என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரியா பவானி ஷங்கர்"

    • இரண்டாம் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து படக்குழு மூன்றாம் பாகத்தை இயக்க திட்டமிட்டது.
    • பூஜை விழா இன்று சென்னை முருகன் கோவிலில் நடைப்பெற்றது.

    இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமாக உருவாகி 2015 ஆம் ஆண்டு வெளியான டிமான்ட்டி காலனி திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2 ஆம் பாகத்தை படக்குழு வெளியிட்டது. இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது. உலகளவில் இப்படம் 80 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

    இரண்டாம் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து படக்குழு மூன்றாம் பாகத்தை இயக்க  திட்டமிட்டது. படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து முடிந்த நிலையில் படப்பிடிப்பை இன்று படக்குழு பூஜை விழாவுடன் தொடங்கியுள்ளது. பூஜை விழா இன்று சென்னை முருகன் கோவிலில் நடைப்பெற்றது.

    இந்த பாகத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் கோல்ட் மைன் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது. 

    • கல்யாணம் முதல் காதல் வரை என்ற சின்னத்திரையில் நடிகையாக திரை வாழ்க்கையை ஆரம்பித்து தற்போது வெள்ளித்திரையில் பிரபல நடிகையாக மாறியுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.
    • சமீபத்தில் ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்த ரத்னம் திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

    கல்யாணம் முதல் காதல் வரை என்ற சின்னத்திரையில் நடிகையாக திரை வாழ்க்கையை ஆரம்பித்து தற்போது வெள்ளித்திரையில் பிரபல நடிகையாக மாறியுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர். சின்ன திரையில் இருந்து வெளிவந்து வெள்ளி திரையில் இவர் நடித்த முதல் திரைப்படம் மேயாத மான். இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அதன் பின்னர் கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார்.

    அதைத்தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகினார் பிரியா பவானி சங்கர். மான்ஸ்டர், களத்தில் சந்திப்போம், குருதி ஆட்டம் போன்ற படங்களில் நடித்தார்.

    இத்திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து  பிரியா பவானி சங்கர் பல படங்களில் கமிட்டாகி வருகிறார். தமிழில் சிம்பு, தனுஷ், விஷால் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடிக்கிறார். தமிழ் மட்டுமன்றி தற்போது தெலுங்கிலும் பிரியா பவானி சங்கர் ஆர்வம் செலுத்தி வருகிறார்.  இதனிடையே தமிழில், இந்தியன் 2, டிமான்டி காலனி, மழை பிடிக்காத மனிதன் ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

    சமீபத்தில் ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்த ரத்னம் திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார்.

     

    இதனிடையே அவர் தனது கல்லூரி காலத்திலிருந்து காதலித்து வரும் ரத்னவேலு என்பவருடன் அவ்வப்போது புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார். தற்பொழுது அவருடன் ஜாலியாக ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுலா சென்றிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வௌியாகி வைரலாகி வருகின்றன.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் இந்தியன் 2. அடுத்த மாதம் 17 ஆம் தேதி ரிலீசாக உள்ளது.
    • "கதறல்ஸ்" என்ற பாடலின் லிரிக் வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது.

    நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் இந்தியன் 2. அடுத்த மாதம் 17 ஆம் தேதி ரிலீசாக இருக்கும் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இந்த நிலையில், இந்தியன் 2 படத்தில் இடம்பெற்றுள்ள "கதரல்ஸ்" என்ற பாடலின் லிரிக் வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது. இது இந்தியன் 2 படத்தில் இடம்பெற்றுள்ள குத்து பாடல் ஆகும். இசை வெளியீட்டின் போதே இந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்தியன் 2 படத்தின் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

    கதறல் லிரிக்கல் வீடியோவில் சித்தார்த்தும் பிரியா பவானி சங்கர் மிகவும் எனர்ஜெட்டிக்காக குத்து நடனம் ஆடியுள்ளனர். இப்பாடலின் வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×