என் மலர்
நீங்கள் தேடியது "srivilliputhur"
- ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி நடந்தது.
- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
75-வது சுந்திர தின விழா, வள்ளலாரின் 200-வது பிறந்த நாள், அம்பேத்கர் பிறந்தநாள் விழா ஆகியவற்றை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடந்தது. ராமகிருஷ்ணபுரத்தில் தொடங்கிய பேரணி, பெரியமாரியம்மன் கோயில், சர்ச் சந்திப்பு, தேரடி மற்றும் 4 ரத வீதிகள் வழியாக சென்று வடக்கு ரத வீதியில் பேரணி நிறைவடைந்தது. அதை தொடர்ந்து அங்கு பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் ஆர்.எஸ்.எஸ். பிராந்த சக சேவா பிரமுக் முருகன், மாவட்ட தலைவர் விஜயராகவன், ஜில்லா காரியவாக் ஜெயபாலன், விஸ்வ இந்து பரிசத் தென்மாநில அமைப்பாளர் சரவண கார்த்திக், பா.ஜ.க. மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் பேசினர். போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், டி.எஸ்.பி. சபரிநாதன் தலைமையில் 450-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் இன்று மாலை ஆண்டாள் கோவில் முன்பு உள்ள திரு ஆடிப்பூர கொட்டகையில் நடைபெற உள்ளது.
இதனை தொடர்ந்து இன்று காலை செப்புத் தேரோட்டம் நடைபெற்றது. விழாவையொட்டி அதி காலை 5 மணிக்கு ஆண்டாளும், ரெங்கமன்னாரும் கோவிலில் இருந்து மேள தாளங்கள் முழங்க ஆண் டாள் கோவில் முன்புள்ள செப்பு தேர் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டனர். பின்னர் ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் செப்புத் தேரில் வைத்து நடைபெற்றது. அதைத்தொடர்ந்து திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
திருக்கல்யாணத்தை முன்னிட்டு ஆண்டாள் அணிந்து கொள்ள திருப்பதியில் இருந்து பட்டு வஸ்திரமும் இன்று ஆண்டாளுக்கு கொண்டு வரப்படுகிறது.
செப்புத் தேரோட்ட நிகழ்ச்சியில் ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச் சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன், ஆண்டாள் கோவில் பட்டர்கள், வேத பிரான் பட்டர், ஸ்ரீராமுலு, அனந்த ராமகிருஷ்ணன் முத்து பட்டர், சுதர்சன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தேரோட்டத்தை முன்னிட்டு டி.எஸ்.பி. ராஜா, நகர் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் முருகக்கனி. இவர் கிருஷ்ணன் கோவில் பஸ் நில யம் அருகில் மதுரை- செங்கோட்டை சாலையில் ஒரே கட்டிடத்தில் கடைகள் வைத்துள்ளார். கீழ் தளத்தில் செருப்பு கடையும், மேல்தளத்தில் பரிசுப் பொருட்கள் கடையும் நடத்தி வருகிறார்.
நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு முருகக்கனி வீட்டுக்கு சென்று விட்டார்.
இன்று காலை மாடியில் இருந்த பரிசுப்பொருட்கள் கடையில் இருந்து கரும்புகை வெளியானது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம், பக்கத்தினர் உடனே முருகக்கனிக்கு தகவல் கொடுத்தனர்.
மேலும் கிருஷ்ணன் கோவில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால் அதற்குள் தீ கீழே உள்ள செருப்பு கடைக்கும் பரவியது.
தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் தீயின் தாக்கம் அதிகம் இருந்ததால் விருதுநகரில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.
மாவட்ட தீயணைப்பு அலுவலர் கருப்பையா தலைமையில் 20-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் போலீசார் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் 2 கடைகளில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.
இது குறித்து கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆத்திக்குளம் ரெயில்வே கேட் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் நசுங்கி பிணமாக கிடந்தார். இதனை அந்த வழியே சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகணேஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிணமாக கிடந்தவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என விசாரணை நடைபெற்றது. இதில் தற்கொலை செய்தவர் ஸ்ரீவில்லிபுத்தூர் கீழப்பட்டி பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் பாலசுப்பிரமணியம் (35) என தெரியவந்தது.
தொழிலாளியான அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது மர்மமாக உள்ளது. இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் பால கணேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் காளிதாஸ். இவரது மகன்கள் ராமர் (வயது 28), கருப்பசாமி (25). அதே பகுதியைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி (35). இவர்கள் 3 பேரும் சலவை தொழிலாளிகள்.
இன்று காலை 3 பேரும் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சலவை செய்த துணிகளை எடுத்துக்கொண்டு ராஜபாளையம் சத்திரப்பட்டிக்கு சென்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் -ராஜபாளையம் சாலையில் தியேட்டர் அருகே சென்ற போது சென்னையை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த கருப்பசாமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
ராமர் மற்றும் தங்கப்பாண்டி காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வேன் டிரைவர் குமார் கைது செய்யப்பட்டார்.
இதே போல் இந்த ஆண்டுக்கான 108 போர்வை சாற்றும் நிகழ்ச்சி நேற்று அதிகாலை நடைபெற்றது. இந்த வைபவத்தின் போது நேற்று ஒரு நாள் மட்டுமே சன்னதியிலிருந்து புறப்பட்டு பகல் பத்து மண்டபத்தில் கருடாழ்வார் எழுந்தருளினார்.
அங்கு ஆண்டாள், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, ஆழ்வார்கள் என தெய்வங்களின் விக்ரகங்களுக்கு 108 போர்வை சாற்றும் வைபவம் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. அதிகாலையில் புராணம் வாசிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்யும் தொடர் மழையால் கண்மாய், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் மட்டம் உயர்ந்து வருகிறது. ராஜபாளையம் மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் 6-வது மைல் குடிநீர் தேக்க ஏரியும் நிரம்பி வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பெய்த மழையால் ரைட்டான்பட்டி ஓடையில் சென்ற மழைநீர் அங்குள்ள அருந்ததியர் குடியிருப்புகளில் புகுந்தது. 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மழைநீர் புந்தது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நேற்றும் மழை பெய்ததால் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர் வடியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திருவண்ணாமலை மெயின் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், அதிகாரிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பின்பு மறியல் கைவிடப்பட்டது.
மறியலால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விருதுநகர், சாத்தூர், சிவகாசி ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. சிவகாசியில் ஒரு வாரமாக பெய்து வரும் மழையால் பட்டாசு ஆலையில் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. #tamilnews
அரபிக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று காலை மழை சற்று ஓய்ந்து இருந்த நிலையில் மாலையில் பல்வேறு இடங்களில் பரவலாக லேசான முதல் மிதமான மழை பெய்தது.
ராமநாதபுரம் நகர், பரமக்குடி, கமுதி, திருவாடானை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் இன்று காலை வரை விடிய, விடிய மழை பெய்தது.
இதனால் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியது. சில இடங்களில் இடியுடன் மழை பெய்ததால் மின்தடை ஏற்பட்டது.
ராமேசுவரத்தில் நள்ளிரவு 2 மணி முதல் இன்று காலை வரை பலத்த மழை பெய்தது. பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

காளையார்கோவில், காரைக்குடி, கல்லல், திருப்பத்தூர், தேவகோட்டை, இளையான்குடி, மானாமதுரை ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இன்று காலையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் லேசான சாரல் மழை இருந்தது.
மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
திருப்புவனம்- 148.6
தேவகோட்டை- 2.2
காளையார்கோவில்- 9.8
சிங்கம்புணரி- 13.6
விருதுநகர் மாவட்டத்தில் போதிய மழை இல்லாத போதிலும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் 75 சதவீதத்துக்கும் மேல் தண்ணீர் நிரம்பி உள்ளது.
ராஜபாளையத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய, விடிய மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழை காரணமாக அய்யனார்கோவில் ஆறு, முள்ளி ஆறு, பேயனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் லேசான மழை இருந்தது.
மாவட்டத்தின் உள்பகுதிகளான விருதுநகர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் போதிய மழை இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
மதுரை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை இல்லாத நிலையில் நேற்று மதியம் முதல் ஆங்காங்கே லேசான முதல் மிதமான மழை பெய்தது. நேற்று நள்ளிரவு 1 மணி முதல் இடியுடன் பலத்த மழை பெய்தது. வாடிப்பட்டி, சமயநல்லூர், சோழவந்தான், மேலூர், நாகமலை புதுக்கோட்டை, அலங்காநல்லூர், பாலமேடு, குமாரம், ஆண்டிப்பட்டி, திருமங்கலம், விரகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சில இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது.
மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இன்று காலையில் சில இடங்களில் மழை பெய்தது. வானம் மேகமூட்டமாக காணப்படுகிறது.
மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
உசிலம்பட்டி- 26.20
மதுரை தெற்கு- 40.30
விரகனூர்- 110.50
விமான நிலையம்- 21.20
இடையபட்டி- 57.20
புலிப்பட்டி- 8.40
சோழவந்தான்- 30.10
கள்ளிக்குடி- 12.20
மாவட்டத்தில் நேற்று முதல் இன்று காலை வரை 853.70 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மதுரை ஜெய்ஹிந்து புரத்தைச் சேர்ந்தவர் மாயாண்டி (வயது19). இவர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலைய பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார்.
இன்று காலை மாயாண்டி, தனது நண்பர்கள் சுந்தர், கல்யாணப்பெருமாள் ஆகியோருடன் ஒரே மோட் டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்- செண்பகதோப்பு சாலையில் மறவமங்கலம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
படுகாயம் அடைந்த மாயாண்டி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். உயிருக்கு போராடிய சுந்தர், கல்யாணப்பெருமாளை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் 2 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விபத்து குறித்து மம்சாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் வைரமுத்து (29), டிராக்டர் டிரைவர். இவர் இன்று காலை திருவண்ணாமலைக்கு டிராக்டரில் சென்றார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த வைரமுத்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews