என் மலர்
சினிமா செய்திகள்

நடிகைகளுக்குள் போட்டி அவசியம் - தமன்னா
- இரண்டு கதாநாயகிகள் நடித்தால் ஒருவரோடு ஒருவரை ஒப்பிட்டு பேசுவது வழக்கம்.
- என்னை பொறுத்தவரை நடிகைகளுக்குள் போட்டி இருப்பதை வரவேற்கிறேன்.
ரஜினிகாந்துடன் தமன்னா நடித்த ஜெயிலர் படம் கடந்த வருடம் வெளியானது. இதில் அவர் கவர்ச்சியாக ஆடிய காவாலா பாடல் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
கடந்த மே மாதம் வெளியான அரண்மனை 4-ம் பாகம் படத்தில் இன்னொரு நாயகியான ராஷிகன்னாவுடன் இணைந்து நடித்து இருந்தார். படப்பிடிப்பில் இருவருக்கும் போட்டி நிலவியதாக கூறப்பட்டது.
இதுகுறித்து தமன்னா அளித்துள்ள பேட்டியில், "ஒரு படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடித்தால் ஒருவரோடு ஒருவரை ஒப்பிட்டு பேசுவது வழக்கம். சிலர் இரண்டு நடிகைகளுக்கும் போட்டி என்றும் பேசுவார்கள். என்னை பொறுத்தவரை நடிகைகளுக்குள் போட்டி இருப்பதை வரவேற்கிறேன். ஆனால் அது ஆரோக்கியமான போட்டியாக இருக்க வேண்டும். சினிமா துறையில் போட்டிகள் இருந்தாலும் நாம் நம்மை மாதிரியே நடித்தால் போதும்.
நானும், ராஷிகன்னாவும் ஒரு பாடலில் சேர்ந்து நடித்தபோது ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தோம். நடிகைகளுக்குள் ஆரோக்கியமான போட்டி இருந்தால் நல்லது'' என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






