நான் முதலில் வில்லனாக நடித்துவிட்டு தான் கதாநாயகனாக மாறினேன். அப்போது எனக்கு உதவி செய்தது மம்முட்டி நடித்த படங்கள் தான். அவரை பார்த்து தான் நான் நடிப்பு கற்றுக் கொண்டேன். மம்முட்டி படங்களை ரீமேக் செய்துதான் நான் கதாநாயகன் ஆனேன் என்றார்.

  ஆன்ட்ரியா பேசும்போது ‘இந்த படத்தில் என்னை நடிக்க அழைக்கவில்லை என்று ராம் மீது கோபம் இல்லை. அஞ்சலி அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கிறார்’ என்றார். #Peranbu #Mammootty #Anjali #Andrea

  ஆண்ட்ரியா பேசிய வீடியோவை பார்க்க:

  ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பேரன்பு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, நா.முத்துக்குமார் இல்லாமல் கஷ்டப்பட்டோம் என்று கூறினார். #Peranbu
  ராம் இயக்கத்தில் மம்முட்டி - அஞ்சலி - பேபி சாதனா நடிப்பில் உருவாகி இருக்கும் பேரன்பு படத்திற்கு உலக அரங்கில் பாராட்டுக்களும், பல்வேறு விருதுகளும் கிடைத்துள்ளது. இந்த நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டீசர் வெளியீடு சென்னையில் நேற்று நடந்தது. 

  இதில் இயக்குநர் ராம், மம்முட்டி, அஞ்சலி, ஆண்ட்ரியா, சித்தார்த், இயக்குநர்கள் பாரதிராஜா, பாலா, சமுத்திரக்கனி, கே.எஸ்.ரவிக்குமார். வெற்றிமாறன், மிஷ்கின், கரு.பழனியப்பன், அமீர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மேடைக்கு வந்த போது ரசிகர்கள் யுவனிடம் சில கேள்விகளை கேட்டனர். அதற்கு யுவன் அளித்த பதில்களாவது, 

  கே:- சினிமாவிற்கு வந்து 20 வருடங்கள் கடந்தும் யுவனுக்கான அங்கீகாரம், பெரிய விருது கிடைக்கவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது?

  ப:- அதைப்பற்றி வருத்தப்பட தேவையில்லை என்று ரசிகர்களை கைகாட்டி இதைவிட பெரிய அங்கீகாரம் எதுவுமே இல்லை என்றார். இதற்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும், விருது கிடைக்க வேண்டும் என்று எதையும் செய்யவில்லை. அந்த எண்ணமும் கிடையாது. மக்கள் மனதில் பதிந்தால் போதும்.   கே:- நா.முத்துக்குமார் இல்லாமல் நீங்கள் இணையும் முதல் படம் இது, எப்படி உணர்கிறீர்கள்?

  ப:- இந்த படத்திற்காக இசையமைக்கும் போதே எங்கே அவர் என்று எங்களை யோசிக்க வைத்தார். சில பாடல்கள் எழுதும் போது இதற்கு முத்து இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தோம். அவர் எங்கேயும் போகவில்லை, அவருடைய வரிகள் இங்கேதான் இருக்கிறது. ராம் பேசும் போது, முத்துக்குமாரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை. அந்த இடம் அப்படியே இருக்கும். 

  இந்த படத்தை மம்முட்டி ஒத்துக்கொண்டதற்கு நன்றி. உங்களது இடத்தில் இருந்து இந்த மாதிரியான ஒரு படத்திற்கு அங்கீகாரம் கொடுத்ததில் மகிழ்ச்சி. இதுவரை பண்ணாத முயற்சியை இந்த படத்தில் முயற்சி செய்திருக்கிறோம். இவ்வாறு யுவன் பேசினார். #PeranbuAudioLaunch #Mammootty #Anjali

  ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பேரன்பு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் அமீர், பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார் இவர்களை தாண்டி, அனைத்து இயக்குநர்களுக்கும் இனிமேல் ராம் தான் குரு என்றார். #Peranbu
  ராம் இயக்கத்தில் மம்முட்டி - அஞ்சலி - பேபி சாதனா நடிப்பில் உருவாகி இருக்கும் பேரன்பு படத்திற்கு உலக அரங்கில் பாராட்டுக்களும், பல்வேறு விருதுகளும் கிடைத்துள்ளது. இந்த நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டீசர் வெளியீடு சென்னையில் நேற்று நடந்தது. 

  இதில் இயக்குநர் ராம், மம்முட்டி, அஞ்சலி, ஆண்ட்ரியா, சித்தார்த், இயக்குநர்கள் பாரதிராஜா, பாலா, சமுத்திரக்கனி, கே.எஸ்.ரவிக்குமார். வெற்றிமாறன், மிஷ்கின், கரு.பழனியப்பன், அமீர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அமீர் பேசும் போது,

  ஒரு திரைப்படத்திற்கு பெயர் வைக்கும்போது, இயக்குநருடைய குணாதிசயம் வெளியே வரும். எல்லா இயக்குநர்களும் தங்குளுடைய கதைகளை முடிவு செய்த பிறகு தலைப்பை யோசிப்பார்கள். பொதுவாக எல்லா இயக்குநர்களின் படங்களிலும் அவர்களுடைய குணாதிசயம் அல்லது அவர்கள் எதை நோக்கி போகிறார்கள் என்பது அந்த படத்தின் தலைப்பில் இருந்து வரும். உதாரணமாக மிஷ்கின் பிசாசு என்று வைத்திருக்கிறார் அல்லவா, அதுபோல தான். அதை அவரே ஒத்துக் கொள்வார்.   பேரன்பு என்ற தலைப்பை வைக்கும் போதே ஒரு மனிதனுக்குள் இவ்வுளவு பெரிய ஒரு சிந்தனை எப்படி இருக்கமுடியும். நாம் எல்லோருமே கடந்து போயிருப்போம். நாம் அனைவரும் மாற்றுத்திறனாளி ஒருவரை பார்ப்போம். பார்த்துவிட்டு கடந்து போய்விடுவோம். அந்த மாற்றுத்திறனாளியின் பார்வையில் உலகத்தை பார்க்கும் பார்வை, அந்த பெண்ணின் பெற்றோர் இந்த சமூகத்தில் எப்படி போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற பார்வை தான் ராமின் பேரன்பு. 

  இந்த படத்தை பற்றி நிறைய பேசிவிட்டார்கள். அவ்வுளவு பேச வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். இவையெல்லாமே ஒரு அனுபவம் தான். அடுத்தவர்களுக்கு இந்த படம் ஒரு ரெபரன்ஸாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த படத்தில் தனது பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்கும் காட்சி ஒன்று உள்ளது. இந்திய சினிமாவில் அதுபோன்ற ஒரு காட்சியை யாரும் பார்த்திருக்கமாட்டார்கள். பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார் இவர்களை தாண்டி, அனைத்து இயக்குநர்களுக்கும் இனிமேல் ராம் தான் குரு. எல்லாவற்றிலும் இந்த படம் முன்மாதிரியாக இருக்கும். நாம் பல இடங்களை புகைப்படத்தில் பார்த்திருப்போம். அதை ஒருநாள் நேரில் பார்க்கும் போது ஏற்படும் உணர்வு தான் பேரன்பு படம். #PeranbuAudioLaunch #Mammootty #Anjali