என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • குறும்பு கலந்த நடிப்பினால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார்.
    • மீரா ஜாஸ்மின் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

    தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு திரை உலகில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் மீரா ஜாஸ்மின். விஷால் நடித்த சண்டைக்கோழி, மாதவனுடன் ரன் உள்பட பல தமிழ் படங்களில் குறும்பு கலந்த நடிப்பினால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார்.

    திருமணம் ஆனதும் சினிமாவில் இருந்து விலகி இருந்த மீரா ஜாஸ்மின் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கிறார். தமிழ், மலையாளம் மொழிகளில் புதிய படங்களில் நடித்து வரும் மீராஜாஸ்மின் தெலுங்கில் ஹசித்கோலி இயக்கத்தில் உருவாகும் ஸ்வாக் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.

    படத்தில் உத்பலா தேவி கதாபாத்திரத்தில் மீரா ஜாஸ்மின் நடிக்கும் புகைப்படத்தை படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர். 2013-ம் ஆண்டு மோஷா என்ற படத்தில் மீரா ஜாஸ்மின் நடித்தார். 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஸ்வாக் என்ற படத்தின் மூலம் மீராஜாஸ்மின் தெலுங்கு சினிமாவில் நடிக்க இருக்கிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விருந்தில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
    • விருந்து ஜூன் 1-ந் தேதி இத்தாலி போர்டோ பினாவில் நிறைவடைந்தது.

    உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி மற்றும் நீட்டா அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சென்ட் திருமணம் ஜூலை 12-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி திருமணத்திற்கு முன்னோட்ட நிகழ்ச்சிகள் குஜராத் ஜாம்ஷெட்பூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோலாகலமாக நடந்தது. இதில் இந்திய திரை உலகினர் அனைவருமே பங்கேற்றனர்.

    இந்நிலையில் திருமணத்தின் 2-வது முந்தைய விருந்து இத்தாலி, பிரான்ஸ் கப்பலில் வைத்து நடந்தது. இதில் திரை உலக பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். விருந்தில் பங்கேற்ற ஜான்விகபூர் அங்கு எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    விருந்து நிகழ்ச்சியில் ஜான்விகபூர் காதலன் ஷிகர் பகாரியாவுடன் நடந்து வருவது மற்றும் கடற்கரை அழகை ரசிப்பது என அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    மே 29-ந் தேதி 800 விருந்தினர்கள் இத்தாலியில் இருந்து பிரான்சின் தெற்கே 4380 கிலோ மீட்டர் தூரம் சென்று விருந்து நிகழ்ச்சியை கொண்டாடினர். மே 29-ந் தேதி தொடங்கிய விருந்து ஜூன் 1-ந் தேதி இத்தாலி போர்டோ பினாவில் நிறைவடைந்தது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சொப்பனசுந்தரியை இப்போ யாரு வெச்சிருக்கா?" இதை எல்லாவற்றையும் விட, "பிரேம்ஜிக்கு கல்யாணம் எப்போ?" என்ற உங்கள் கேள்விக்குப் பதில் கிடைத்துள்ளது.
    • குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், பிரேம்ஜி தான் விரும்பும் பெண்ணை, அம்மாவின் ஆசிர்வாதத்துடன் கரம் பிடிக்கிறார்.

    தமிழ் சினிமாவின் பன்முக திறமையாளர்களில் ஒருவரான கங்கை அமரனுக்கு வெங்கட் பிரபு, பிரேம்ஜி என இரு மகன்கள் உள்ளனர். இவர்களில் வெங்கட் பிரபுவுக்கு திருமணமாகி விட்ட நிலையில் அவர் சினிமாவில் பிரபலமான இயக்குநராக வலம் வருகிறார்.

    அதேசமயம் பிரேம்ஜியும் நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பல திறமைகளை கொண்டு திரையுலகில் இயங்கி வருகிறார். 45 வயதாகும் பிரேம்ஜி இதுவரை திருமணம் செய்துக் கொள்ளவில்லை. இவரது திருமணம் குறித்து ரசிகர்கள் அடிக்கடி கேள்வி எழுப்புவது உண்டு.

    இந்நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அவரது அண்ணனான வெங்கட்பிரபு எக்ஸ் தளத்தில் பிரேம்ஜியின் திருமணம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது, இத்தனை வருடங்களாக என் குடும்பத்தாருக்கும் எனக்கும் ஆதரவையும், அளவில்லாத அன்பையும் வழங்கிய இரசிகர்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் வணக்கம்.

    எங்கள் குடும்பத்தில் பல வருடங்கள் கழித்து ஒரு நல்ல நிகழ்வு நடக்க இருக்கிறது. "பாகுபலியைக் கட்டப்பா ஏன் கொன்றார்?" "சொப்பனசுந்தரியை இப்போ யாரு வெச்சிருக்கா?" இதை எல்லாவற்றையும் விட, "பிரேம்ஜிக்கு கல்யாணம் எப்போ?" என்ற உங்கள் கேள்விக்குப் பதில், வரும் 9-ம் தேதி சிறிய அளவில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், பிரேம்ஜி தான் விரும்பும் பெண்ணை, அம்மாவின் ஆசிர்வாதத்துடன் கரம் பிடிக்கிறார். அம்மா வெகுவாக எதிர்பார்த்த இந்த திருமணத்தை நெருங்கிய உறவுகளுடனும், நண்பர்களுடனும் எளிய முறையில் நடத்த விரும்புகிறோம். இது தெரியாமல் நண்பர் ஒருவர் திருமணப் பத்திரிக்கையை பொதுவெளியில் பகிர்ந்துவிட்டார். எப்படி கல்யாணப் பத்திரிக்கை வைரல் ஆனதோ, அதேபோல் மணமகள்

    மீடியாவைச் சேர்ந்தவர் என்றும் புகைப்படங்கள் உலவுகின்றன. மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் இல்லை. திருமணம் முடிந்தவுடன் புகைப்படங்களைப் பகிர்கிறேன். எங்களுடைய பிரைவசியை மதித்து இருந்த இடத்தில் இருந்தே மணமக்களை வாழ்த்தி

    அதையும் வைரலாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உறுதியாக திருமண வரவேற்பில்

    அனைவரையும் சந்திப்போம்.

    BTW, THE GOAT அப்டேட் விரைவில்...

    இப்படிக்கு, பாசத்துடன்... உங்கள் VP

    இவ்வாறு கூறியிருந்தார்.

    • ரசிகர்களுடன் ஷ்ரத்தாகபூர் சமூக வலைதளத்தில் கலந்துரையாடினார்.
    • ரசிகர்கள் வலைதளத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

    2019-ம் ஆண்டு வெளியான 'சாஹோ' என்ற படத்தில் பிரபாசுடன் ஜோடியாக நடித்தவர் பிரபல நடிகை ஷ்ரத்தா கபூர். ஆக்ஷன், திரில்லர் படமான இந்த படத்தில் பிரபாஸ்-ஷ்ரத்தா கபூர் ஜோடி ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பை பெற்றது.

    இதைத்தொடர்ந்து இருவரும் மீண்டும் இணைந்து நடிப்பார்களா? என்ற எதிர்பாப்பு ரசிகர்களிடயே நிலவியது.

    இந்நிலையில் ரசிகர்களுடன் ஷ்ரத்தாகபூர் சமூக வலைதளத்தில் கலந்துரையாடினார். உரையாடலின் போது பிரபாசுடன் மீண்டும் இணைந்து நடிப்பீர்களா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஷ்ரத்தா, "பிரபாஸ் தனது வீட்டில் சமைத்த உணவை எனக்கு அனுப்பும்போது அதை பரிசீலிப்பேன்" என நகைச்சுவையாக பதிலளித்தார்.

    ஷ்ரத்தாவின் நகைச்சுவையான வேண்டுகோள் உண்மையில் நடைபெறுமா? என ரசிகர்கள் வலைதளத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் மும்முரமாக நடந்து வருகிறது.
    • கிட்டத்தட்ட பவன் கல்யாண் பிதாபுரம் தொகுதியில் வெற்றியை உறுதி செய்துள்ளார்.

    இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் மும்முரமாக நடந்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு தொகுதிகளில் பா.ஜ.க.வின் என்.டி.ஏ. கூட்டணி முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கடந்த தேர்தலில் பெற்றதை விட கூடுதல் தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

    ஆந்திராவில் ஜன சேனா கட்சியை தொடங்கியவர் நடிகர் பவன் கல்யாண், இவர் இந்த சட்டமன்ற தேர்தலில் பிதாபுரம் தொகுதியில் போடியிட்டார். அதே தொகுதியில் ஜெகன் மோகன் ரெட்டி கட்சி சார்பாக வங்கா கீதா விஸ்வனாதம் போட்டியிட்டார்.

    தற்போதைய நிலையில் பவன் கல்யாண் 80,161 வாக்குகளை பெற்றுள்ளார். வாங்கா கீதாவை விட 44,790 வாக்கு வித்தியாச்சத்தில் முன்னிலையில் உள்ளார். கிட்டத்தட்ட பவன் கல்யாண் பிதாபுரம் தொகுதியில் வெற்றியை உறுதி செய்துள்ளார்.

    இதை கொண்டாடும் வகையில் பவன் கல்யாண் தற்பொழுது நடிக்கவிருக்கும் தே கால் ஹிம் ஓஜி (They Call Him OG) திரைப்படம் சார்பாக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இந்த போஸ்டரில் நெருப்பு பற்றி எரியும் சாரில் பவன் கல்யாண் மிக ஸ்டைலாக உட்கார்ந்து இருப்பது போல் காட்சி அமைந்துள்ளது. இந்த போஸ்டர் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கல்யாணம் முதல் காதல் வரை என்ற சின்னத்திரையில் நடிகையாக திரை வாழ்க்கையை ஆரம்பித்து தற்போது வெள்ளித்திரையில் பிரபல நடிகையாக மாறியுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.
    • சமீபத்தில் ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்த ரத்னம் திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

    கல்யாணம் முதல் காதல் வரை என்ற சின்னத்திரையில் நடிகையாக திரை வாழ்க்கையை ஆரம்பித்து தற்போது வெள்ளித்திரையில் பிரபல நடிகையாக மாறியுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர். சின்ன திரையில் இருந்து வெளிவந்து வெள்ளி திரையில் இவர் நடித்த முதல் திரைப்படம் மேயாத மான். இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அதன் பின்னர் கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார்.

    அதைத்தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகினார் பிரியா பவானி சங்கர். மான்ஸ்டர், களத்தில் சந்திப்போம், குருதி ஆட்டம் போன்ற படங்களில் நடித்தார்.

    இத்திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து  பிரியா பவானி சங்கர் பல படங்களில் கமிட்டாகி வருகிறார். தமிழில் சிம்பு, தனுஷ், விஷால் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடிக்கிறார். தமிழ் மட்டுமன்றி தற்போது தெலுங்கிலும் பிரியா பவானி சங்கர் ஆர்வம் செலுத்தி வருகிறார்.  இதனிடையே தமிழில், இந்தியன் 2, டிமான்டி காலனி, மழை பிடிக்காத மனிதன் ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

    சமீபத்தில் ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்த ரத்னம் திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார்.

     

    இதனிடையே அவர் தனது கல்லூரி காலத்திலிருந்து காதலித்து வரும் ரத்னவேலு என்பவருடன் அவ்வப்போது புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார். தற்பொழுது அவருடன் ஜாலியாக ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுலா சென்றிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வௌியாகி வைரலாகி வருகின்றன.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த கனா, டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றன.
    • கமலக்கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார் இதற்கு முன் இவர் 'வட்டம்' மற்றும் 'மதுபான கடை' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

    சிவகார்த்திகேயன் தற்பொழுது அமரன் மற்றும் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் SK23 திரைப்படத்திலும் நடித்து வருகிறார். நடிப்பது மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் கீழ் பல வெற்றி படங்களை தயாரித்தும் வருகிறார்.

    சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த கனா, டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றன. தற்போது சூரி நடிக்கும் கொட்டுக்காளி என்ற படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து வருகிறார். இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டை பெற்றுள்ளது. விரைவில் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதைதொடர்ந்து 'குரங்கு பெடல்' படத்தை அடுத்து எஸ் கே ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது. கமலக்கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார் இதற்கு முன் இவர் 'வட்டம்' மற்றும் 'மதுபான கடை' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

    காளி வெங்கட் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ராசி அழகப்பன் எழுதிய சிறுக்கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. சைக்கிள் ஓட்ட தெரியாத அப்பாவுக்கும் எப்படியாவது சைக்கிள் ஓட்டியே ஆகவேண்டும் என்று துடிக்கும் மகனுக்கும் இடையே ஆன போராட்டத்தை மிகவும் நகைச்சுவையான கதைக்களத்துடன் உருவாக்கியுள்ளனர் . கிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் கடந்த மே மாதம் 3 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    இப்படம் தற்பொழுது ஓடிடி-யில் வெளியாகவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இப்படம் வரும் ஜூன் 7 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'பயமறியா பிரம்மை'. அறிமுக இயக்குனர் ராகுல் கபாலி இயக்கியுள்ளார்.
    • இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'பயமறியா பிரம்மை'. அறிமுக இயக்குனர் ராகுல் கபாலி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில், குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், விஸ்வந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு கே இசையமைத்திருக்கிறார். அகில் பிரகாஷ் படத்தொகுப்பு செய்கிறார்.

    இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குனரும், தயாரிப்பாளருமான பா.ரஞ்சித் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.\

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகைகள் தொடர்ந்து எதிர்ப்பு குரல் எழுப்பி வருகிறார்கள்.
    • ராஷிகன்னாவும் சம்பள பாகுபாட்டை கண்டித்துள்ளார்.

    சினிமாவில் கதாநாயகர்களுக்கு அதிக சம்பளமும், தங்களுக்கு குறைவான சம்பளமும் கொடுப்பதாக நடிகைகள் தொடர்ந்து எதிர்ப்பு குரல் எழுப்பி வருகிறார்கள்.

    நடிகைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் படங்கள் வெற்றி பெறுவதால் அவர்களுக்கும், கதாநாயகர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் தமிழில் 'இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, திருச்சிற்றம்பலம், அரண்மனை 4' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராஷிகன்னாவும் சம்பள பாகுபாட்டை கண்டித்துள்ளார்.

    அவர் கூறும் ''சினிமாவில் சம்பள விஷயத்தில் நிறைய பாகுபாடுகள் உள்ளன. காலம் மாறும்போது அதிலும் மாற்றம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது'' என்றார்.

    மேலும் ராஷிகன்னா கூறும்போது, ''பேய் படங்களில் நடிப்பது சுலபம். ஆனால் இயக்குவது கஷ்டம். நான் தமிழில் ஏற்கனவே நடித்த 'திருச்சிற்றம்பலம், சர்தார்' ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. இப்போது 'அரண்மனை 4' படமும் வெற்றியை சாதித்துள்ளது. இது மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு இந்தி தெரியும். இப்போது தமிழ், தெலுங்கு மொழிகளையும் புரிந்து கொண்டு என்னால் பேச முடிகிறது'' என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தற்போது சித்தார்த்தும், அதிதிராவும் இத்தாலி சென்றுள்ளனர்.
    • பொருத்தமான ஜோடி என்று பதிவுகள் வெளியிட்டு பாராட்டி வருகிறார்கள்.

    நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதிராவ் ஹைதரியும் காதலித்து வந்தனர். சமீபத்தில் இருவருக்கும் ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. ஆனாலும் சில புகைப்படங்கள் கசிந்து திருமணம் முடிந்துவிட்டதாக பலரும் பேசினர். திருமணம் நடக்கவில்லை, நிச்சயதார்த்தம் நடந்துள்ளது என்று இருவரும் விளக்கம் அளித்தனர்.

    தற்போது சித்தார்த்தும், அதிதிராவும் இத்தாலி சென்றுள்ளனர். அங்கு பல்வேறு அழகான இடங்களை இருவரும் சுற்றிப்பார்த்தனர். இயற்கை அழகை ரசித்தனர். அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்திலும் பகிர்ந்துள்ளனர். அவை வைரலாகிறது.

    இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இருவரும் பொருத்தமான ஜோடி என்று பதிவுகள் வெளியிட்டு பாராட்டி வருகிறார்கள்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2012 ஆம் ஆண்டு `ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்’ திரைப்படத்தின் மூலம் இந்தி சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகினார்.
    • ஜனவரி 24 ஆம் தேதி 2021 ஆம் ஆண்டில் அவரது தோழி மற்றும் காதலியான நடாஷா தலாலை திருமணம் செய்துக்கொண்டார்.

    இந்தி திரையுலகில் அதிகமான சம்பளம் வாங்க கூடிய நடிகர்களுள் வருண் தவானும் ஒருவர். 2012 ஆம் ஆண்டில் இருந்து 2018 ஆண்டு வரை தொடர் வெற்றி படங்களைக் கொடுத்து மக்கள் மனதில் பதிந்தார். இவர் பிரபல இந்தி இயக்குனர் டேவிட் தவானின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

    2010 ஆம் ஆண்டு இயக்குனர் கரன் ஜோஹருக்கு உதவி இயக்குனராக பணிப் புரிந்தார். 2012 ஆம் ஆண்டு `ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்' திரைப்படத்தின் மூலம் இந்தி சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகினார். பல வெற்றி படங்களில் நடித்த வருண் தவான் ஜனவரி 24 ஆம் தேதி 2021 ஆம் ஆண்டில் அவரது தோழி மற்றும் காதலியான நடாஷா தலாலை திருமணம் செய்துக்கொண்டார்.

    கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி வருண் தவான் அப்பா ஆக போகிறார் என்ற செய்தியை இணையத்தில் பதிவிட்டார் . நேற்று வருண் தவான் மற்றும் நடாஷா தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    வருண் தற்பொழுது அட்லி இயக்கத்தில் தமிழில் வெளிவந்த தெறி திரைப்படத்தின் ரீமேக்கான பேபி ஜான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • ரிலையன்ஸ் குழும தலைவரும், ஆசியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்டிற்கும் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.
    • ஆனந்த் அம்பானியின் இரண்டாவது ப்ரீ வெட்டிங் ஈவண்ட் கடந்த சில நாட்களுக்கு முன் இத்தாலியில் இருந்து தெற்கே செல்லும் சொகுசு கிருயூஸ் கப்பலில் கோலாகலமாக நடந்தது.

    ரிலையன்ஸ் குழும தலைவரும், ஆசியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்டிற்கும் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. அம்பானி வீட்டு திருமண கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த மார்ச் மாதம் அனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி குஜராத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

    ஆனந்த் அம்பானியின் இரண்டாவது ப்ரீ வெட்டிங் ஈவண்ட் கடந்த சில நாட்களுக்கு முன் இத்தாலியில் இருந்து தெற்கே செல்லும் சொகுசு கிருயூஸ் கப்பலில் கோலாகலமாக நடந்தது. இந்த விழாவில் ஏராளமான திரைப்பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்துக் கொண்டனர். ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் இரண்டாவது ப்ரீ வெட்டிங் இத்தாலிய கடலோர கிராமமான போர்டோபினோவில் [Portofino] நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் ஆனந்த் அம்பானியின் விழாவில் கலந்துக்கொண்ட அட்லி மற்றும் சல்மான் கானின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது. இயக்குனர் அட்லி, ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் ஈவண்டிற்கு ஃப்ரான்ஸ் செல்வதற்காக மும்பை ஏர்போர்டில் சில நாட்களுக்கு முன் வந்தார். அப்பொழுது அவரை தொடர்ந்து சல்மான் கானும் அவரது காரில் ஏர்போர்டிற்கு வந்தடைந்தார். அங்கிருந்த செக்கியூரிட்டி கார்டுகள் சல்மான் கான் முதலில் செல்ல வேண்டும் என இயக்குனர் அட்லியை காக்க வைத்தனர்.

    ஆனால் சல்மான் கான் , அட்லியை பார்த்து சிரித்துவிட்டு ஏர்போர்ட் செக்யூரிடிடம் அவர் என்னோடு தான் வருகிறார் என்று கூறி அட்லியை முன்னாடி செல்லும்படி கை அசைக்கிறார். அட்லி சிரித்துக் கொண்டே உள்ளே செல்கிறார். இந்த வீடியோ தற்பொழுது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சல்மான் கான் தற்பொழுது இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் `சிகாந்தர்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×