சிவகார்த்திகேயன் படத்தில் சல்மான் கான் கேமியோ?: எகிறும் SK23 படத்தின் எதிர்பார்ப்பு

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் 'எஸ்கே23' படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்து வருகிறார்.
சிவகார்த்திகேயன் படத்தில் சல்மான் கான் கேமியோ?: எகிறும் SK23 படத்தின் எதிர்பார்ப்பு
Published on

அயலான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுதடுத்த படங்களில் நடித்து வருகிறார். கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

அதைத்தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 'எஸ்கே23' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கன்னட நடிகையான ருக்மணி வசந்த் நாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பிஜு மேனன் துப்பாக்கி படத்தின் வில்லனான வித்யுத் ஜம்வல் நடித்து வருகின்றனர்.

இப்படத்தை ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். 150 கோடி ரூபாய் பொருட் செலவில் இப்படம் உருவாகிக் கொண்டு இருக்கிறது. படம் இந்தாண்டு இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, ஏ.ஆர். முருகதாஸ் சல்மான் கானை வைத்து 'சிகந்தர்' என்ற பாலிவுட் படத்தை இயக்க உள்ளார். அதன் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்கவுள்ளது.

இந்நிலையில் 'எஸ்கே23' படத்தில் சல்மான் கான் கேமியோ ரோலில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com