விஜய் சேதுபதியின் 50-வது படம் - மகாராஜா ரிலீஸ் அப்டேட்

இது தொடர்பாக போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது.இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.
விஜய் சேதுபதியின் 50-வது படம் - மகாராஜா ரிலீஸ் அப்டேட்
Published on

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் 50-வது திரைப்படம் "மகாராஜா." குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி கவனம் ஈர்த்தது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது. இந்த நிலையில், மகாராஜா திரைப்படம் ஜூன் 14 ஆம் தேதி ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டு உள்ளது.

மகாராஜா திரைப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

X

Maalai Malar
www.maalaimalar.com