அருண் விஜயின் `ரெட்ட தல' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் அடுத்ததாக அருண் விஜயின் படத்தை இயக்குகிறார். இப்படத்தில் அருண் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார். தடம் படத்திற்கு பிறகு இரு வேடங்களில் நடித்திருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அருண் விஜயின் `ரெட்ட தல' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு
Published on

கடந்த ஜனவரி மாதம் விஜய் ஏ.எல் இயக்கத்தில் அருண் விஜய் , எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் இணைந்து நடித்து மிஷன் சாப்டர் 1 திரைப்படம் வெளியாகியது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் வனங்கான், பார்டர், AV 36 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் அடுத்ததாக அருண் விஜயின் படத்தை இயக்குகிறார். இப்படத்தின் நாயகியாக சித்தி இத்னானி நடிக்கவுள்ளார். இவர் இதற்கு முன் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். படத்தின் இசையை சாம். சி.எஸ் மேற்கொள்கிறார். அன்பறிவு ஸ்டண்ட் காட்சிகளை கையாளுகின்றனர். பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.

படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டரை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் கடந்த மாதம் வெளியிட்டார்.

இப்படத்திற்கு 'ரெட்ட தல' என்ற தலைப்பை வைத்துள்ளனர் அதைத்தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படக்குழுவினர் வெளியிட்டனர். இப்படத்தில் அருண் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார். தடம் படத்திற்கு பிறகு இரு வேடங்களில் நடித்திருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் படத்தின் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்தை போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர் அதில் அருண் விஜய் கூலர்ஸ் அணிந்து கார் ஓட்டியபடி அமர்ந்து இருக்கும் காட்சி அமைந்துள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com