இசையமைப்பாளர் இளையராஜா திருவண்ணாமலை கோவிலில் சாமி தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.கோவிலின் அறங்காவலர் குழு சார்பில் இளையராஜாவுக்கு மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது.
இசையமைப்பாளர் இளையராஜா திருவண்ணாமலை கோவிலில் சாமி தரிசனம்
Published on

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்த நிலையில், இன்று வைகாசி மாத அமாவாசை தினத்தையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா இன்று அண்ணாமலையார் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து, கோவிலின் அறங்காவலர் குழு சார்பில் அவருக்கு மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com