காதலருடன் வெகேஷன் சென்ற பிரியா பவானி சங்கர் - வைரலாகும் புகைப்படம்

கல்யாணம் முதல் காதல் வரை என்ற சின்னத்திரையில் நடிகையாக திரை வாழ்க்கையை ஆரம்பித்து தற்போது வெள்ளித்திரையில் பிரபல நடிகையாக மாறியுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.சமீபத்தில் ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்த ரத்னம் திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
காதலருடன் வெகேஷன் சென்ற பிரியா பவானி சங்கர் - வைரலாகும் புகைப்படம்
Published on

கல்யாணம் முதல் காதல் வரை என்ற சின்னத்திரையில் நடிகையாக திரை வாழ்க்கையை ஆரம்பித்து தற்போது வெள்ளித்திரையில் பிரபல நடிகையாக மாறியுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர். சின்ன திரையில் இருந்து வெளிவந்து வெள்ளி திரையில் இவர் நடித்த முதல் திரைப்படம் மேயாத மான். இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அதன் பின்னர் கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார்.

அதைத்தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகினார் பிரியா பவானி சங்கர். மான்ஸ்டர், களத்தில் சந்திப்போம், குருதி ஆட்டம் போன்ற படங்களில் நடித்தார்.

இத்திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து  பிரியா பவானி சங்கர் பல படங்களில் கமிட்டாகி வருகிறார். தமிழில் சிம்பு, தனுஷ், விஷால் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடிக்கிறார். தமிழ் மட்டுமன்றி தற்போது தெலுங்கிலும் பிரியா பவானி சங்கர் ஆர்வம் செலுத்தி வருகிறார்.  இதனிடையே தமிழில், இந்தியன் 2, டிமான்டி காலனி, மழை பிடிக்காத மனிதன் ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்த ரத்னம் திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார்.

இதனிடையே அவர் தனது கல்லூரி காலத்திலிருந்து காதலித்து வரும் ரத்னவேலு என்பவருடன் அவ்வப்போது புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார். தற்பொழுது அவருடன் ஜாலியாக ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுலா சென்றிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வௌியாகி வைரலாகி வருகின்றன.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com