அட்லிக்காக சல்மான் கான் செய்த செயல் - வைரல் வீடியோ

ரிலையன்ஸ் குழும தலைவரும், ஆசியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்டிற்கும் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. ஆனந்த் அம்பானியின் இரண்டாவது ப்ரீ வெட்டிங் ஈவண்ட் கடந்த சில நாட்களுக்கு முன் இத்தாலியில் இருந்து தெற்கே செல்லும் சொகுசு கிருயூஸ் கப்பலில் கோலாகலமாக நடந்தது.
அட்லிக்காக சல்மான் கான் செய்த செயல் - வைரல் வீடியோ
Published on

ரிலையன்ஸ் குழும தலைவரும், ஆசியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்டிற்கும் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. அம்பானி வீட்டு திருமண கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த மார்ச் மாதம் அனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி குஜராத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

ஆனந்த் அம்பானியின் இரண்டாவது ப்ரீ வெட்டிங் ஈவண்ட் கடந்த சில நாட்களுக்கு முன் இத்தாலியில் இருந்து தெற்கே செல்லும் சொகுசு கிருயூஸ் கப்பலில் கோலாகலமாக நடந்தது. இந்த விழாவில் ஏராளமான திரைப்பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்துக் கொண்டனர். ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் இரண்டாவது ப்ரீ வெட்டிங் இத்தாலிய கடலோர கிராமமான போர்டோபினோவில் [Portofino] நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஆனந்த் அம்பானியின் விழாவில் கலந்துக்கொண்ட அட்லி மற்றும் சல்மான் கானின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது. இயக்குனர் அட்லி, ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் ஈவண்டிற்கு ஃப்ரான்ஸ் செல்வதற்காக மும்பை ஏர்போர்டில் சில நாட்களுக்கு முன் வந்தார். அப்பொழுது அவரை தொடர்ந்து சல்மான் கானும் அவரது காரில் ஏர்போர்டிற்கு வந்தடைந்தார். அங்கிருந்த செக்கியூரிட்டி கார்டுகள் சல்மான் கான் முதலில் செல்ல வேண்டும் என இயக்குனர் அட்லியை காக்க வைத்தனர்.

ஆனால் சல்மான் கான் , அட்லியை பார்த்து சிரித்துவிட்டு ஏர்போர்ட் செக்யூரிடிடம் அவர் என்னோடு தான் வருகிறார் என்று கூறி அட்லியை முன்னாடி செல்லும்படி கை அசைக்கிறார். அட்லி சிரித்துக் கொண்டே உள்ளே செல்கிறார். இந்த வீடியோ தற்பொழுது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சல்மான் கான் தற்பொழுது இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் `சிகாந்தர்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com