டெல்லி விரைந்த ரஜினிகாந்த்.. மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பு?.. பேட்டியில் சொன்னது இதுதான்

இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் சென்று சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் அவசர பயணமாக தற்போது டெல்லி விரைந்துள்ளார்.மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளத்தற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
டெல்லி விரைந்த ரஜினிகாந்த்.. மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பு?.. பேட்டியில் சொன்னது இதுதான்
Published on

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள உள்ள நிலையில் அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ளது. பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

இன்று தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ள மோடி 3வது முறையாக மீண்டும் பிரதமராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் சென்று சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் அவசர பயணமாக தற்போது டெல்லி விரைந்துள்ளார்.

அவரது டெல்லி பயணத்துக்குக் காரணம் இன்னும் தெரியவராத நிலையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி மாபெரும் வெற்றியை பெற்றதற்கு அதன் தலைவரும் தனது நண்பருமான தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக உள்ள சந்திரபாபு நாயுடுவுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளதற்கும் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளத்தற்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பீர்களா என்ற கேள்விக்கு, அதைக் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று ரஜினி தெரிவித்துள்ளார். 

 உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com