ரத்த தான முகாம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரத்த தான முகாம் நடந்தது.96 யூனிட் ரத்தம் தானமாக வழங்கப்பட்டது.
ரத்த தான முகாம்
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்

முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரம் பசும்பொன் தேவர் மேல்நிலைப்பள்ளி யில் அனைத்து இளைஞர் அமைப்பு கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. மம்சாபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கலா, ராஜபாளையம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மருத்துவர் கிரிஜா, தேவர் மகாசபை தலைவர் சித்தானந்தன், செயலாளர் காளிமுத்து, பசும்பொன் தேவர் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வீரய்யா, சுசீலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் 96 யூனிட் ரத்தம் தானமாக வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் ஆகியோர் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com