பிரபாஸ் வீட்டு உணவை அனுப்பினால் நடிக்க தயார்-ஷ்ரத்தா கபூர்

ரசிகர்களுடன் ஷ்ரத்தாகபூர் சமூக வலைதளத்தில் கலந்துரையாடினார். ரசிகர்கள் வலைதளத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
பிரபாஸ் வீட்டு உணவை அனுப்பினால் நடிக்க தயார்-ஷ்ரத்தா கபூர்
Published on

2019-ம் ஆண்டு வெளியான 'சாஹோ' என்ற படத்தில் பிரபாசுடன் ஜோடியாக நடித்தவர் பிரபல நடிகை ஷ்ரத்தா கபூர். ஆக்ஷன், திரில்லர் படமான இந்த படத்தில் பிரபாஸ்-ஷ்ரத்தா கபூர் ஜோடி ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து இருவரும் மீண்டும் இணைந்து நடிப்பார்களா? என்ற எதிர்பாப்பு ரசிகர்களிடயே நிலவியது.

இந்நிலையில் ரசிகர்களுடன் ஷ்ரத்தாகபூர் சமூக வலைதளத்தில் கலந்துரையாடினார். உரையாடலின் போது பிரபாசுடன் மீண்டும் இணைந்து நடிப்பீர்களா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஷ்ரத்தா, "பிரபாஸ் தனது வீட்டில் சமைத்த உணவை எனக்கு அனுப்பும்போது அதை பரிசீலிப்பேன்" என நகைச்சுவையாக பதிலளித்தார்.

ஷ்ரத்தாவின் நகைச்சுவையான வேண்டுகோள் உண்மையில் நடைபெறுமா? என ரசிகர்கள் வலைதளத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com