கோட் படம் விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் - மோகன்

கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.
கோட் படம் விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் - மோகன்
Published on

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கியவர் மோகன். இடையில், பல ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர், சமீபத்தில் மீண்டும் நடிக்க துவங்கினார். இவர் நடிப்பில் உருவான ஹரா என்ற திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது.

இதோடு விஜய் நடிப்பில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) படத்திலும் நடிகர் மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் கோட் படம் குறித்து பேசிய மோகன், "இந்த படம் சிறப்பாக இருக்கும். விஜய் ரசிகர்களுக்கு இந்த படம் விருந்தாக அமையும். நான் இந்த படத்தில் தாடியுடன் நடித்திருக்கிறேன்."

"வெங்கட் பிரபு தனது படங்களில் நடிக்க என்னை பலமுறை அழைத்திருக்கிறார். ஆனாலும், என்னால் அவற்றில் நடிக்க முடியவில்லை. விஜய் மிகவும் எளிமையான நபராக இருக்கிறார். இந்த குழுவுடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது," என்று தெரிவித்தார். 

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com